Published:Updated:

கணவர் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்!

கணவர் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்!
கணவர் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்!

மும்பை: தம்மை அடித்து துன்புறுத்துவதாக கணவர் மீது முன்னாள் உலக அழகி யுக்தா  முகி மும்பை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 1999-ம் ஆண்டு தனது 20-வது வயதில் உலக அழகி பட்டத்தை வென்ற யுக்தா  முகி,பல்வேறு இந்தி படங்களில் நடித்தார்.

கணவர் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்!

இருப்பினும் பாலிவுட்டில் யுக்தா முகி பெரிய அளவில் சோபிக்க முடியாமல் போன  நிலையில், அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபர் பிரின்ஸ் டுலி என்பவரை கடந்த  2008-ம் ஆண்டு திருமணம் செய்தார் யுக்தா முகி.அவர்களுக்கு கன்வால் முகி என்ற  குழந்தை உள்ளது.
 
இந்நிலையில் யுக்தா முகி தனது கணவர் மீது மும்பை காவல்துறையில் புகார் செய்து  உள்ளார். அதில்,கணவர் தன்னை அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்து  இருக்கிறார்.

இந்த புகாரை தொடர்ந்து அவரது கணவர் மீது தண்டிக்க இயலாத குற்றத்தின் கீழ்  அம்போலி போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

##~~##
இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து இருப்பதால்,  நீதிமன்ற அனுமதி அல்லது  உத்தரவின்றிமுதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல்,கைது செய்தல் போன்ற  நடவடிக்கைகள் போலீசார் செய்ய முடியாது.
முன்னாள் உலக அழகியான யுக்தா முகி,கணவர் மீது காவல்துறையில் புகார்  அளித்துள்ளது பால்வுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.