Published:Updated:

“என்னை போலீஸ்கிட்ட இருந்து காப்பாத்துனதே தல - தளபதிதான்!” ஜாலி கேலி பாடகர் தீபக்

தார்மிக் லீ
“என்னை போலீஸ்கிட்ட இருந்து காப்பாத்துனதே தல - தளபதிதான்!” ஜாலி கேலி பாடகர் தீபக்
“என்னை போலீஸ்கிட்ட இருந்து காப்பாத்துனதே தல - தளபதிதான்!” ஜாலி கேலி பாடகர் தீபக்

சமீபமாக, எல்லாருடைய மியூசிக் ப்ளேயரிலும் ரிப்பீட் மோடில் இடம்பெற்றிருப்பது 'மெர்சல்' படத்தின் 'ஆளப்போறான் தமிழன்' பாடல்தான். வெளியான நாள் முதல் இன்று வரை, எப்போது கேட்டாலும் எனர்ஜி தெறிக்கிறது. 'இப்படிப்பட்ட பாடலில் எனது பங்கும் இருந்தது ரொம்ப சந்தோஷம் ப்ரோ' என சிரித்தபடி சொல்கிறார் பாடகர் தீபக். அவருடன் ஒரு கலகல பேட்டி.

“உங்க சினிமா பயணத்தைப் பத்தி சொல்லுங்க?”

“நான் மைக்ரோபயாலஜி படிச்ச பையன். காலேஜ் படிக்கும்போது பாட்டு பாடுறதுல ஓர் ஆர்வம் இருந்தது. நிறைய கல்ச்சுரல் ப்ரோகிராம்ல கலந்துகிட்டு ஜெயிச்சுருக்கேன். முழுசா சினிமாக்குள்ள வருவேன்னு அப்போ நினைக்கல. அஞ்சு வருஷம் நான் படிச்ச படிப்புக்கான வேலையைப் பார்த்தேன். ரெண்டு, மூணு ரியாலிட்டி ஷோவுல கலந்துகிட்டேன். அப்புறம்தான் விஜய் டி.வியில ஏர்டெல் சூப்பர் சிங்கர்ல கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது. அங்கு நிறைய புது விஷயங்களைக் கத்துகிட்டேன். டாப் 13ல எலிமினேட் ஆனேன். எலிமினேட்டான அப்புறம்தான் 'ரொம்ப விளையாட்டுத்தனமா இருந்துட்டோமோ சீரியஸா எடுத்துக்கலையோ'னு தோணுச்சு.

விளம்பரங்கள்ல பாடுறது, சீரியல்ல பாடுறதுன்னு சின்னச் சின்ன வாய்ப்புகள் வந்தபடி இருந்தது. அதுக்கு அப்புறம் விஜய் ஆண்டனி சார் நடிச்ச 'நான்' படத்துல 'தினம் தினம் நான் சாகிறேன்'ங்கிற பாட்டுப் பாட வாய்ப்பு கிடைச்சது. என் குரலை தியேட்டர்ல கேட்டது அதுதான் முறை. அப்புறம் கொஞ்ச நாள் ப்ரேக். அடுத்த வாய்ப்பு இமான் சார் இசையமைப்பாளரா வொர்க் பண்ண 'என்னமோ ஏதோ' படத்துல. அதுல 'ஷட் யுவர் மவுத்'னு ஒரு பாட்டு பாடுனேன். இதுவரைக்கும் தமிழ்ல 140 பாடல்களுக்கு மேல பாடியிருக்கேன், தெலுங்குல 40 பாடல்களுக்கு மேல பாடியிருக்கேன்.''

“அஜித், விஜய் ரெண்டு பேருக்கும் பாடியிருக்கீங்க, அந்த அனுபவம் எப்படி இருந்தது?”

''எனக்கு ரெண்டு பேரையும் ரொம்பப் பிடிக்கும். விஜய் சார் படத்துக்கு நான் மொதல்ல பாடுன பாட்டு `ஜில்லா' படத்தோட தீம் மியூசிக். நான், சந்தோஷ், ஆனந்த், செண்பகராஜ் நாலு பேரும் பாடினோம். பொதுவா இப்படி நாலு பேர் பாடின பாடலை 'க்ரூப்'னு போட்டு முடிச்சுருவாங்க. ஆனா அப்படி பண்ணாம தனித்தனியா பெயர் போட்டாங்க. அதே சமயத்துலதான் அஜித் சார் நடிச்ச 'வீரம்' படத்துலேயும் பாடினேன். ரெண்டு படமும் ஒரே நாள்ல ரிலீஸ் ஆனதுதான் ஹைலைட். எனக்கு செம சந்தோஷம். நிறைய பேர் பாராட்டுனாங்க. பல பேரோட போன்ல ரிங்டோனா, நான் பாடுன பாட்டைக் கேட்கும்போது இன்னும் அதிகமா சந்தோஷம் இருந்துச்சு. 

அஜித் சாரோட 'வீரம்' பாட்டைக் கேட்கும்போது ஒவ்வொரு முறையுமே புல்லரிக்கும்.'ரதகஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்'னு கேட்கும் போதே க்ளைமாக்ஸ் காட்சி கண்ணு முன்னாடி வந்து நின்னு சிலிர்த்திரும். அந்த அளவு பவர்ஃபுல்லான பாடல். மறுபடியும் 'விவேகம்' படத்துல 'தலை விடுதலை' பாடும்போதும் அதே ஃபீல் வந்தது. மெயின் குரலுக்கு சொந்தக்காரரா அனிருத் இருந்தாலும், என்னோட பங்களிப்பு இந்தப் பாட்டுக்கு இருந்ததால ரொம்ப சந்தோஷமா இருந்தது. பெர்சனலாவும் அனிருத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். நல்ல ஜாலியான ஒரு ஆளு. ரெண்டு பேர் படத்துலேயும் வொர்க் பண்ணதுக்கு காரணம் என் அதிர்ஷ்டம்தான்.

ஒருதடவை சிக்னல்ல நிக்காம வந்து போலீஸ்கிட்ட மாட்டிகிட்டேன். அவங்ககிட்ட நான் சிங்கர்னு சொன்னதும், 'பாடு, நல்லா இருந்தா விட்டுறோம்'னு சொன்னாங்க. பாடுனேன். சந்தோஷமா அனுப்பி வச்சாங்க. செம அனுபவம் அது. என்னை அங்க இருந்து காப்பாற்றியதே அஜித், விஜய் பாட்டுதான்!'' 

“ஆஸ்கர் நாயகன்' ரஹ்மான் இசையிலே நீங்க ஓர் ஆளா பாடும்போது உங்க ஃபீல் எப்படி இருந்தது?” 

''அதைச் சொல்றதுக்கே வார்த்தையில்ல. ரஹ்மானின் இசையில பாடினது வேற லெவல் ஃபீல் கொடுத்தது. அதுவும் 'ஆளப்போறான் தமிழின்' மாதிரி ஒரு எனர்ஜியான பாட்டு. எப்படியும் விஜய் சாரோட இன்ட்ரோ பாடலா இதுதான் வரும். வரிகளை வச்சு நானே கண்டுபிடிச்சேன். இதுக்கு முன்னாடியே ரஹ்மானின் 'மரியான்' படத்துல வேலை பார்த்துருக்கேன். இருந்தாலும் இந்த மாதிரி பாடலைப் பாடினது ரொம்ப ஸ்பெஷல். இப்போ வரைக்கும் ரஹ்மான் சாரைப் பெர்சனலா பார்க்க வாய்ப்பு கிடைக்கல. அவரைப் பார்க்கணும், ஒரு செல்ஃபியாவது எடுக்கணும், அதுவும் சீக்கரமே நடக்கணும்.''

“ஃபேமிலி சப்போர்ட் எப்படி?”

“எங்க வீட்டுல ரொம்ப சப்போர்ட். எங்க பாட்டி அந்தக் காலத்துலேயே ஆல் இந்தியா ரேடியோவுல வேலை பார்த்திருக்காங்க. வீட்டுல ஒரு பாடகர் இருக்கணும்னு அவங்களுக்கு ரொம்ப ஆசை. அது என் வழியா கிடைச்சது சந்தோஷமா இருக்கு. இப்போ வரைக்கும் நான் பாடிய பாட்டுகள் எல்லாமே தியேட்டர்ல பார்த்திருவேன். அப்புறம் வீட்டுல இருக்கவங்களைக் கூட்டிகிட்டுப் போவேன். ஃபேமிலியும் நானும் ஹேப்பி அண்ணாச்சி.''