Published:Updated:

வெற்றிகரமாக வெளியாகிறது புரியாத புதிர் - விஜய் சேதுபதியே அறிவித்தார்

வெற்றிகரமாக வெளியாகிறது புரியாத புதிர் - விஜய் சேதுபதியே அறிவித்தார்
வெற்றிகரமாக வெளியாகிறது புரியாத புதிர் - விஜய் சேதுபதியே அறிவித்தார்

வெற்றிகரமாக வெளியாகிறது புரியாத புதிர் - விஜய் சேதுபதியே அறிவித்தார்

கடந்த சில வருடங்களில் எந்தத் தமிழ்ப்படமும் சந்திக்காத அளவிற்கான பிரச்னைகளையும் தடைகளையும் தாண்டி ஒருவழியாக விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா நடிப்பிலும் அறிமுக இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி அவர்களின் இயக்கத்திலும் உருவாகியுள்ள 'புரியாத புதிர்' நாளை வெளியாகிறது. இதை நடிகர் விஜய் சேதுபதியே அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்தார். 

ஏற்கெனவே பல்வேறு தடைகளுக்கும், போராட்டங்களுக்கும் உள்ளாகி நாளை வெளியாக இருந்த நிலையில் இன்று மாலை சென்னை உரிமையியல் மன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது. தனது தொழிலாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த பல்வேறு வகையான தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறி தென்னிந்திய திரைப்படத்தொழிலாளர் கூட்டமைப்பின் (ஃபெப்சி) பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம் தடை கோரியிருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் படத்தை நாளை வெளியிடத் தடை விதித்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் சமரசத்தை அடுத்து படம் நாளை வெளியாகும் என்கிற உறுதியான தகவல் வெளியாகிவிட்டது. 

இன்று தனது 'கருப்பன்' படத்தின் டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி நாளை புரியாத புதிர் வெளியாகும் என்று அறிவித்திருந்தார். அப்படி அவர் தெரிவித்த சில மணி நேரங்களில் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது சமரசம் ஏற்பட்டுள்ளதால் படம் நாளை வெளியாகிறது.

அடுத்த கட்டுரைக்கு