மெர்சல் டீசர்ல இதெல்லாம் கவனிச்சீங்களா? - குறியீடு கண்டுபிடிப்புகள்

'மெர்சல்' படத்தின் டீசர் வெளியான கொஞ்ச நேரத்திலேயே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, பல சாதனைகளையும் படைத்திருக்கிறது. தற்பொழுது வெளியாகும் படங்களின் டீசரில் இயக்குநர்கள் குறியீடுகளைப் புகுத்துவது ட்ரெண்டாக மாறிவிட்டது. சில இயக்குநர்கள் அதற்காகவே ஸ்பெஷல் நேர்காணல்கள் எல்லாம் தருகிறார்கள். இந்த டீசர் மூலம் படத்தின் இயக்குநர் அட்லி என்னென்ன விஷயங்களை சொல்ல வருகிறார்? ஒரு குட்டி அலசல்!

அப்பா விஜய் :

மெர்சல் விஜய்

டீசரில் இடம்பெற்ற இவர் பகுதிக் காட்சிகளின் மூலம், இவர் வடமாநிலத்தில் இருக்கிறார் என்பது தெரிகிறது. சுற்றியிருக்கும் ஆட்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போல் இருந்ததும், ஆங்காங்கே இருந்த பலகைகளில் ஹிந்தி வார்த்தைகள் இருந்ததும் இதை உறுதி செய்கிறது. அங்கு இருப்பவர்களது உடை, அணிந்திருந்த டர்பன், சண்டை போடும் முறை என சில விஷயங்கள் ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது. ஒரு காட்சியில் விஜய் சண்டை போட்டுக் கொண்டிருக்கையில் பின்னே அவரது ஜோடி நித்யா மேனனனைக் காணலாம். தியேட்டரில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளில் பின்னே இருந்த எம்.ஜி.ஆரின் 'உழைக்கும் கரங்கள் ஃப்ளக்ஸை வைத்து பார்க்கையில் இவர் தீவர எம்.ஜி.ஆர் ரசிகனாக இருக்கலாம் என்பதும் தெரிகிறது. அநீதியான விஷயங்களுக்கு எதிர்த்து நிற்பதே இவரது குணாதிசயமாக இருக்கும், அதற்காக தன் உயிரையும் கூட விட்டிருக்கலாம். 

மேஜிக்மேன் விஜய் :

மெர்சல் விஜய்

படத்தில் இடம்பெறும் மற்றொரு விஜய் மாயாஜால வித்தைகளைச் செய்யும் மேஜிக்மேனாக இருக்கலாம் என்பதை 'மேஜிக்மேன்' என்று பல இடத்தில் காட்டிய வார்த்தைகள் சொல்கின்றன. சண்டைக் காட்சியில் புறாவை வெளியே எடுத்து 'பீஸ் ப்ரோ' என்று சொல்லும் காட்சி, கார்டுகளை வைத்தே சண்டையிடும் காட்சி என டீசரில் வரும் பல காட்சிகள் அதை உறுதி செய்துள்ளது. படத்தின் செகண்ட் லுக்கிலும் விஜய் மேஜிக்மேனைப் போல் கார்டுகளை பிடித்திருப்பார். பாடலில் இடம்பெறும் காட்சியாகக் கூட இருந்திருக்கலாம் என்று நினைத்தால் டீசரைக் பார்க்கும் போதுதான் தெரிகிறது மேஜிக்கிற்கும் படத்துக்கும் நிறையவே சம்பந்தம் இருக்கிறது என்று. 

அரசியல்வாதி விஜய்யா?

மெர்சல் விஜய்

முதல் காரணம், முழுக்க முழுக்க இவர் அணிந்திருந்த வேஷ்டி சட்டை. இதை வைத்து மட்டும் அரசியல்வாதி என்று சொல்லிவிட முடியாதுதான். நடந்து வருகையில் இவர் மக்களைப் பார்த்து போடும் கும்பிடு, எல்லோரும் இவரைப் பார்த்து கைதட்டி உற்சாகம் செய்வது, போலீஸ்காரர்களே இவரைப் பார்த்து சல்யூட் அடிப்பது என இப்படியான விஷயங்கள், இவர் அரசியல்வாதியாக இருப்பாரோ என்ற சந்தேகத்தை கிளப்புகிறது. போலீஸ் பாதுகாப்புடன் பல நாடுகள் கூடியிருக்கும் அரங்கிற்கு வேஷ்டி சட்டை அணிந்து கெத்தாக நடந்து வருவார். ஒருவேளை அதே நேரத்தில் இவரைக் கொல்லவும் திட்டம் தீட்டியிருக்கலாம், அதன் பின்னர் அதே உடை அணிந்திருக்கும் போலீஸ்காரர்களுடன் நடக்கும் சண்டைக் காட்சி போன்ற விஷயங்கள் பின்னர் வரும் காட்சிகளில் இடம்பெறுகிறது. இது எல்லாவற்றையும் விட ரொம்ப ஸ்பெஷலான விஷயம், விஜய்க்குப் பின்னால் வெள்ளைக் கலர் கோட் சூட் போட்டு ஒரு ஆள் நின்று கொண்டிருப்பார், அது வேறு யாரும் இல்லை நம்ம 'வைகைப் புயல்' வடிவேலுதான். தன் அப்பாவைப் போல இவரும் எம்.ஜி.ஆரின் ரசிகனாக இருக்கலாம். இவர் வொர்க்அவுட் செய்யும் காட்சி ஒன்றில் நன்றாக கவனித்தால் பின்னே விஜய்யின் சிறு வயது புகைப்படத்தையும், எம்.ஜி.ஆரின் புகைப்படத்தையும் காணலாம். ஒருவேளை இது அரசியல் குறியீடா இருக்குமோ?

விஜய்

மூன்று கதாபாத்திரங்கள், இரண்டு விஜய்யா, மூன்று விஜய் மூன்று கதாபாத்திரங்கள் என்ற சந்தேகம் டீசரைப் பார்த்தே கிளம்பியது. ஆனால், டீசரை ரிப்பீட் மோடில் போட்டுப் பார்த்தால் ஒரு சில சுவாரஸ்யமான விஷயங்கள் கண்ணில் தென்படுகிறது. முதலில் விஜய் முட்டிக்கால் போட்டு வில்லனின் ஆட்களிடம் அடி வாங்கிக் கொண்டிருப்பார், அப்பொழுது நன்றாக கவனித்துப் பார்த்தால் அடி வாங்கிக் கொண்டிருக்கும் விஜய்யோடு, அடி கொடுக்கும் விஜய்யின் முதுகுப் பகுதியையும் காணலாம். சகோதர விஜய்யைக் காப்பாற்றுவதற்காக மற்றொரு விஜய் வந்திருக்கலாம். மேஜிக்மேனாக வரும் விஜய்யின் லட்சியமும், அரசியல் தொனியில் வரும் விஜய்யின் லட்சியமும் தன் அப்பாவின் சாவிற்காக பலி வாங்குவதாக இருக்கலாம். கதையில் லேசாக அபூர்வ சகோதரர்கள் சாயல் 'தெறி'கிறது. அதை மறக்கடிக்கும் அளவிற்கு திரைக்கதை இருந்தால் நிஜமாவே மெர்சல்தான் ப்ரோ!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!