Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

அதிரடி ராஜா...

 சென்னை நட்சத்திர ஹோட்டல்களில் இளையராஜா பாடல்களை அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்தி வருகின்றனர். இதுகாறும் பொறுத்துப் பார்த்தவர் இப்போது, 'எனக்கு ராயல்டி தராமல் என் இசையை ஒலிபரப்பினால் அவர்களின்மேல் கடும் நடவடிக்கை எடுப்பேன்’ என்று அதிரடியாக அறிவித்து இருக்கிறார், இளையராஜா.  

மிஸ்டர் மியாவ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஹரியை கழற்றிவிட்ட சூர்யா...

வெங்கட் பிரபுவின் 'மாஸ்’ படத்துக்குப் பிறகு விக்ரம்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. அதற்கடுத்து, 'சிங்கம்-3’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்து இருந்தார். இப்போது ஹரிக்கு கொடுத்த தேதியை 'மெட்ராஸ்’ ரஞ்சித்துக்குக் கொடுத்து விட்டார். திடீர் கழட்டலால் கடுப்பில் சாமியாடிய ஹரி, இப்போது விக்ரமை வைத்து 'சாமி-2’ படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

1000 தியேட்டரில் 'லிங்கா’...

அண்மையில் கே.எஸ்.ரவிக்குமாரை சந்தித்தபோது, 'ரஜினி சார் பிறந்தநாள் தள்ளிப்போனா பொங்கலுக்கு 'லிங்கா’ ரிலீஸாகும்’ என்று சொன்னார். வெளிநாட்டில் மொத்தம் 1000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப் போகிறார்களாம். 'லிங்கா’வின் ஓவர்சீஸ் உரிமையை அருண்பாண்டியன் ப்ளஸ் சஞ்சய் வாத்வா வாங்கி விட்டார்களாம்  

தாணு, அட்லி, விஜய்...

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பதாக இருந்தது. இப்போது அந்தப் படத்தை 'கலைப்புலி’ தாணு தயாரிக்கிறார். அந்தப் படத்தின் டிஸ்கஷனுக்காக பங்களா ஒன்றை அட்லிக்கு அடையாறில் பிடித்துக்கொடுத்திருக்கிறார் தாணு. கடந்த ஆறாம் தேதி அதிகாலை நடந்த ஆபீஸ் பூஜையில் தாணு, விஜய், அட்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.        

ஆஸ்திரேலியாவில் கமல்...

கைவசம் இருக்கும் மூன்று படங்களுக்குப் பிறகு, 'திப்புசுல்தான்’ படத்தை தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் தயாரிக்கிறார் கமல். படத்துக்கு நாயகனும் இயக்குநரும் அவரே! முழுப்படத்தையும் வெளிநாட்டிலேயே முடிக்க திட்டமிட்டிருக்கிறாம். அதற்காக,  லொகேஷன் பார்க்க ஆஸ்திரேலியா பறக்கவிருக்கிறாராம் கமல்.