Published:Updated:

’’பிக் பாஸ் வின்னர் சினேகன்தான்..!’’ - அடித்துச் சொல்கிறார் சதீஷ் #CelebrityAboutBiggBoss

சனா
’’பிக் பாஸ் வின்னர் சினேகன்தான்..!’’ - அடித்துச் சொல்கிறார் சதீஷ் #CelebrityAboutBiggBoss
’’பிக் பாஸ் வின்னர் சினேகன்தான்..!’’ - அடித்துச் சொல்கிறார் சதீஷ் #CelebrityAboutBiggBoss

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியின் வெற்றியாளர் யாராக இருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள்  மட்டுமின்றி பார்வையாளராகயிருக்கும் சில பிரபலங்களும் ஆர்வமாகியிருக்கின்றனர். தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு புதுமையாகயிருக்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி குறித்து ஆரம்பத்தில் சர்ச்சைகளும் வெடித்தது. தமிழ் கலாசாரத்துக்கு எதிராக இந்த நிகழ்ச்சி உள்ளது என்று சில பேர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால், இவை எல்லாம் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு விளம்பரமாகத்தான் அமைந்தது. நாளுக்குநாள் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் மற்றும் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமானதே தவிர குறையவே இல்லை. 

கிளைமேக்ஸ் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியால் தான் கற்றுக்கொண்ட பாடம் என்ன என்பதைப் பற்றி நடிகர் சதீஷ் சொல்கிறார்.

'' இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டு வருகின்றேன். ஷூட்டிங் பிஸியில் பார்க்க முடியாவிட்டாலும், ஹாட் ஸ்டாரில் பார்த்து விடுவேன். நிகழ்ச்சியைப் பார்ப்பது மட்டுமின்றி ட்விட்டரிலும் அது பற்றிய கருத்துகளைப் பதிவு செய்வேன். இந்த நிகழ்ச்சியைப் பார்த்து ஒன்று மட்டும் நன்றாகப்  புரிந்துகொண்டேன். உண்மைக்கு என்றும் மதிப்பு இருக்கிறது என்பதுதான். ஏனென்றால் நிகழ்ச்சியில் உண்மையாகயிருந்த போட்டியாளர்  யார் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். ஓவியா திரைப்படத்தில் நடித்த போதுகூட அவருக்கு இத்தனை ரசிகர்கள் கிடைக்கவில்லை. அவர் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக இருந்தைப் பார்த்துவிட்டு அவருக்குக் கிடைத்த ரசிகர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. #OviyaArmy-யே உருவாகிவிட்டது. அதனால், உண்மைதான் எப்போதும் ஜெயிக்கும், நேர்மையாக இருக்க வேண்டும் என்ற ஒன்றைத்தான் கற்றுக்கொண்டேன்.’’

`பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இவற்றையெல்லாம் தவிர்த்திருக்கலாம் என நீங்கள் நினைப்பவை...!?

‘’நீங்கள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பதைத் தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறேன்.’’

’பிக் பாஸ்' தொகுப்பாளராகக் கமல் தன் பணியை எப்படிச் செய்கிறார்?

’’கமல் எங்கே போனாலும் பெரியதாக, புதியதாக, வித்தியாசமாக எதாவது பண்ணிவிடுவார். இந்த நிகழ்ச்சியிலும் கண்டிப்பாக இந்த மாதிரி ஒருத்தரைப் பார்க்க முடியாது அப்படினு எல்லோரும் சொல்வதற்கு ஏற்ற மாதிரி தனி வழியை ஃபாலோ பண்ணினார். பிக் பாஸ் நிகழ்ச்சி நம்ம நாட்டுக்குப் புதுசு. எந்த மாதிரி ஷோ, எப்படி இருக்கும் அதெல்லாம் முதலில் பலருக்கு தெரியாமல் இருந்தது.  இந்த நிகழ்ச்சியை கமல் சாருக்காகத்தான் முதலில் பார்க்க ஆரம்பித்தோம். கமலே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறாருன்னா கண்டிப்பாக ஏதோ புதுசாக நிகழ்ச்சியில் இருக்கும் என்ற ஆர்வத்தில்தான் பார்க்க ஆரம்பித்தது. அவர் செய்யுற ஒரு வேலையை பற்றிக் கருத்து சொல்ற அளவுக்கு நாம் பெரிய ஆளு இல்லை. முக்கியமாக நானில்லை. ஆனால், ஒரு ரசிகராகப் பார்க்கும்போது ஒரு எக்ஸ்ட்ராடினரியான ஒரு விஷயத்தை அவர் பண்ணிவிட்டார். மற்ற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நான் பார்த்திருக்கின்றேன். அதில் மற்ற மொழியைச் சேர்ந்த ஸ்டார்ஸ் செய்ததைவிட இதில் கமல் சூப்பராகவே செய்துவிட்டார்.’’

`உங்கள் மனதுக்கு நெருக்கமான போட்டியாளர் யார்?”

’’நெருக்கமான போட்டியாளர் எனக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் ஓவியாதான். பட், இப்போது அவங்க பிக் பாஸ் போட்டியாளராக இல்லாமல் போய்விட்டார். இருந்திருந்தால் கண்டிப்பாக அவர்தான் வெற்றி அடைந்திருப்பார்.’’

`பிக் பாஸ்' வெற்றியாளர் யாராக இருக்கும் என உங்களால் கணிக்க முடிகிறதா?

‘’என் கணிப்பின்படி பிக் பாஸ் டைட்டில் சினேகனுக்குக் கிடைக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால், தமிழில் ஒரு வார்த்தை சொல்லுவார்கள் இன்பத்தையும் துன்பத்தையும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று. அதை சினேகன் சரியாகச் செய்கிறார். 
யாராவது சந்தோஷமாக இருந்தாலும் சினேகன் போய் கட்டிப்பிடிக்கிறார். யாராவது வேதனைப்பட்டு அழுதாலும் உடனே ஓடிப்போய் கட்டிப்பிடிக்கிறார். இந்த விஷயத்தைச் சினேகன் சரிசமமாகச் செய்கிறார். ஆனால், இதையெல்லாம் தாண்டி சீரியஸாகச் சொல்ல வேண்டுமானால் உண்மையாகவே அவர்  வெற்றி பெற நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சரியாக அவர் விளையாட்டை விளையாடினார். யாராவது மன உளைச்சலில் இருந்தால்கூட அவர்களை சீரியஸாகவே சமாதானம் படுத்த முயற்சி செய்கிறார். ஓவியா குழப்பத்தில் மன உளைச்சலில் வெளியே படுத்திருந்தபோது அவர்தான் சமாதானப்படுத்தினார். ஒருத்தருக்கு பிரச்னை வந்தால்கூட அதைச் சரிசெய்ய மெனக்கெடுவார். டாஸ்க் எல்லாம் கரெக்டாகச் செய்தார். அதற்காக முயற்சியும் செய்தார். அதனால் சினேகன் வெற்றி பெற வாய்ப்பு இருக்கு’’.