Published:Updated:

மார்க்சிஸ்ட் விழாவில் பங்கேற்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கமல்ஹாசன்!

மா.பாண்டியராஜன்
மார்க்சிஸ்ட் விழாவில் பங்கேற்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கமல்ஹாசன்!
மார்க்சிஸ்ட் விழாவில் பங்கேற்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கமல்ஹாசன்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், கோழிக்கோடில் வரும் 16-ம் தேதி மார்க்சிஸ்ட் விழா நடக்கவிருக்கிறது. இந்த விழாவுக்கு, நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார் எனச் செய்திகள் நேற்றிலிருந்து உலா வந்துக்கொண்டிருந்தன. அது சம்பந்தமான விழா அழைப்பிதழும் இணையத்தில் பரவிக்கொண்டிருக்கிறது.

ஆனால், ‘கேரள முதல்வர் நடத்தும் கோழிக்கோடு மார்க்சிஸ்ட் விழாவுக்கு நான் அழைக்கப்படவில்லை. அக்டோபர் மாதம் வரை சனிக்கிழமைகளில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பேன். அந்த விழா நல்லபடியாக நடக்க என்னுடைய வாழ்த்துகள்’ என ட்வீட் செய்து, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார், நடிகர் கமல்ஹாசன்.