Published:Updated:

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் 'பிக் பாஸ்' ஓவியா!

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் 'பிக் பாஸ்' ஓவியா!
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் 'பிக் பாஸ்' ஓவியா!

'பிக் பாஸ்' இன்னும் சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை அடையவிருக்கிறது. தமிழக மக்களை அடிக்கடி உச்சரிக்க வைத்த வார்த்தை சமீபத்திய வார்த்தை 'பிக் பாஸ்'. பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அனைவரையும் ஒருசேர ஈர்க்க வைத்த பெயர் ஓவியா. 


நடிகை ஓவியா 'பிக் பாஸ்' ஓவியாவாகி, ஓவியா ஆர்மியாகிவிட்டார். இன்னும் அவருடைய ரசிர்களின் ஃபேன் பேஜ் ட்விட்டர், ஃபேஸ்புக் என இயங்கிக்கொண்டிருக்கிறது. ஓவியா 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு, தன் வேலைகளில் பிசியாவிட்டார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சி எப்படியாவது ஓவியா திரும்பி வருவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அது நடக்காமலே போய்விட்டது. இந்நிலையில், தற்போது, ரசிகர்களுடன் பேசத் தயாராக இருப்பதாகப் பதிவிட்டிருக்கிறார்.

ட்விட்டரில் என்னுடன் கலந்துரையாட நிறைய பேர் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். எனக்கும் உரையாட ஆசையாகத்தான் இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாள்களைக் கடந்தபின் நம் கலந்துரையாடலை வைத்துக்கொள்வோம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.