Published:Updated:

நடிகை தன்ஷிகா விவகாரம்..! டி.ராஜேந்தருக்குக் கண்டனம் தெரிவித்த விஷால்

கார்த்திக் துரைமகாராஜன்.சி
நடிகை தன்ஷிகா விவகாரம்..! டி.ராஜேந்தருக்குக் கண்டனம் தெரிவித்த விஷால்
நடிகை தன்ஷிகா விவகாரம்..! டி.ராஜேந்தருக்குக் கண்டனம் தெரிவித்த விஷால்

நடிகை தன்ஷிகாவை காயப்படுத்தும் வகையில் பேசிய டி.ராஜேந்தருக்கு நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நடிகை தன்ஷிகா விவகாரம்..! டி.ராஜேந்தருக்குக் கண்டனம் தெரிவித்த விஷால்


'விழித்திரு' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை தன்ஷிகா, படத்தில் பங்கேற்றிருக்கும் டி.ராஜேந்தரின் பெயரைக் குறிப்பிடவில்லை. அதனால், ஆத்திரமடைந்த டி.ராஜேந்தர், மேடையிலேயே தன்ஷிகாவைக் கடிந்துகொள்ளும் வகையில் பேசினார். அதனால், தன்ஷிகா மேடையிலேயே அழத்தொடங்கினார். இந்த நிலையில், டி.ராஜேந்தருக்குக் கண்டனம் தெரிவித்து, நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 'ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரைச் சொல்லவில்லை என்பதற்காக, இயக்குநர்  டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாகக் கண்டித்ததும், தன்ஷிகா மன்றாடி மன்னிப்புக் கேட்டும்கூட டி.ஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன். டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே. நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டி.ஆர் அவர்கள் சுட்டிக்காட்டிய பின்னர், சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறார். அப்படி மன்னிப்புக் கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவைப் பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம்.

ஆனால், மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டி.ஆர் போன்ற ஒரு படைப்பாளியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாகத் தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதைசெய்யும் குணம்கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர். அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்திய டி.ஆர் அவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.