Published:Updated:

“ஏ.ஆர்.ரஹ்மான் ‘சிரிச்சா போச்சு’ன்னு தனி ஃபோல்டரே வெச்சிருக்கார்!”  ‘அறம்’ அனுபவம் சொல்லும் பழனி பட்டாளம்

“ஏ.ஆர்.ரஹ்மான் ‘சிரிச்சா போச்சு’ன்னு தனி ஃபோல்டரே வெச்சிருக்கார்!”  ‘அறம்’ அனுபவம் சொல்லும் பழனி பட்டாளம்
“ஏ.ஆர்.ரஹ்மான் ‘சிரிச்சா போச்சு’ன்னு தனி ஃபோல்டரே வெச்சிருக்கார்!”  ‘அறம்’ அனுபவம் சொல்லும் பழனி பட்டாளம்

“ஏ.ஆர்.ரஹ்மான் ‘சிரிச்சா போச்சு’ன்னு தனி ஃபோல்டரே வெச்சிருக்கார்!”  ‘அறம்’ அனுபவம் சொல்லும் பழனி பட்டாளம்

' விஜய் டிவியின் 'அது இது எது' நிகழ்ச்சியில் வரும் ‘சிரிச்சா போச்சு’ சுற்று மிகப்பிரபலம். அதில் தன் மிமிக்ரி மூலம் கவனத்தை ஈர்த்த பழனி பட்டாளம், தற்போது, நயன்தாராவின் 'அறம்' படத்தில் நடித்து இருக்கிறார். ‘அது இது எது’ டு ‘அறம்’ அனுபவம் சொல்கிறார் பழனி பட்டாளம்.

“ ‘பழனி பட்டாளம்‘. இந்தப் பெயருக்கு ஏதாவது விசேஷ காரணம் உண்டா?”

'2011ல் நவீன், விக்னேஷ் கார்த்திக், கதிர், அசார் உள்பட 30 மிமிக்ரி கலைஞர்கள் இடைவிடாமல் 12 மணி நேரம் மிமிக்ரி செஞ்சு உலக சாதனை செஞ்சோம். அப்ப, ‘பழனியின் பலகுரல் பட்டாளம்’னு பேச ஆரம்பிச்சாங்க. பிறகு எங்க வெளியூர் நிகழ்ச்சிக்குப் போனாலும், ‘பழனியோட பட்டாளம்’னு பேச கடைசியா அதுவே என் பெயரா நிலைச்சிடுச்சு. ரைமிங்கா இருக்கேனு நானும் அப்படியே மெயின்டெயின் பண்ணிகிட்டேன்.”

“டிவிக்கு வருவதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அது இது எது வாய்ப்பு வந்தது எப்படி?”

”சென்னைதான் சொந்த ஊர். சின்ன வயசில இருந்தே ஓவியத்துல அதிக ஆர்வம். ஸ்கூல் படிக்கும்போது ஓவியப்போட்டியில் நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கேன். ஒருத்தரைப் பார்த்து அவங்களை அப்படியே வரைவேன். அதே நேரத்தில் மிமிக்ரியிலயும் ஆர்வம் இருந்துச்சு. ஃப்ரெண்ட்ஸ்ங்களைக் கூப்பிடும்போதே நடிகர்கள் வாய்ஸ்லதான் கூப்பிடுவேன். ஓர் ஓவியக் கூடத்தில வேலை செஞ்சுட்டு இருந்தேன். பிறகு மதுரவாயலில தனியா ஓவியக்கடை வெச்சிருந்தேன். இந்த டிஜிட்டல் உலகத்தில் ஓவியத்தொழில் டல் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு. அந்த  நேரத்துல என் நண்பர்கள் நாகராஜ், தனசேகர், லாரன்ஸ் மூணு பேரும் விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ ஆடிசனுக்குப் போகும்போது வேடிக்கை பார்க்க என்னையும் கூட்டி போனாங்க. அப்ப, ‘இவரும் மிமிக்ரி பன்னுவாரு’னு என் நண்பர்கள் சொல்ல, நானும் மிமிக்ரி பண்ணி அதுல தேர்வானேன். நான், ரோபோ சங்கர், மதுரை முத்து மூவரும் அந்த சீசன் அரை இறுதி வரை வந்தோம். ஆனால், என்னால குடும்பச் சூழல் காரணமா ஃபைனல்ல கலந்துக்க முடியாமல் போயிடுச்சு. பிறகு இரண்டு வருட இடைவெளி. அப்ப ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணிட்டு இருந்தேன். பிறகுதான் 'அது இது எது' நிகழ்ச்சியில் கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது. அதுக்கு அதன் இயக்குநர் தாம்சன் சார்தான் காரணம்.”

“உங்களோட டிவி நிகழ்ச்சிக்கு வீட்ல, நண்பர்கள் மத்தியில் என்ன ரெஸ்பான்ஸ்?”

'என் முதல் ஷோ டிவியில ஒளிபரப்பான மறுநாள், நான் வெளியில் போகும்போது என் பேரைச்சொல்லி கத்தினாங்க. ஒரு நாள் டிவியில வந்ததற்கே இப்படி பாராட்டுறாங்களேனு நினைச்சுகிட்டு இன்னும் அதிகமா உழைக்க ஆரம்பிச்சேன். ‘நல்லாயிருக்கு தொடர்ந்து பண்ணு’னு வீட்லயும் ஆதரவா பேசுனாங்க. அதுவும், ‘நீயா நானா’ கோபிநாத் அண்ணன் மாதிரி ஒரு ஷோவுல பண்ணியிருப்பேன். அதுவும் அவர் முன்னாலயே அதை பண்ணினேன். ‘அதை அவர் எப்படி எடுத்துப்பாரோ’னு பயந்தேன். ஆனால் அதை அவர் ரொம்ப என்ஜாய் பண்ணினார். ‘சூப்பரா இருந்துச்சு’னு பாராட்டினார். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்குப் போயிருக்கோம். அப்பல்லாம், ‘கோபி மாதிரி பேசுங்க’னு கேட்பாங்க. வாழ்க்கை சந்தோஷமா போயிட்டு இருக்கு.”

“ஒரு கான்செப்ட் ஸ்கிரிப்டாகி ஷோவா மாறுற அந்த ப்ராசஸ் பற்றி சொல்லுங்க?”

'‘ஒரு வாரத்துக்கு முன்னாடியே ‘அது இது எது’க்கான ஸ்கிரிப்ட் வந்துடும். அதை நாங்க யார்யார் என்னென்ன கேரக்டர்கள் பண்றோம்னு எங்களுக்குள் பிரிச்சுக்குவோம். பிறகு அதை இன்னும் காமெடியா எங்க லாங்குவேஜுக்கு மாத்துவோம். இப்படி ஒரு ஷோவுக்கு ரெடியாக ஒரு வாரம் தேவைப்படும. சமயங்கள்ல ஒரேநாள்ல மூணு எபிசோட்லாம் ஷூட் பண்ணியிருக்கோம். அதிலும் ஸ்பாட்ல டைமிங்க்கு ஏற்ற மாதிரி பேசும்போது இன்னும் காமெடியா இருக்கும். அதுதான் ஹைலைட்டான விஷயமும்கூட. ஒரு முறை நான், அமுதவாணன், ஜெயச்சந்திரன் மூணு பேரும் சேர்ந்து கான்செப்ட் பண்ணிட்டு இருந்தோம். அமுதவாணனுக்கு 'விநாயக் மகாதேவ்'ங்கிற பேரை சொல்ல வரலை. எவ்வளவோ சொல்லிக்கொடுத்தும், 'வினைத் மஹால்'னே சொல்லிட்டு இருந்தான். டேக்லயும் அப்படியே சொல்ல நடிச்சிட்டு இருக்கும்போதே சிரிச்சுட்டோம். இப்படி நிறைய காமெடிகள்.”

“உங்க நிகழ்ச்சிக்காக வந்த பாராட்டுகளில் மறக்க முடியாத பாராட்டுனா எதைச் சொல்லுவீங்க?”

“கோபிநாத் அண்ணன் மாதிரி நடிச்சதைப் பார்த்துட்டு நிறைய இயக்குநர்கள் பாராட்டினாங்க. தனுஷ் சார், 'என்னை தினமும் சிரிக்க வைக்கிறது இவங்கதான்'னு டிவிட்டர்ல எங்க பெயர்களைப் போட்டு பாராட்டினதை மறக்கவே முடியாது. ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் அசிஸ்டென்ட் ஒருநாள், ‘சார்  தன் லேப்டாப்ல உங்க ஷோவுக்குனு தனி ஃபோல்டரே வெச்சிருக்கார். அவருக்கு உங்க ஷோ ரொம்ப பிடிக்கும்'னு சொன்னார். அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. ரஹ்மான் சாரையும் தனுஷ் சாரையும் நேர்ல சந்திக்கணும்.”

“ 'அறம்' பட வாய்ப்பு எப்படி அமைந்தது?”

'அது இது எது பண்ணும்போதே நிறைய பட வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால் பல காரணங்களால் அந்த வாய்ப்புகளை என்னால் பயன்படுத்திக்க முடியலை. இந்த சமயத்துலதான் ‘அறம்’ இயக்குநர் கோபி நயினார் என்னைக் கூப்பிட்டார். அவரும் எங்கள் ஷோவை தொடர்ந்து பார்க்கிறவர். ‘அறம்’ படத்தின் கதையையும் என் கேரக்டரையும் பற்றி சொன்னார். ஆனால், அது சீரியஸான ரோல். முதலில் யோசித்தேன். 'நாகேஷ் சார் தன் முதல் படத்தில் சீரியஸான ரோல்லதான் நடிச்சார். யோசிக்காதீங்க. பண்ணுங்க'னு உற்சாகப்படுத்தினார். ‘நடிகன்னா எந்த ரோலிலும் நடிக்கணும். இப்படித்தான் நடிப்பேனு இருக்கக் கூடாது’னு முடிவு பண்ணி நானும் ஓகேனு சொல்லிட்டேன். டீசர்ல வரும், ‘ஸாரே ஜஹாங்சே அச்சா.. கேக்க வந்த எங்களை கன்னத்துல வச்சா..."ங்கிற டயலாக் ஸ்க்ரிப்ட்லயே இல்லை. கான்செப்ட்தான் சொன்னாங்க. அது, டேக் சமயத்தில் நானா சொன்ன டயலாக். அந்த ஷாட் முடிச்சவுடனே முழு யூனிட்டும் மனப்பூர்வமா பாராட்டினாங்க. '

“நயன்தாராவுடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க?’‘

‘அறம்’, சமூகப் பிரச்னைகளைப் பற்றி சொல்லும் படம். நயன்தாரா இதில் கலெக்டர். பரமக்குடியில் உச்சி வெயிலில் தொடர்ந்து 10 நாள் ஷூட் பண்ணாங்க. ஒரு நாளுக்கு 10 பேராவது மயக்கம் போட்டு விழுவாங்க. ஆனா, நயன்தாரா வெயிலா இருந்தாலும் விடியவிடிய எடுத்தாலும் அதே புத்துணர்ச்சியோட அசால்ட்டா நடிச்சாங்க. ஷாட் முடிச்சுட்டு வந்து நிறைய அட்வைஸ் பண்ணுவாங்க. இந்த டெடிகேஷன்தான் அவங்களை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கு.'’

அடுத்த கட்டுரைக்கு