Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

அனுஷ்கா முதுகுவலி!

அஜித்துடன் 'என்னை அறிந்தால்’ படத்தில் நடித்துவரும் அனுஷ்காவுக்கு கடுமையான முதுகுவலி. ஏற்கெனவே இந்த முதுகுவலி அனுபவம் அஜித்துக்கு அதிகம் என்பதால் அனுஷ§க்கு அட்வைஸை அள்ளிவிடுகிறார். 'நீயே ரொம்ப உயரம், எதுக்கு ஹை ஹீல்ஸ் செருப்பு போடுறே... அப்புறம் முதுகுவலி வராம என்ன செய்யும்?’ என்று செல்லமாகக் கடிந்துகொண்டாராம், அஜித்.

மிஸ்டர் மியாவ்

தனுஷ் கால்ஷீட்!

கௌதம் கார்த்திக் நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கிவரும் 'வை ராஜா வை’ படத்தை எடிட்டிங்கில் பார்த்தார், தனுஷ். சில இடங்களில் திருத்தம் சொன்னவர், திடீரென 'நான் 10 நாள் கால்ஷீட் தர்றேன். எனக்கொரு கேரக்டர் ரெடி பண்ணு’ என்று சொல்லி ஆனந்தத்தில் மூழ்கடித்துவிட்டாராம்.

மோகன்லால் கால்வலி!

பாலா இயக்கிவரும் 'தாரை தப்பட்டை’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க இருந்தார் மோகன்லால். அவருடைய கால்ஷீட்டுக்காக வாரக் கணக்கில் காத்துக்கிடந்தனர். மோகன்லால் கால்வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தார். 'பரவாயில்லை, நீங்க ரெஸ்ட் எடுங்க. அடுத்த படத்துல சேர்ந்து வேலை பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டார் பாலா.

கரும்பு தினத்தில் கமல்!

'லிங்கா’வை ரஜினி தன் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதிக்குத் திட்டமிடுவதுபோல் கமலும் 'உத்தம வில்லன்’ படத்தைத் தனது பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி வெளியிட ஆசைப்பட்டார். குறுகிய கால அவகாசமே இருப்பதால் பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்து இருக்கிறாராம். 'பாபநாசம்’, 'விஸ்வரூபம் - 2’ படங்கள் கைவசம் இருந்தாலும் 'உத்தம வில்லன்’ படத்தைக் கரும்பு தினத்தில் வெளியிட, விரும்புகிறாராம் கமல்.

அடுத்த கட்டுரைக்கு