Published:Updated:

“பிக்பாஸ் வீட்டின் பல பிரச்னைகளுக்கு சினேகன்தான் காரணம்!” ஜூலி #BiggBossTamil

“பிக்பாஸ் வீட்டின் பல பிரச்னைகளுக்கு சினேகன்தான் காரணம்!” ஜூலி #BiggBossTamil

“பிக்பாஸ் வீட்டின் பல பிரச்னைகளுக்கு சினேகன்தான் காரணம்!” ஜூலி #BiggBossTamil

“பிக்பாஸ் வீட்டின் பல பிரச்னைகளுக்கு சினேகன்தான் காரணம்!” ஜூலி #BiggBossTamil

“பிக்பாஸ் வீட்டின் பல பிரச்னைகளுக்கு சினேகன்தான் காரணம்!” ஜூலி #BiggBossTamil

Published:Updated:
“பிக்பாஸ் வீட்டின் பல பிரச்னைகளுக்கு சினேகன்தான் காரணம்!” ஜூலி #BiggBossTamil

"நான் ரொம்ப அமைதியான பொண்ணு. நல்லா டான்ஸ் ஆடுவேன். பாட்டுப்பாடுவேன். இருக்குற இடத்தை கலகலப்பா வெச்சுப்பேன். சாதாரண மிடில் கிளாஸ் குடும்பப் பின்னணி. அப்பா ஆட்டோ  டிரைவர். அவர்தான் எனக்கு ரோல் மாடல். ‘வாழ்க்கையை இப்படித்தான்  வாழணும்’னு ஒரு வரைமுறைக்குள்ள தன்னை வெச்சுப்பார். செய்யும் தொழில்ல கவனமா இருப்பார். அம்மாதான் என் பலம். என் தம்பி மேல நான் உயிரையே வெச்சுருக்கேன். காசு பணம்தான் இல்லையேதவிர அன்பு, பாசத்துக்குப் பஞ்சமே இல்லாத வீடு. டாக்டராகணும் என்பது என் சின்ன வயசு ஆசை. குடும்பச் சூழ்நிலை காரணமா டாக்டருக்குப் படிக்க முடியல. ராமச்சந்திரா மெடிக்கல் யூனிவர்சிட்டியில நர்ஸிங் படிச்சேன். பள்ளி, கல்லூரி நண்பர்கள் அதிகம். அவங்க எல்லாருக்கும் இருக்குற ஒரே என்டெர்டெயின்மென்ட் நான்தான். இதைத்தவிர என்னைப்பற்றி பெருசா சொல்லிக்க ஒண்ணுமில்லை.” - “ஜூலி யார் என்ற கேள்விக்குத்தான் இப்படி பதில் சொல்கிறார், ‘பிக் பாஸ்’ ஜூலி. 

‘பிக் பாஸ்’ வீட்டிலிருக்கும்போதே ஜூலி சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார். வீட்டிலிருந்து அவரை வெளியேற்றியபிறகும்கூட அவரை விமர்சனங்களும் ஓவியா ஆர்மியும் துரத்தின. இந்த நிலையில் அவரைச் சந்தித்துப் பேசினோம். “'பிக் பாஸ்ல எனக்கு நடந்தது மிகக் கொடுமை. அதைவிட மக்கள் கஷ்டப்படுத்துறது கொடுமையிலும் கொடுமை' என்றபடி பேச ஆரம்பிக்கிறார் ஜூலி. 

"ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துக்கணும் என்ற உணர்வு எப்படி வந்துச்சு?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"தமிழ் உணர்வு, நாட்டுப் பற்று. சமூகத்துக்கு ஏதாவது செய்யணும்ன்ற ஆர்வம் எனக்கு எப்பவும் உண்டு.  'ஜூலி புகழுக்காகத்தான் ஜல்லிக்கட்டுல கலந்துக்கிட்டா'னு சிலர் தப்பா நெனச்சுட்டு இருக்காங்க. உண்மையிலேயே அந்தப் போராட்டத்துக்கு அப்பறம் இவ்வளவு புகழ் கிடைக்கும்னு நான் கனவுலகூட நெனச்சுப் பார்க்கல. மீடியா நெனச்சா நம்மள ஏத்திவிடும், இறக்கி விடும் என்பதை இப்பதான் புரிஞ்சுகிட்டேன். என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத திருப்பு முனை ஜல்லிக்கட்டுல எனக்குக் கிடைச்ச புகழ்தான்."

"தி.மு.க குடும்பப் பின்னணிதான் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நீங்க பேசியதுக்குக் காரணம்னு சொல்றாங்களே?”

"இல்லவே இல்ல. நானும் என் குடும்பமும் எந்தவொரு கட்சியையும் சார்ந்தவங்க கிடையாது. அரசியல்ல நிக்குற அளவுக்கு எனக்கு பலமும் கிடையாது. பதவி ஆசையும் கிடையாது. எனக்கு மக்களோட மக்களா இருக்கறதுதான் சந்தோசம். இப்படிச் சொல்றவங்க காலம் முழுக்க ஏதாவது சொல்லிகிட்டேதான் இருப்பாங்க"

"அந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதிநாளில் தடியடி நடந்தப்பக்கூட உங்களை அங்கு பார்க்கமுடியவில்லையே?”

"நான் ஆரம்பத்தில் அந்தப் போராட்டத்தில் கலந்துகிட்ட பிறகு எனக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வந்தன. 'நீ இருக்குற இடமே தெரியாம பண்ணிடுவேன். உன்னைப் பாலியல் பலாத்காரம் பண்ணி நடு ரோட்ல வீசிடுவோம்’னு ஏகப்பட்ட பெரிய தலைகள்கூட போன் பண்ணி மிரட்டினாங்க. இப்போ 'பிக் பாஸ்' பார்த்துட்டு எங்க வீட்ல, 'நடுத்தர மக்கள் என்ன பண்ணினாலும் இந்த மக்கள் தப்பா பேசிக்கிட்டேதான் இருப்பாங்க. என் பொண்ணு போராட்டக் களத்துல உயிரையே விட்டாலும் பரவாயில்ல. நாட்டுக்காக எதாவது செய்யணும்'னு எனக்கு ஊக்கம் கொடுக்குறமாதிரி பேசுனாங்க. அதனால இனி வர்ற போராட்டங்கள்ல கண்டிப்பா கலந்துக்குவேன். குறிப்பா விவசாயிகள் போராட்டத்துல கலந்துக்கணும்னு ஆசை."

"பிக் பாஸ்ல கலந்துக்கிற வாய்ப்பு எப்படி அமைஞ்சது?”

‘'பிக் பாஸோட முதல் நிபந்தனையே யார்கிட்டயும் இதைப் பற்றி டிஸ்கஸ் பண்ணக் கூடாது என்பதுதான்.  நாம செலக்ட் ஆனதுக்குப் பிறகு அதைப்பற்றி எந்தத் தகவலையும் வெளியிடக் கூடாது. அப்படிச் சொன்னால் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதனால இந்தத் தகவலை  வீட்ல மட்டும்தான் சொன்னேன். இந்த ஒரு நல்ல வாய்ப்பை நாம ஏன் பயன்படுத்திக்கக் கூடாதுனு தோணுச்சு. இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தான் நானும் ரொம்பநாளா காத்துக்கிட்டு இருந்தேன்.”

"பிக்  பாஸ் வீட்டுக்குள் போனபோது மனநிலை எப்படி இருந்துச்சு?"

"எல்லோரும் நல்லவங்களா இருப்பாங்கன்னு நெனச்சேன். இவ்வளவு சண்டைகள் வரும்னு நான் எதிர்பார்க்கலை. வீட்டுக்குப் போகணும்னு நிறைய தடவை அடம்பிடிச்சிருக்கேன். அப்பல்லாம் பிக் பாஸ் என்னைக் கூப்பிட்டு பேசவே இல்ல. மத்த போட்டியாளர்கள் வெளியே போகணும்னு சொன்ன உடனேயே அவங்கள கன்ஃபெஷன்  ரூமுக்குக் கூப்பிட்டுப் பேசுனார். முதல்ல பிக் பாஸ் நிகழ்ச்சிக்காகப் பேசுறப்போ, என்னை மாதிரி சாதாரண ஆட்கள் நிறையபேர் இருப்பாங்கன்னு சொன்னாங்க. ஆனா, நான் மட்டும்தான் அங்க சாதாரண பொண்ணுனு உள்ள போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது. அங்க நடந்த பல விஷயங்களால ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கேன். முதல் தடவை நாமினேட் ஆனப்பவே எலிமினேட் ஆகியிருந்தா நல்லா இருந்துருக்கும்."

"முதல்நாள் ஸ்ரீயிடம் நீங்கள் அப்படிப் பேசியது தப்புனு நெனைக்கிறீங்களா?"

"பிக் பாஸ் வீட்டுக்குள்ள எல்லாப் போட்டியாளர்களும் உள்ள வந்தவுடனேயே கட்டிப்புடுச்சு வெல்கம் பண்ணாங்க. என்னைக் கட்டிப்புடிக்க ஆளே இல்ல. அதுக்கு என்ன அர்த்தம்? என்னை யாருமே வரவேற்கலைனுதானே ஆர்த்தம். அதுதான் எனக்குக் கஷ்டமா இருந்துச்சு. கட்டிப்புடிக்க ஆளே இல்லைனு சொன்னதும் எல்லோரும் என்னைத் தப்பா நெனச்சுட்டாங்க. நான் சொன்ன தொனி கூட புரியாத மக்கள் இன்னமும் இருக்காங்களானு நினைக்கும்போதுதான் கஷ்டமா இருக்கு."

"பிக்பாஸ் வீட்ல இருந்து வெளியே வந்தபிறகு ஓவியாட்ட பேசினீங்களா?”

"ஆமா. பேசிட்டுதான் இருக்கேன். எல்லோரும், ‘ஓவியா நம்பர் மாத்திட்டாங்க. நீங்க அவங்ககிட்ட பேசுறீங்கன்னு பொய் சொல்றீங்க’னு சொன்னாங்க. மொதல்ல அவங்களோட பழைய நம்பர்தான் என்கிட்ட இருந்துச்சு. அடுத்த ஒரு வாரத்திலேயே அவங்களோட புது நம்பரை வாங்கிட்டேன். நானும் ஓவியாவும் பேசிட்டுதான் இருக்கோம்னு மக்களுக்கு நிரூபிக்கத் தயார்."

"ஓவியாகிட்ட நடந்துகிட்ட விதம் தவறுனு உணர்ந்தீங்களா?"

"உண்மையாவே அன்னைக்கு எனக்கு பயங்கரமான வயிற்று வலி. அது தாங்க முடியாம அழுதுட்டு இருந்தப்போ ஒரு பிரபலம், அவரோட பேர் சொல்ல விரும்பலை. என்னைப் பார்த்து, 'நீ இன்னும் எத்தனை நாளைக்கு  நடிப்பேன்னு பார்க்குறேன். இன்னும் மூணு மாசம் இங்க எப்படி இருக்கப்போறனு பார்ப்போம்'னு சவால் விட்டாங்க. இப்படியெல்லாம் என்னைத் திட்டின அவங்க வெளிய வந்து, 'நாங்க உன்னை திட்டலை ஜூலி, ஓவியாவைத்தான் திட்டுனோம்'னு சத்தியம் பண்றாங்க. அப்போ ஓவியா, 'அவங்க என்னைதான் திட்டினாங்க. உன்னை திட்டலை'னு என்கிட்ட ஒருவார்த்தை சொல்லிருக்கலாம். அதுதான் எனக்கு இருக்குற ஒரே கோபம். பிறகு ஓவியா என்னை அசிங்கமா திட்டினாங்க. அதனாலதான்  அவங்ககிட்ட பேசமாட்டேனு சொன்னேன். ஒருதடவை கதவைத் தட்டி ஓவியாட்ட பேசணும்னு கூப்பிட்டேன். அப்போ வீட்ல உள்ளவங்க எல்லோரும், 'அவங்க  உன் மேல கோபமா இருக்காங்க. இப்போ பேசாத'னு சொல்லிட்டாங்க. அந்த ஒருவாரம் அப்படியே போச்சு."

"உங்களை ரெட் கார்பெட்ல வெச்ச விஷயம் பத்தி"

"எதுக்கெடுத்தாலும் நடிக்கிறேன்னு அத்தனை பிரபலங்களும் சொல்றாங்க. ஒரு மனுஷன் எத்தனை நாளைக்குத்தான் நடிக்க முடியும்? ஓவியாவுக்கு என்னை ரெட் கார்பெட்ல உட்காரவெச்சு இழுத்துட்டுப் போறதுக்கு இஷ்டம்  இல்லைனு சொல்லியிருந்தா அப்பயே விட்டிருப்பேன். எனக்கு எதுவுமே பெருசா தெரிஞ்சுருக்காது. அந்த சமயத்துல, ‘ஊரே உன்னைப்பார்த்து காரித் துப்பப்போகுது'னு ஓவியா அடிக்கடி சொல்லிட்டு இருந்தாங்க. அப்படிச் சொல்றவங்ககிட்ட எப்படி நான் பேச முடியும்?. அந்த வீட்டுக்குள்ள நான் எங்க இருந்தாலும் திட்டுறதுக்கு நாலு பேர் இருக்காங்க. ஓவியாவுக்கு உறுதுணையா இருந்திருந்தா, எனக்கு மக்கள் சப்போர்ட் கிடைச்சுருக்கும். ஆனா, ஓவியா, ஆரவ்வோட நெருக்கமா இருப்பாங்க. நான் அப்போ யார்கூட இருக்க முடியும்? உண்மையிலேயே வீட்டுக்குள்ள என்னை சப்போர்ட் பண்றதுக்கு ஆளே இல்ல. ஓவியா மன அழுத்தத்துக்கு ஆளாகி வெளிய வந்துட்டாங்க. அப்போ சினேகன், காயத்திரி எல்லோரும் ஆறுதல் சொல்லி அவங்கள வெளிய அனுப்புனாங்க. ஒருவேளை நான் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தா எனக்கு யாரு ஆறுதல் சொல்லிருப்பா? உள்ள இருந்தப்போ எவ்வளவு வேதனை இருந்துச்சுனு எனக்கு மட்டும்தான் தெரியும். கோவையா ஒருசில விஷயங்களைத் தொகுத்து டிவியில காமிச்சுட்டாங்க. திரைக்குப் பின்னாடி இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. இப்போ எனக்கு உள்ள இருந்ததை வேதனையைவிட வெளியே மக்கள் கொடுக்குற ரியாக்ஷன்தான் இன்னும் வேதனைக்குள்ளாக்குது."

"நீங்க ஜல்லிக்கட்டுல போராடினதை வெச்சு உங்களை ஆர்த்தியும் காயத்ரியும் கிண்டல் பண்ணினாங்களே?"

"அவங்க அப்படிப் பேசும்போது மனசு தாங்க முடியாம அழுதுட்டேன். பிக் பாஸுக்கு என்னை செலக்ட் பண்ணும்போது இதைப்பத்தியெல்லாம் பேச மாட்டாங்கனு சொல்லித்தான் செலக்ட் பண்ணினாங்க. ஆனா, உள்ள வந்துப் பார்த்தா இதைப்பத்தி மட்டும்தான் அவங்க பேசிட்டு இருந்தாங்க. அதுவும் குறிப்பா என்னை மட்டுமே குறிவச்சுத் தாக்கினாங்க. எல்லோரும் நம்ம குடும்பம்னு நெனச்சேன். ஆனா எல்லோரும் எனக்கெதிரா செயல்பட்டது ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு."

"காயத்ரி உங்களைத் தூண்டிவிட்டாங்கனு வெளியில உள்ளவங்க சொன்னாங்க. அதை நீங்க உணர்ந்தீங்களா?"

"அவங்களோட தாக்கம் சில இடங்கள்ல அதிகமா இருந்துச்சு. ஆனா, வெளிப்படையா  எதிர்த்து என்னால பேச முடியல. மீறிப் பேசுனா எனக்கு எதிரா எல்லோரும் செயல்பட ஆரம்பிச்சுருவாங்க. அப்படி  நடந்தாலும், மக்கள் நமக்கு ஓட்டுப்போட்டு காப்பாத்துவாங்கதான். ஆனா, அதுவரைக்கும் மனஅழுத்தத்துக்கு ஆளாகுறது நான் மட்டும்தானே? நான் அங்க போனது ஜெயிக்கணும்ன்ற நோக்கத்துலதான். அந்த எண்ணம் உள்ள எல்லோருமே கடைசிவரை போராடி நிக்கணும்னு நெனப்பாங்க. அதனால சில விஷயங்களை மாமியார் வீடு மாதிரி சகிச்சுக்கிட்டு போகவேண்டிய நிலைமை இருந்துச்சு."

"பெரும்பான்மை எங்க இருக்குதோ அங்கபோய் சேரலாம்னு நெனைச்சுத்தான் நீங்க ஓவியாவுக்கு எதிரான அணியில் சேர்ந்தீங்களா?"

"ஆமா. அப்படி இருந்தாத்தான் வீட்டுக்குள்ள பிழைத்திருக்க முடியும். அவங்களை அட்ஜெஸ்ட் பண்ணிட்டு இருந்தா நாமினேஷன்லயே வரமாட்டோம். அப்போ எலிமினேஷனுக்கான வாய்ப்புகளும் கம்மி. அதனால்தான் பெரும்பான்மை இருந்த இடத்துல நானும் இருந்தேன்."

"பரணி வெளியேறும்போது நீங்க ஏன் தடுக்கலை?"

"நிறையபேர் பரணியைப் பற்றி தப்பாவே சொல்லிட்டு இருந்தாங்க. சுத்தி இருக்குறவங்க ஒருத்தவங்களைப் பற்றி எப்பவும் தவறா சொல்லிட்டு இருக்கும்போது, நீங்களே ஒருகட்டத்துல அவங்கள தப்பா நெனைக்க ஆரம்பிச்சுடுவீங்க. எல்லோரும், ‘உங்க அண்ணா உன்னைத் தவறான நோக்கத்துல பார்க்குறார். நீ அவர்கிட்ட பேசாதே’னு சொல்லும்போது என்ன செய்ய முடியும்? அதேமாதிரி ஒருசில விஷயங்கள் அவரைக் குற்றவாளின்னு சொல்ற மாதிரியே நடந்துச்சு. அவங்க பேச்சையெல்லாம் மீறி நான் பரணி அண்ணன்கிட்ட போய் பேசும்போது அவர் காதுகொடுத்து கேக்கல. அதான் வெளிய வந்ததும் மனசு தாங்க முடியாம அவர் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டுட்டேன்."

"வீட்டைவிட்டு வெளியே வந்ததுக்கு அப்பறம் எல்லோரும் எப்படி பார்க்குறாங்க?"

" நண்பர்கள் வட்டத்துல எல்லோரும் எனக்கு உறுதுணையா இருந்தாங்க. ஏன்னா எல்லோரும் சின்ன வயசுல இருந்தே என்கிட்டே பழகுறவங்க. அவங்களுக்கு உள்ள என்ன நடந்துருக்கும்னு யூகிக்க முடிஞ்சது. அதனால என்னைத் தவறா நெனக்கல. வீட்ல அம்மா அப்பாவுக்கு கொஞ்சம் மனசு கஷ்டமா இருந்துச்சு. ஆனா, என்னைப்பற்றி அவங்களுக்குத் தெரியும். 

சோஷியல் மீடியாவுல மீம்ஸ் போட்டு கலாய்ச்ச மக்களை நெனச்சாதான் கஷ்டமா இருக்கு. இருந்தாலும் என்னை வெச்சு மீம்ஸ் போட்டு பணம் சம்பாதிச்ச அத்தனை பேருக்கும் நன்றி. எனக்காக நேரம் செலவழித்து கமென்ட் போட்டதுக்கும் நன்றி. என்னை மட்டும் திட்டுனா பரவாயில்ல என் மொத்தக் குடும்பத்தையும் ஏன் திட்டுறீங்க? உங்களுக்கு வந்தா ரத்தம். அதே எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? (கோபப்படுகிறார்) இதையெல்லாத்தையும் மீறி எனக்காக சப்போர்ட் பண்ணின சில மக்களுக்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கேன். அவங்களுக்காகக் கூடிய சீக்கிரம் ஏதாச்சும் நல்லது பண்ணுவேன். ஓவியாவைவிட ஜூலி பேர்தான் மக்கள்ட்ட நிறைய அடிபட்டிருக்கு. இந்தக் காலத்துல புகழ் கிடைக்குறதே கஷ்டம். என்னைப்பத்தி தவறா பேசுனாலும் அதுவும் ஒருவித புகழ்தானே."

"ஆரவ்கிட்ட உங்க காதலை வெளிப்படுத்துனீங்களே... என்ன ஆச்சு?"

"ஆரவ்வோட கண்கள் என் அப்பா கண்கள் மாதிரியே இருக்கும்னு சொன்னேன். நான் சொன்ன விதம் வேணும்னா தவறா தெரிஞ்சுருக்கலாம். ஆனால் நான் வேறு எந்தக் கண்ணோட்டத்துலயும் சொல்லலை.”

"உங்க அடுத்தகட்ட திட்டம் என்ன? 

"இந்த நேரத்துல எனக்குக் கிடைத்த புகழை சரியா பயன்படுத்திக்கணும்னு நினைக்கிறேன். இப்போ பயந்து போய் ஆள் அடையாளமே தெரியாம இருந்துட்டா என்னைக் கோழைனு நெனச்சுருவாங்க. ஆங்கரிங், சினிமா, விளம்பரங்களுக்கான வாய்ப்புகள் நிறைய வந்துக்கிட்டு இருக்கு. கண்டிப்பா மீடியாவுக்கு வருவேன். ஆனா அது எப்போன்னுதான் தெரியலை."

"ஆரவ் பிக்பாஸ் டைட்டில் வின் பண்ணினது உங்களுக்கு மகிழ்ச்சியா?"

"கணேஷ் ஜெயிச்சிருந்தா  நல்லா இருந்துருக்கும். அவர் எலிமினேட் ஆனதும், ‘சினேகனா, ஆரவ்வானு போட்டி மாறுச்சு. சினேகனுக்கு  ஆரவ் எவ்வளவோ மேல். சினேகன் நல்லா கேம் விளையாடினார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்த பல பிரச்னைகளுக்கு அவர்தான் காரணம். ஸோ, ஆரவ் வென்றதற்காக நான் சந்தோஷப்படுறேன். ஆனால் யார் என்ன தவறா சொன்னாலும் அப்பவும் இப்பவும் சினேகன் என் அண்ணன்.”