Published:Updated:
'இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்!

கடந்த 2006-ம் ஆண்டு, வடிவேலு கதாநாயகனாக நடித்து வசூலை வாரிக்கொட்டிய திரைப்படம், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி'. இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' தயாரித்தது. ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த சிம்புதேவன், இந்தப் படத்தை இயக்கினார். தற்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன்தான் இந்தப் பாகத்தின் இயக்குநர். எஸ் பிக்சர்ஸுடன் இணைந்து லைக்கா நிறுவனமும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

...