Published:Updated:

''சீரியல்ல நடிக்கிறது ரொம்ப கஷ்டம் பாஸ்!'' - ’பூவே பூச்சூடவா’ ரேஷ்மா

மு.பார்த்தசாரதி
''சீரியல்ல நடிக்கிறது ரொம்ப கஷ்டம் பாஸ்!'' - ’பூவே பூச்சூடவா’ ரேஷ்மா
''சீரியல்ல நடிக்கிறது ரொம்ப கஷ்டம் பாஸ்!'' - ’பூவே பூச்சூடவா’ ரேஷ்மா

ப்போதும் துருதுருன்னு ஓடி ஆடிக்கிட்டு மனசுலப்பட்டதை வெளிப்படையாகப் பேசும் சக்தி இல்லீங்க, நிஜத்தில் நான் ஷை டைப்” - என பவ்யமாகப் பேசுகிறார் 'பூவே பூச்சூடவா' சீரியலில் சக்தியாக நடித்திருக்கும் ரேஷ்மா. 

“நான் பிறந்தது கேரளாவில். வளர்ந்ததெல்லாமே பெங்களூருவில். காலேஜ் படிக்கும்போது சென்னைக்கு வந்துட்டேன். ஃபேஷன் ஆர்வம் இருந்துச்சு. ஒரு மாடலிங் போட்டியில் கலந்துக்கிட்டு தோத்துட்டேன். ஆனால், அடுத்த முறை அதே போட்டியில் கலந்துக்கிட்டு ஜெயிச்சதும் எனக்குள்ளே நம்பிக்கை வந்துச்சு. எதையுமே முடியாதுன்னு நினைச்சு சும்மா இருந்துடக்கூடாது. ட்ரை பண்ணிட்டே இருக்கணும்னு அந்த வெற்றி எனக்குச் சொல்லிக்கொடுத்துச்சு. அடுத்தடுத்து சரியான வாய்ப்பு கிடைக்கலைன்னாலும், மனசைத் தளரவிடலை. சரி, கொஞ்ச நாள் கேரளாவுக்குப் போய் எம்.பி.ஏ படிக்கலாம்னு முடிவுப் பண்ணின நேரத்துல, ஜீ தமிழில் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில் கலந்துக்கும் வாய்ப்பு வந்துச்சு. 

'அடடா... இப்போ படிக்கப்போறதா... டான்ஸ் ஷோ போறதா’ன்னு கொஞ்சமே கொஞ்சம்தான் யோசிச்சேன். வர்ற வாய்ப்பை விடக்கூடாதுனு டான்ஸ் ஷோவைத் தேர்ந்தெடுத்தேன். அது முடிஞ்சு எம்.பி.ஏ படிக்கலாம்னு பிளான் பண்ணினேன். 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' ல நல்ல பேர் கிடைச்சது. அதுக்கப்பறம் வேற நிகழ்ச்சிக்கான சான்ஸ் கிடைக்கலை. சரி, படிக்கப்போவோம்னு லக்கேஜைத் தூக்கினப்போதான் ஒரு புது சான்ஸ். 'பூவே பூச்சூடவா' சீரியலுக்கு நடிக்க கூப்பிட்டாங்க. 'என்னடா இது, எம்.பி.ஏ கனவுக்கு வந்த சோதனைன்னு நினைச்சேன். ஆக்ட்டிங்கை விட்டுக்கொடுக்க முடியலை. ஏன்னா, அது என்னுடைய சின்ன வயசுக் கனவு. அதுக்காகதான் நான் மாடலிங் உள்ளேயே வந்தேன். அதனால், சான்ஸை கெட்டியா புடிச்சிக்கிட்டேன்'' என உற்சாகமாகப் பேசிய ரேஷ்மாவின் குரல், திடீரென ஜர்க் அடித்தது. 

“அது ஒண்ணுமில்லே பாஸ்! வெளியிலிருந்து பார்க்கும்போது சீரியல் ரொம்ப ஜாலியா இருந்தது. ஆனா, உள்ளே வந்த பிறகுதான் தெரியுது, எவ்வளவு விட்டுக்கொடுத்து போகவேண்டியிருக்குன்னு. டான்ஸ் ஷோ பண்ணும்போதுகூட இவ்வளவு கஷ்டப்பட்டதில்ல தெரியுமா? நேரத்துக்குத் தூங்கவே முடியலை. சரியான சாப்பாடும் இல்லை. அந்த அளவுக்கு வொர்க். ஆனாலும், எனக்குக் கிடைச்சிருக்கும் டீம், கடவுள் கொடுத்த கிஃப்ட்டுன்னு சொல்வேன். எங்க டீமிலேயே நான்தான் செல்லக் குழந்தை. யார்கிட்டயும் இதுவரை திட்டு வாங்கினதில்லே” என்ற ரேஷ்மா, பூவே பூச்சூடவா டீம் பற்றி பகிர்ந்துகொள்கிறார். 

''அப்பா, அம்மா, அக்கா தங்கைகளோடு ஜாலியா ரகளை அடிக்கும் குடும்பம். சீரியலில் நீங்க பார்க்கிற மாதிரியே நிஜத்திலும் ஷூட்டிங் ஸ்பாட்ல குடும்பமா, கலகலப்பா இருப்போம். எல்லாரும் சேர்ந்து டான்ஸ் ஆடி அரட்டை அடிப்போம். நான் நல்லா பென்சில் ஸ்கெட்ச் வரைவேன். ஃப்ரீ டைமில் ஒரு பென்சிலும் பேப்பரும் இருந்தால், வரைய உட்கார்ந்துடுவேன். எனக்கு நானே டப்பிங் கொடுத்துக்கிறேன். சீரியலைப் பொருத்தவரை, ஒரு சிலரை தவிர மத்தவங்க யாருமே அவங்களுக்கு டப்பிங் கொடுக்கிறதில்லை. நடிச்சுக்கிட்டே டப்பிங் கொடுக்க நேரம் இருக்காது. ஆனாலும், நான் டப்பிங்கை விரும்பிச் செய்யறேன். ஸ்பாட்ல டயலாக் சரியாகப் பேசாமல் உளறிட்டாலும் டப்பிங்கில் சரி செஞ்சுக்கிறேன்” என கெத்தாக சொல்கிறார் ரேஷ்மா. 

''அதெல்லாம் சரி, எப்போ எம்.பி.ஏ முடிக்கப்போறீங்க?'' என்று கேட்டதற்கு, “ஞாபகப்படுத்திட்டீங்களா? டீமிலும் இதைச் சொல்லித்தான் கிண்டல் பண்றாங்க. நீங்க வேணா பாருங்க... சீக்கிரமே எம்.பி.ஏ படிக்கிறேன். பாஸ் பண்றேன்” எனச் சவால் விடுகிறார் ரேஷ்மா.