Published:Updated:

பரோலில் வெளிவரும் நடிகர் திலீப்!

பரோலில் வெளிவரும் நடிகர் திலீப்!
பரோலில் வெளிவரும் நடிகர் திலீப்!

பரோலில் வெளிவரும் நடிகர் திலீப்!

மலையாள நடிகர் திலீப் சுமார் 50 நாட்களுக்கு மேலாக ஜெயிலில் இருந்து வருகிறார். நாளை ஓணம் பண்டிகை  கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆண்டுதோறும் ஓணம் அன்று நடிகர் திலீப்பின் புதிய படம் வெளியாகி அவரது ரசிகர்களை கொண்டாட வைக்கும். ஆனால் இந்த ஆண்டு திலீப் ஜெயிலில் இருக்கும் நிலை உருவாகி உள்ளது.

நடிகையின் கடத்தல் வழக்கில் திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனுக்கும் தொடர்பு உண்டு என்று தகவல் பரவுவதால் அவரும் கைது செய்யப்படலாம் என்கிற சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில் காவ்யா மாதவன், அவரது தந்தை மாதவன், திலீப்பின் மகள் மீனாட்சி ஆகியோர் ஆலுவா சிறையில் திலீப்பை சந்தித்து பேசினார்கள். சிறைக்கு சென்ற பின் திலீப்பை காவ்யா மாதவன் சந்திக்கும் முதல்  சந்திப்பு இது. இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடம் நடந்தது. தீலிப்பின் தந்தையின் நினைவுநாள் வருகிற 6-ம் தேதி வருகிறது.அதனால் தந்தையின் நினைவு நாள் சடங்குகளில் கலந்துக் கொள்ள பரோல் கேட்டு நடிகர் திலீப் சார்பில் அங்கமாலி கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட் வரும் 6-ம் தேதி  காலை 6 மணி முதல் 11 மணி வரை மொத்தம்  நான்கு மணி நேரம் திலீப்புக்கு பரோல் வழங்கி உள்ளது.வரும் 6-ம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் திலீப் தனது தந்தையின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு