Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:

சினிமாவுக்கு குட்பை...

மிஸ்டர் மியாவ்

இப்போது, அஜித்துடன் நடிக்கும் 'என்னை அறிந்தால்’ படத்துடன் தமிழ் சினிமாவுக்கு குட்பை சொல்லப் போகிறார், அனுஷ்கா. புதுப் படத்தில் நடிக்கத் தேடிவரும் வாய்ப்புகளைத் தவிர்த்து வருகிறார். தெலுங்கில் நடித்துவரும் 'பகுபாலி’க்குப் பிறகு அனுஷ்காவுக்கு டும்டும் நடக்கிறது. யோகா டீச்சரான அனுஷ், ஒபாமா பூமியில் வசிக்கும் தனது துளூ சமூகத் தொழிலதிபர் ஒருவரை மாப்பிள்ளையாக செலக்ட் செய்துவிட்டார். கல்யாணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் செட்டிலாகப் போகிறார், அனுஷ்கா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொல்கத்தா ரசகுல்லா...

மதுரை மீனாட்சி நாமத்தை கொல்கத்தா ரசகுல்லாவுக்குச் சூட்டினார்கள். பெயருக்கு தகுந்தாற்போல் 'கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தில் குடும்ப குத்துவிளக்கு தோற்றத்தில் வலம் வந்தார். அதன்பின் 'பெரிய்ய ரவுண்டு வருவேன்’ என்கிற கனவோடு கோலிவுட்டில் கும்மியடித்தார். பெரிதாக வாய்ப்பு இல்லை. மம்தா பானர்ஜி மண்ணுக்கு பேக்கப் ஆனார். இப்போது மீண்டும் அரிதாரம் பூசும் வெறியோடு சென்னை மண்ணில் டேரா போட்டு இருக்கிறார்.          

கதை கதையாம்... காரணமாம்!

'லிங்கா’ என்னுடைய கதை என்று முதலில் மதுரை ஜீவரத்தினம் வழக்கு தொடர்ந்தார். தள்ளுபடி ஆனது.  இப்போது, சென்னை சக்திவேல் வழக்குப் போட்டிருக்கிறார். என்னதான் நடக்கிறது? என்று 'லிங்கா’ கதாசிரியர் பொன்குமாரிடம் கேட்டோம்.

''அண்ணன் தங்கை பாசத்தைப் படமாக எடுப்பவர்கள் எல்லோருமே 'பாசமலர்’ படத்தை காப்பியடித்து இருக்கிறார்கள் என்று சொல்கிற மாதிரி இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே டேம் பற்றிய கதைதான் 'லிங்கா’ என்று மீடியாக்களில் வந்துவிட்டது. அப்போது சக்திவேல் என்ன செய்துகொண்டிருந்தார். இப்போது திடீரென ரிலீஸாகும் நேரத்தில், தவறான திட்டத்தோடு, குதர்க்கமான எண்ணத்தோடு வழக்கு தொடர்ந்திருக்கிறார், சக்திவேல். நான் 2010-ம் ஆண்டே முறைப்படி சங்கத்தில் பதிவு செய்த கதைக்கே இந்த கதி. 'லிங்கா’ சாதாரண பொழுதுபோக்கு படமில்லை. இந்த சமூகத்துக்கு நல்லதொரு செய்தியைச் சொல்லும் படம். பொதுவாக சினிமா விழாக்களில் கதாசிரியர்களை அவ்வளவாக கெளரவிக்க மாட்டார்கள். 'லிங்கா’ ஆடியோ விழாவில் என்னை ரஜினி சாரோடு மேடையில் வைத்து அழகு பார்த்தார் ரவிக்குமார் சார். அந்த அளவுக்கு என்னை கெளரவித்த இருவருக்கும் என் கதை சம்பந்தமாக வழக்கு தொடுப்பதால் அவர்களுக்கு தர்மசங்கடத்தை கொடுத்து விட்டேனே என்று மனம் கலங்குகிறது. என் மடியில் கனமில்லை. அதனால், வழியில் பயமில்லை. சக்திவேல் வழக்கை நேர்மையாக சந்தித்து ஜெயிப்பேன்.'' 

நோ  ரெஸ்பான்ஸ்...

சுந்தர்.சி ரூ.50 லட்சம் தருவதாகச் சொல்லி உங்களை ஏமாற்றி விட்டாரா? என்று 'ஆயிரம் ஜென்மங்கள்’ தயாரிப்பாளர் முத்துராமனிடம் விசாரித்தோம்.

''சிவாஜி, ஜெய்சங்கர், ரஜினி என்று பிரபலங்களை வைத்து 27 படங்கள் தயாரித்து இருக்கிறேன். 1978-ல் ரஜினி நடித்து வெளிவந்த 'ஆயிரம் ஜென்மங்கள்’ என் தயாரிப்பில் உருவானது. அந்தப் படத்தின் அப்பட்டமான காப்பிதான் 'அரண்மனை’. கடைசியாக எடுத்த 'மூடுமந்திரம்' தோல்வி அடைந்ததால் எனக்கு ஏகப்பட்ட நஷ்டம். இந்தச் சூழ்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு மீண்டும் 'ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தை டைரக்டர் செல்வா இயக்கத்தில் ரீமேக் செய்யும் வேலையில் இறங்கினேன். படத்தின் ஃபைனான்ஸ் தொடர்பாக அலைந்தபோது ஒரு ஃபைனான்ஷியர் 'உங்களோட 'ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தோட கதைதான் 'அரண்மனை’ என்று சொல்ல எனக்கு அதிர்ச்சி. உடனே கவுன்சிலில் புகார் செய்தேன்.  நோ  ரெஸ்பான்ஸ். அதனால் கோர்ட்டுக்குப் போனேன். 'அரண்மனை’ ரிலீஸ் ஆவதற்கு 15-நாட்களுக்கு முன்பு என்னையும், 'அரண்மனை’ தயாரிப்பாளர் கார்த்தியையும் கவுன்சிலுக்கு அழைத்தனர். நான் நஷ்டஈடு எவ்வளவு கேட்டாலும் தருகிறேன் என்றார் கார்த்தி. நான் ரூ.50 லட்சம் கேட்டேன்.  நான் சுந்தர்.சிக்கு நாலரைகோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இருக்கிறேன். அதனால் இருவரும் ஆளுக்குப் பாதி பணத்தைத் தருவதாக கார்த்தி சொன்னார். அதன்பின், திடீரென்று பல்டி அடித்து ரூ.10 லட்சம் மட்டும் தருவேன் என்றார். இப்போது சொன்ன பணத்தையும் தராமல் ஏமாற்றி விட்டார், கார்த்தி. நான் சுந்தர்.சியை சந்திக்கவே இல்லை. அவர் எனக்கு 50 லட்சம் தருவதாக பத்திரிகைகளில் வந்த செய்தி தவறானது.''