ஒரு வழியாக இன்டெர் ஸ்டெல்லார் படம் ரிலீஸாகி பலரை தியேட்டரின் பக்கம் ஈர்த்துள்ளது. தன் படங்களின் திரைக் கதை மூலம் பார்க்கும் ரசிகர்களின் மூளைக்குள் ரங்கராட்டினம் சுற்றவிடும் டைரக்டர் கிறிஸ்டோபர் நோலன் இந்தப் படத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்திருந்தாலும் வழக்கமான அவரின் டச் படத்தின் இரண்டாம் பாகத்தில் ரசிகர்களை சுற்றவிட்டு சுண்ணாம்பு அடிக்கிறது.

கதையைப் பற்றிச் சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். ஆனால் படம் பார்த்தபோதும் படம் பார்த்து வெளியே வந்தபோதும் கிடைத்த ரசிகர்களின் ரியாக்ஷனை வைத்தே நோலன் இன்னொரு படம் எடுக்கலாம். இதோ நான் கேட்ட இன்ஸ்டன்ட் விமர்சனங்கள் சில...

''டேய், இது படமா... படமாடான்னு தெரியாமதான் கேக்குறேன். ஃபர்ஸ்ட் ஆஃப் எத்தனை விஜயகாந்த் படத்துல பார்த்திருப்போம். அழுக்கா சஸ்பென்ஷன்ல இருக்கிற அவரை வரவெச்சு 'நீங்கதான் இந்த மிஷனுக்கு சரியானவர்’னு உசுப்பேத்தி விடுவாங்க. கேப்டனும் கண்ணு சிவக்கப் போய் கெட்ட சக்திகளை அழிப்பார். இந்தப் படத்துல நாசமாப்போன நாசாக்காரய்ங்க அந்தக் கருமத்தை கருந்துளைக்காகவும் வேற்று கிரகத்துக்காவும் பண்ணுறாய்ங்க. இந்தக் கதாநாயகனும் கருந் துளைக்குள்ள போய்ட்டு வர்றதுக்குள்ள பூமியில பல வருஷங்கள் ஓடிருது. அங்கே ஒருமணி நேரம்னா இங்கே 20 வருஷம்னு கணக்கு சொல்றாங்க. மகளுக்காக அத்தனை கஷ்டப்பட்டு பூமிக்கு வர ஆசைப்படுறார். ஆனா, இவர் வர்றதுக்குள்ள பொண்ணு கிழவி ஆகிடுது. பாவம் ஹீரோ, மீண்டும் மனசு வெறுத்து விண்வெளிக்கே போயிடுறார். ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாட்டு மட்டும் போட்டிருந்தா அப்படியே தங்க மீன்கள் பார்ட் 2 தான்டா.'

''காலேஜ்ல குவான்டம் பிசிக்ஸ் படிச்சிருந்தா இந்தப் படம் ஈஸியா புரிஞ்சிருக்கும். நானே அதை அரியர் வெச்சுத்தான் பாஸ் ஆனேன். இன்னொரு வாட்டி பார்த்தா அந்த செகண்ட் ஆஃப் தெளிவா புரிஞ்சிடும். அடுத்த வாரம் போறேன். நீ வர்றியா?'

''அதெப்பிடி மச்சான்... பால்வெளில பறந்து விழுற ஹீரோ இங்கே வீட்டோட நூலக அலமாரிக்கு வர்றான். கேட்கிறவன் கேனையனா இருந்தா கேட் வின்ஸ்லெட்டோட தங்கச்சிதான் கேத்ரின் தெரசான்னு சொல்லுவார் போல இந்த நோலன். செம போங்குடா.'

''இந்தப் படம் ஈஸியா புரிஞ்சிடுச்சுனா அது ஸ்பீல்பெர்க் படமா ஆகிடும். புரிஞ்சுக்க முயற்சி பண்றதுக்குதான் நோலனே படம் எடுக்கிறார். இன்னும் நாலுவாட்டி பார்த்தாதான் என்ன சொல்ல வர்றார்னு புரியும். தமிழ்ல டப்பிங் பண்ணி ரிலீஸ் பண்ணா நல்லா இருக்கும்.'

ஆர்.சரண்