Published:Updated:

“ட்விட்டர், ஃபேஸ்புக்ல இருக்கும் என் ஹேட்டர்ஸை நான் பாராட்டுகிறேன்!” - ‘பிக்பாஸ்’ காஜல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“ட்விட்டர், ஃபேஸ்புக்ல இருக்கும் என் ஹேட்டர்ஸை நான் பாராட்டுகிறேன்!” - ‘பிக்பாஸ்’ காஜல்
“ட்விட்டர், ஃபேஸ்புக்ல இருக்கும் என் ஹேட்டர்ஸை நான் பாராட்டுகிறேன்!” - ‘பிக்பாஸ்’ காஜல்

“ட்விட்டர், ஃபேஸ்புக்ல இருக்கும் என் ஹேட்டர்ஸை நான் பாராட்டுகிறேன்!” - ‘பிக்பாஸ்’ காஜல்

தைரியமான பெண்ணாக 'பிக் பாஸ்' வீட்டுக்குள் வலம்வந்தவர் காஜல். அவரின் கம்பீரமான குரலும், நேர்த்தியான நடையும், துடிப்பான பேச்சுமே அனைவருக்கும் தெரிந்தது. ஆனால், அவருக்குள்ளும் பல வலிகள் பொதிந்துகிடக்கின்றன. அது பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

''என் வீட்டுல கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி நிறைய பசங்களின் போட்டோக்களைக் காட்டினாங்க. ஆனால், எனக்கு யாரையுமே பிடிக்கலை. அந்தச் சமயம் நானும் சாண்டியும் நண்பர்களாக இருந்தோம் அப்போதான், ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஃலைப் நல்லா இருக்கும்னு முடிவு பண்ணினோம். அதுனால 2008-ம் வருஷம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். ஆனால், லிவிங் டு கெதரா இருக்கோம்னு வதந்தி காட்டுத் தீ மாதிரி பரவ ஆரம்பிச்சது. அதுக்கப்புறமாதான் எல்லோரையும் கூப்பிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டோம். எங்க திருமண வாழ்க்கை நல்லாதான் போயிட்டுந்துச்சு. சினிமாவுல நடிக்க எனக்குள்ள இருந்த இன்ட்ரஸ்ட் பத்தி சாண்டிகிட்ட சொன்னேன். ஆனா அவரோ, 'சினிமானா கிளாமரா நடிச்சாகணும்... எனக்கு நீ கிளாமரா நடிக்குறது பிடிக்கல'னு அவர் சொன்னார். சரின்னு அவருக்காக சினிமாவுல நடிக்குறதை விட்டுட்டு சீரியல் நடிக்க ஆரம்பிச்சேன்.

நான் ரொம்ப பொசசிவ். என் கணவர் என்கிட்ட மட்டும்தான் அன்பா இருக்கணும், என்கூட மட்டும்தான் பேசணும்னு விரும்பினேன். ஆனால், அவர் டான்ஸ் மாஸ்டரா இருக்கிறதால், பொண்ணுங்ககூட குளோஸா டான்ஸ் ஆட வேண்டியிருக்கும். எனக்கு அதெல்லாம் பிடிக்காது.' அதுனாலேயே அவர்கூட சண்டைபோட ஆரம்பிச்சேன். அங்கேதான் எங்க காதலில் விரிசல் விழ ஆரம்பிச்சது. சாண்டி என் மேல ரொம்பவே அன்பா இருப்பார். என் முன்னாடி எந்தப் பொண்ணுகிட்டயும் பேச மாட்டார். ஆனால், நான் நிறைய இண்வெஸ்டிகேட் பண்ணுவேன். அதைவைச்சு எங்களுக்குள் சண்டை வந்துச்சு. அதனால், கல்யாணமான ரெண்டு வருஷத்தில் பிரிஞ்சிட்டோம். 

இதுக்கு முழுக்க முழுக்க சாண்டி மேலதான் தப்புனு சொல்ல மாட்டேன். என்னோட அதீத அன்பும், பொசசிவ்னஸூம் ஒரு காரணம். சாண்டியைப் பிரிஞ்சி வந்ததுக்கு அப்புறமா ரொம்பவே ஃபீல் பண்ணினேன். அந்த வலியிலிருந்து மீண்டுவர ரொம்ப நாள் ஆச்சு. இப்போவரை என்னால் சாண்டியை வெறுக்க முடியலை. ரெண்டு பேரும் இப்பவும் நண்பர்களா இருக்கோம். அவருடைய கல்யாணத்துக்கு பத்திரிகை கொடுத்தார். ஆனால், அந்தத் திருமணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி 'பிக் பாஸ்' வீட்டுக்குப் போயிட்டேன். அதனால், திருமணத்துக்குப் போக முடியலை. எங்களுக்குத் திருமணமானபோது, 'நாம குழந்தை பெத்துக்கலாம்'னு சாண்டி சொன்னார். அப்போ நாங்க கார் வாங்கலை. 'குழந்தை என் வயித்துல இருக்கும்போது நம்ம வீட்டில் கார் இருக்கணும். அதனால், கார் வாங்கினதுக்கு அப்புறமா குழந்தைப் பெத்துக்கலாம்'னு சொல்லியிருந்தேன். ஆனால், சாண்டி கார் வாங்கினபோது நாங்க பிரிஞ்சிட்டோம். ஒருவேளை, அவர் கேட்கும்போதே குழந்தையைப் பெத்துட்டிருந்தால், நாங்க பிரிஞ்சிருக்க மாட்டோமோனு நினைச்சு நிறைய நாள் யோசிச்சிருக்கேன், வருத்தப்பட்டிருக்கேன்..

இப்போ எனக்கு என் குடும்பம்தான் எல்லாமே. என் அக்கா, என் தம்பி பசங்களை என் பசங்களாதான் நினைக்குறேன். நான் ஏதாவது கஷ்டத்தில் சோர்ந்து இருக்கும்போது, அவங்கதான் என்னை உற்சாகப்படுத்துறாங்க. நான் சின்ன வயசிலிருந்தே எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராகப் பேசிருவேன். ரொம்பவே நேர்மையா நடந்துக்குவேன். இதுதான் என் கேரக்டர். என் நண்பர்கள் எல்லாருக்கும் என்னை நல்லாவே தெரியும். கோவப்பட்டால் நேரடியா திட்டிடுவேன் அதுக்கு அப்புறம் நானே போய் மன்னிப்பும் கேட்பேன். இதுதான் என் நேச்சர். டுவிட்டர், ஃபேஸ்புக்ல எனக்கு நெகட்டிவ் கமெண்ட் கொடுக்கிறவங்களை நான் பாராட்டுறேன். ஏன்னா, என் முகத்துக்கு நேரா அவங்களுடைய கருத்துகளை, நேர்மையா சொல்றாங்களே அதுக்குத்தான்..!

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குள்ளே போனதுக்கு காரணமே, விஜய் டிவி-க்காகவும் கமல் சாருக்காகவும்தான். கமல் சாரை நேர்ல பார்த்துட்டேன்; பேசிட்டேன். இதுக்கு மேலே 'பிக் பாஸ்' பற்றி எதுவும் சொல்ல விரும்பலை. மறுபடியும் சொல்றேன்... சாண்டி மேலே மட்டும் தப்புச் சொல்லி நான் தப்பிச்சிக்க விரும்பலை. டிடக்டிவ் வேலையைப் பார்த்து என் தலையில் நானே மண் அள்ளிப் போட்டுக்கிட்டேனு கொஞ்ச நாளைக்கு ஃபீல் பண்ணினேன். ஒரு தடவை பட்டது போதும். இதுக்கு மேலே யார்கிட்டயும் அதீத அன்பும் பொசசிவ்வும் வைக்க மாட்டேன். 'ஆயிரத்தில் இருவர்' படத்துல நெகட்டிவ் ரோல் பண்றேன். இனிமே, நடிப்புல கவனம் செலுத்தலாம்னு முடிவு பண்ணிருக்கேன். என் கேரக்டரை நல்லாப் புரிஞ்சுக்கிட்டு எனக்கும் பிடிச்சிருக்கிற ஒருத்தரை ஒருவேளை பார்க்க நேர்ந்தால், நிச்சயமா கல்யாணம் செஞ்சுப்பேன்'' என்கிறார் காஜல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு