Published:Updated:

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

ஷாலினி நியூட்டன்

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

ஷாலினி நியூட்டன்

Published:Updated:

மாஸ் லிங்கா!

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் டாக் ‘லிங்கா’. ‘எந்திரன்’ படத்துக்குப் பிறகு, கிட்டத்தட்ட
4 வருடங்களுக்குப் பின் ரஜினியை திரையில் பார்க்க இருப்பதால், படத்துக்கு பலமான எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. ‘கோச்சடையான்’ அனிமேஷன் படமாக அமைந்ததால், `லிங்கா' படத்தின் ரிலீஸ், பெரு விழாவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரெய்லர், பாடல் டீஸர்கள், இசை என அனைத்தும் இணையத்தில் வைரல் என பரவிக் கிடக்கிறது. பாடல்கள் ஐடியூனிலும் முதலிடத்தில் இருந்து வருகிறது. தற்போது இணைய டிரெண்டாகவும் மாறியுள்ளது ‘லிங்கா’. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் என கலக்கவிருக்கும் இந்தப் படம், டிசம்பர் 12-ல் ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாக உள்ளது.

சூப்பர் ஸ்டார்னா சும்மாவா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

மஞ்சு வாரியருக்கு விருது!

மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்து ஹிட் அடித்த படம் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’. கணவனால் உதாசீனப்படுத்தப்படும் ஒரு பெண், தாழ்வு மனப்பான்மையுடன், சுய வருமானமின்றி கஷ்டப்படு கிறாள். அதிலிருந்து மீள, சக பெண்களுடன் இணைந்து வீட்டு மொட்டைமாடிகளில் காய்கறித் தோட்டங்கள் வளர்த்து பொருளாதாரத்தில் உயர் கிறாள். பிறகு, தேசமே திரும்பிப் பார்க்கும்படி எப்படி புரட்சிகரமான பெண்ணாக மாறுகிறார் என்பதே படத்தின் கதை. பல உலக சினிமா திரு விழாக்களில் பிரபலமாகி வரும் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் நாயகி மஞ்சு வாரியருக்கு, சிறந்த

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

நடிகைக்கான ஏசியா விஷன் விருது கிடைத்துள்ளது. தற்போது இந்தப் படம் ஜோதிகா நடிக்க, தமிழில் ரீமேக் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஹவ் ஸ்வீட் ஆர் யூ மஞ்சு!

கோடிகளில் ஒரு திருமணம்!

பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு, தன் இளைய தங்கை அர்பிதா என்றால் கொள்ளைப் பிரியம். சமீபத்தில் நடந்த தங்கையின் திருமணத்தை திருவிழா போல் நடத்திய சல்மான், திருமணப் பரிசாக 16 கோடியில் ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பரிசாகக் கொடுத்துள்ளார். அர்பிதாவின் திருமணம் நடந்த மண்டபத்தின் ஒரு நாள் வாடகை மட்டும் 1 கோடியாம். மணப்பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு என 7 நாட்களுக்கு மண்டபம் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஷாருக், அமீர்கான், ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல முக்கிய மும்பை முகங்கள் பங்கேற்றனர். இதையெல்லாம்விட சந்தோஷமான ஒரு விஷயம், இந்த அர்பிதா, சல்மானின் உடன்பிறந்த சகோதரி இல்லை. மும்பையில் தாய் - தந்தையை இழந்த அர்பிதா, சல்மானின் அம்மாவால் தத்தெடுக்கப்பட்டவர். சாதாரண அர்பிதாவை அர்பிதா கான் ஆக்கி, லண்டனில் படிக்க வைத்து, இப்போது மும்பையின் பிசினஸ்மேனான ஆயுஷ் ஷர்மா என்பவருக்கு மணமுடித்து வைத்துள்ளனர்.

வாழ்த்துகள் அர்பிதா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism