Published:Updated:

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் சிம்புவும் இணைந்தார்..!

கார்த்திக் துரைமகாராஜன்.சி
மணிரத்னத்தின் அடுத்த படத்தில் சிம்புவும் இணைந்தார்..!
மணிரத்னத்தின் அடுத்த படத்தில் சிம்புவும் இணைந்தார்..!

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் லீட் ரோலில் சிம்பு நடிக்கவுள்ளார். 

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் சிம்புவும் இணைந்தார்..!


மணிரத்னத்தின் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' படம் வெளியாகி பெரும் தோல்வியடைந்தது. இதனையடுத்து மணிரத்னத்தின் அடுத்த பட அறிவிப்பு வெளிவராமல் இருந்துவந்தது. இந்தநிலையில், மணிரத்னத்தின் அடுத்த படத்தில் நடிப்பவர்கள் பெயர்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் உள்ளது. அவருடைய அடுத்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, பகத்பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கொண்ட பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்திருந்தன. இந்தநிலையில், சிம்புவும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.  படத்தின் லீட் ரோலில் சிம்பு நடக்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பு சிம்புவின் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மணிரத்னம், சிம்பு, விஜய்சேதுபதி, பகத்பாசில், ஜோதிகா கூட்டணி ரசிகர்களிடையை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.