Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்க்கஸ் கமல், மெஜீஷியன் விஜய்... 'அபூர்வ சகோதரர்கள்'- `மெர்சல்' ஓர் ஒப்பீடு

Chennai: 

எதிர்பார்த்தபடி எல்லாமே ஆரம்பித்துவிட்டது. லைக் டிஸ்லைக் போட்டி, மீம்ஸ், வடிவேலு வெர்ஷன் டீசர் என எல்லாமும். வழக்கமாக எல்லா படங்களுக்கும் இது நடப்பதுதான் என்றாலும் `மெர்சல்' படத்தின் பின்னணியும், அதற்கான எதிர்பார்ப்பும் இந்த புறக் காரணிகளின் மீது நம் கவனம் விழவைக்கிறது. படத்திற்கான டைட்டில் பிரச்னை முதற்கொண்டு எல்லாமே நடந்து விட்டது... அந்த நெகட்டிவிட்டியை இக்னோர் செய்துவிட்டால் சரியாகிவிடும் என நம்பிக்கை கொள்வோம். `மௌனராகம்'தான் `ராஜா ராணி', `சத்ரியன்'தான் தெறி என கிளம்பிய விமர்சனங்கள் எல்லாம் நாம் அறிந்ததே. விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணைந்த உடன் இப்போ எந்தப் படமா இருக்கும் என யோசித்தவர்கள்தான் அதிகம். `அபூர்வ சகோதரர்கள்'தான் `மெர்சல்' என வெளியாகும் தகவல்கள் உண்மையா, பொய்யா தெரியவில்லை. சரி ஒருவேளை அப்படி இருந்தால் எந்த எந்த கதாபாத்திரம் யார் யார், என்னென்ன மாறியிருக்கும். கீழ்காண்பது மெர்சல் - அபூர்வ சகோதரர்களிலிருந்து எடுத்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே இவை... சோ, பீஸ் ப்ரோ!

மெர்சல்

சேதுபதி, அப்பாதுரை (அப்பு), ராஜா என மூன்று கதாபாத்திரங்களில் கமல் நடித்து 1989ல் வெளியான படம் 'அபூர்வ சகோதரர்கள்'. படத்தின் கதை... (ஜஸ்ட் எ ரிமைண்டர்) நாகேஷ், டெல்லி கணேஷ், நாசர், ஜெய்ஷங்கர் ஆகியோரால் அப்பா கமல் கொல்லப்படுகிறார். இதை அறிந்து கொள்ளும் அப்பு கமல், தந்தையைக் கொன்றவர்களை பழி வாங்க ஆரம்பிக்கிறார். அந்தக் கொலைகளில் எல்லாம் மெக்கானிக் கமல் மாட்டிக் கொள்கிறார். இறுதியில் நாகேஷையும் கொன்றுவிட்டு ஜெயிலுக்கு சென்றுவிடுவார் அப்பு கமல். 

Vijay

இந்த கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு மெர்சலை அலசினால் ஒரு தெளிவு கிடைக்கும். முதலில் சேதுபதி கமல் Vs முறுக்கு மீசை விஜய். படத்தின் துவக்கத்திலேயே சேதுபதி கமல் கொல்லப்பட்டுவிடுவார். அதுவே மெர்சலில் முறுக்கு மீசை விஜய் போர்ஷன் படத்தின் ஃப்ளாஷ் பேக்கில்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது. விஜய் செய்யும் நேர்மையான ஒரு விஷயம் எதிரிகளுக்குப் பிடிக்காமல் அவர் கொல்லப்பட்டிருக்கலாம். அதற்கான ரிவெஞ் மகன்கள் மூலம் எடுக்கப்படலாம். இதே கதைதான் `அபூர்வ சகோதரர்கள்' படத்தில் மாஸ் கலக்காமல் காமெடியாக சொல்லப்பட்டிருக்கும். 

 

அப்பு கமல் Vs மெஜீஷியன் விஜய்

Kamal

அபூர்வ சகோதரர்களில் சர்க்கஸில் வளரும் கமலுக்குதான் தன் தந்தை கொலையான விவரம் தெரிந்து பழிவாங்கத் துவங்குவார். அங்கு சர்க்கஸுக்கு பதில் இங்கே மேஜிக் பின்னணியை வைத்திருக்கலாம். ஜாலியாக மேஜிக் காட்டிக் கொண்டிருந்தவருக்கு, தந்தையைக் கொன்றவனைப் பற்றி தெரிந்து கொண்டு "நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனைக் கேட்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்கக் காத்திருக்கும்" என்றபடி பழிவாங்கக் கிளம்பியிருக்கலாம். டீசரில் விஜய் வெல்டிங் வைத்துக் கொண்டிருக்கும் பொருள் சாதாரணமாக மேஜிக் கருவிக்காகவும் இருக்கலாம், இதுவே அபூர்வ சகோதரர்கள் படத்தில் சர்கஸ் பொருட்களை வைத்துக் கொண்டு டெல்லி கணேஷை கொல்லும் காட்சி நினைவிருக்கலாம். அது போல ஒரு கருவியைக் கூட தயார் செய்து கொண்டிருக்கலாம். 

 

மெக்கானிக் கமல் Vs டாக்டர் விஜய்

Aboorva Sagotharargal

டீசர் வெளியாகும் முன்பு வந்த போஸ்டரில் நித்யா மேனன், அவர் மடியில் சிறுவயது விஜய், டாக்டர் விஜயாக இருக்கலாம். உறுதியா டாக்டர்தான் என சொல்ல மெர்சல் அர்சன் பாடல் வரிகளை உதாரணமாக வைக்கலாம். "எத்து கீச்சுப் பாத்தா கத்தி ஷார்ப்புதான்" என ஜி.வி.பிரகாஷ் பாட அடுத்து ஒலிக்கும் பெண் குரல் `கத்தி ஆனா கீச்சதில்ல நோய் வெட்டும் சாமிதான்' என மருத்துவருக்கான ரெஃபரன்ஸாக இருக்கும். மெக்கானிகல் கமல் ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்ல என சென்னைத் தமிழில் ஒலிக்கும், இங்கே அது `தியேட்டரு தெறிக்க யார் இங்க கெலிக்க' என சென்னைத் தமிழில் ஒலிக்கும். 

Vadivelu

சந்தேகமே இல்லாமல் நித்யாமேனன் முறுக்கு மீசை விஜயின் ஜோடி. சமந்தாவுக்கு டாக்டர் விஜயுடனும், காஜல் அகர்வாலுக்கு மெஜீஷியன் விஜயுடனும் ஜோடி சேர்ந்திருக்கலாம். மனோரமா கதாபாத்திரத்தில் கோவை சரளா இருந்து டாக்டர் விஜயை எடுத்து வளர்த்திருக்கலாம். இதில் சத்யராஜ் என்ன கதாபாத்திரம் என்பதில் குழப்பம் இருந்தாலும் எஸ்.ஜே.சூர்யா மட்டும் வில்லன் என்பது உறுதியாக சொல்லப்படுகிறது. நாகேஷ் போல மெய்ன் வில்லனாக கூட சத்யராஜின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். கூடவே `கிடாரி', `ஆண்டவன் கட்டளை', `விக்ரம் வேதா' படங்களில் கவனம் பெற்ற ஹரீஷ் பெரடியும் இருப்பதால் இவருக்கும் ஒரு வில்லன் வேடம் ஒதுக்கப்பட்டிருக்கலாம். லிரிக் வீடியோவில் வடிவேலு மீது தோளில் கைபோட்டபடி இருப்பதால் இவரின் கதாபாத்திரம் அப்படியே ஜனகராஜ் வேடமாக இருக்க வாய்ப்பு குறைவு. மேலும் சத்யன், `மொட்டை' ராஜேந்திரன், யோகி பாபுவும் இருப்பதால் காமெடி பகுதிகள் கொஞ்சம் கூடுதலாகவே சேர்க்கப்பட்டிருக்கலாம். 

 

 

இப்படியே இருக்கும் என்றில்லை, இப்படியும் இருக்கலாம். மெர்சல் அரசன் என்ன செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதுவரை பீஸ் ப்ரோ!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?