Published:Updated:

“லேடி கெட்டப்... நாயின் நண்பன்... வில்லன்..!” - வித்தியாசமாக களமிறங்கும் நடிகர் பரத்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“லேடி கெட்டப்... நாயின் நண்பன்... வில்லன்..!” - வித்தியாசமாக களமிறங்கும் நடிகர் பரத்
“லேடி கெட்டப்... நாயின் நண்பன்... வில்லன்..!” - வித்தியாசமாக களமிறங்கும் நடிகர் பரத்

“லேடி கெட்டப்... நாயின் நண்பன்... வில்லன்..!” - வித்தியாசமாக களமிறங்கும் நடிகர் பரத்

2017-ம் ஆண்டு நடிகர் பரத்துக்கு சிறப்பான ஆண்டு என்றே சொல்லலாம். ‘என்னோடு விளையாடு’, ‘கடுகு’ படங்கள் இதுவரை ரிலீஸான நிலையில், ஸ்பைடர், சிம்பா, பொட்டு, கடைசி பெஞ்ச் கார்த்தி என பல படங்கள் ரிலீஸுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன. தனக்கான லைம்லைட்டை மீண்டும் பிடித்திருக்கும் பரத்துடன் ஒரு பேட்டி...

“எல்லா வருடத்திலும் என்னுடைய படங்கள் ரிலீஸாகி வெற்றி பெற வேண்டும் என்றுதான் உழைக்கிறேன். சில வருடங்கள் நம்ம நினைக்கும் சில படங்கள் வெளியே வராமல் போய்விடும். இந்த வருடம் ரொம்ப பாஸிட்டிவ்வா 'ஸ்பைடர்', 'பொட்டு', 'சிம்பா' உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகின்றன. இதில் 'பொட்டு' திரைப்படம் இதுவரை நான் பண்ணாத ஒரு ஜானர். பெண் வேடமிட்டு இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். ‘சிம்பா' வித்தியாசமான படம். தமிழ் சினிமாவுக்கு ரெகுலராக இருக்கும் எந்த ஒரு வரையறையும் 'சிம்பா'வுக்கு இருக்காது. ஒரு புதுமுயற்சியை இந்தப் படத்தில் செய்திருக்கிறேன். ஒரு மனிதனுக்கும், நாய்க்கும் நடக்கும் உரையாடல்தான் 'சிம்பா'. ஒரு நாய் பேசினால் எப்படியிருக்கும் அப்படிங்குறதுதான் கதை. நாயின் நண்பனாக நான் நடித்திருக்கிறேன். இதில் காமெடி சேர்த்து, இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி படம் பண்ணியிருக்கோம். எங்களுக்கே இந்தப் படம் ஒரு பெரிய அனுபவமாகதான் இருந்தது.’’

ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடிக்கிறீர்களா..?

“முருகதாஸ் கம்பெனியிலிருந்து அழைப்பு வந்தது. போனேன். முழுக் கதையையும் சொன்ன முருகதாஸ் சார், 'இந்தக் கதாபாத்திரத்தை முகம் தெரிந்த ஒரு ஹீரோ செய்தால் நன்றாகயிருக்கும். நீங்கள் செய்கிறீர்களா?' என்றார். அந்த கேரக்டரின் முக்கியத்துவம் தெரிந்தது. அதனால்  ஓகே சொல்லிவிட்டேன். தவிர, நான் முருகதாஸின் மிகப்பெரிய ரசிகன். அவருடன் பணியாற்றும்போது நல்ல அனுபவம் கிடைக்கும் என்பதால் ஒப்புக்கொண்டேன். படத்தின் திருப்புமுனையே என்னால்தான் ஏற்படும். படம் பார்க்கும்போது என் கேரக்டர் எல்லோருக்கும் பிடிக்கும். என் கேரக்டர் பற்றி இதற்குமேல் பேச முடியாது.’’

மகேஷ் பாபுவோடு நடித்த அனுபவம்..?

“என்னுடைய பல படங்கள் தெலுங்கில் டப் ஆகியிருக்கின்றன. அதனால், என்னை தெலுங்கு ரசிகர்களுக்கும் தெரியும். மகேஷ் பாபுவுக்கு ஆந்திரா முழுவதும் ரசிகர்கள் அதிகம். அவருடைய படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களையும் தெலுங்கு ரசிகர்கள் கவனிப்பார்கள். அதனால், நானும் கவனிக்கப்படுவேன் என்பதும் இதில் நடிக்க ஒரு காரணம். 

இதில் மகேஷுடன் நடித்தது நல்ல அனுபவம். தமிழில் விஜய் எப்படியோ, அப்படித்தான் ஆந்திராவில் மகேஷ்பாபு. விஜய் போலவே அவரும் அமைதியாகவே இருப்பார். எல்லோரையும் மதிப்பார். எளிமையாகப் பழகுவார். 'ஸ்பைடர்' படத்தில் கடைசியாகச் சேர்ந்த நடிகர் என்றால் அது நான்தான். மகேஷ் நன்றாகவே தமிழ் பேசுகிறார். அதனால் அவருடன் நடிக்க எளிதாக இருந்தது.  எஸ்.ஜே.சூர்யா ஏற்கெனவே மகேஷ்பாபுவை வைத்துப் படம் இயக்கியிருக்கிறார். அதனால் அவர்கள் இருவர்களிடையே  நல்ல நட்பு இருக்கிறது. அதனால் ஏதோ வெகுநாள் பழகின மனிதர்களுடன் நடிப்பதுபோல்தான் படப்பிடிப்பு இருந்தது.  

எனக்கும் மகேஷுக்கும் நிறைய காம்பினேஷன் காட்சிகள் உண்டு. பல நாள்கள் மகேஷ்பாபுவுடன் ஷூட்டிங் நடந்தது. எனக்கும் அவருக்குமான ஃபைட் சீக்வென்ஸ் இருக்கின்றன. முக்கியமாக, இருவருக்குமான சோலோ ஃபைட் சீன் ரசிகர்கள் மத்தியில் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெறும். அதுவும் ரோலர் கோஸ்டரில் நடக்கும் சண்டைக்காட்சி தியேட்டரில் செம த்ரில்லிங்காக இருக்கும். அதை எடுக்கும்போது மிகவும் ரிஸ்க்காக இருந்தது. அந்த ஃபைட் சீனை மட்டுமே 15 நாள்கள் எடுத்தோம். படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் என அனைவரும் அவ்வளவு உழைத்தோம். ஏனென்றால், அது ஓடிக்கொண்டிருக்கும் ரோலர் கோஸ்டரில் நடக்கும் சண்டைக்காட்சி. அதை முடிக்கும்போது ஏதோ ஒரு டாஸ்க்கை முடித்ததுபோல் இருந்தது. மகேஷ்பாபுவுடன் நடித்த இந்தச் சண்டைக்காட்சி மட்டுமல்ல, படத்தின் ஒவ்வொரு சீனிலும் எனக்கும் அவருக்குமான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் கை தட்டல் பெறும்.’’

உங்களுடைய முதல் படமான பாய்ஸ், வெளியாகி 14 வருடங்கள் ஆகியிருக்கு. அப்போது இருந்த பரத்துக்கும் இப்போது இருக்கும் பரத்துக்கும் என்ன வித்தியாசம்..?

“சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.  'பாய்ஸ்' படம் வெளிவந்தபோது எனக்கு 16 வயதுதான். அப்போது எனக்கு ஜிம் அறிமுகமில்லை. ஒல்லியாகதான் இருப்பேன். 'நேபாளி' படத்தில் நடித்தபோதுதான் ஜிம்முக்குப் போக ஆரம்பித்தேன். அப்போதிலிருந்து பத்து வருடம் தொடர்ந்து வொர்க் அவுட் செய்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு படத்துக்கும் நம்ம உடம்பை அதற்கேற்ற மாதிரி மாற்ற வேண்டிவரும். அதற்கு நாம் ஃபிட்டாக இருந்தால் மட்டுமே முடியும். அதனால் என்னுடைய ஃபிட்னஸில்தான் நான் அதிக கவனம் செலுத்துகிறேன். இதுதான் பாய்ஸ் பரத்துக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். ரசிகர்களைப்போல 'ஸ்பைடர்' பட ரிலீஸுக்காக நானும் ஆர்வமாகக் காத்திருக்கிறேன். 'ஸ்பைடர்' படத்துக்குப் பிறகு தமிழிலும் தெலுங்கிலும் செகண்ட் இன்னிங்ஸ் ஆட தயாராக இருக்கேன்” என்று உற்சாகமான முடித்தார் பரத். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு