Published:Updated:

முத்த யுத்தம்!

முத்த யுத்தம்!

கவிதை வரும்

மகனே... மகனே...

மகனே...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நீ

ஆசைப்பட்டதுபோல்

அழகிரியின்

பிறந்தநாளுக்கு

அல்வா

கொடுத்துவிட்டேன்....

உனக்கு

பிறந்தநாள் பரிசாக

அறிவிக்கப்போகிறேன்

இன்று ....

ஆறாவது முறையாக

முதல்வராகும்

ஆசை எனக்கில்லை

என்று....

மகனே

மறவாமல்

மறுப்பறிக்கை

கொடுத்துவிடு...

'முதல்வர் பதவி

என்றும்

கலைஞருக்கே’

என்று....

- மகிழ்வேந்தன்

முத்த யுத்தம்!

முத்த யுத்தம்!

அப்பாடா....!

ஒரு வழியாய்

முடிவுக்கு வந்தது

முத்தம் மூலம்

தீரா யுத்தம்.

இனி

இதை வைத்தே

தண்ணீர்

காட்ட வேண்டும்

பன்னீர்களுக்கு!

- க.தங்கபாபு

ஒட்டவில்லை!

ஸ்டாலின்... அழகிரி என்றாலும்

உதடுகள் ஒட்டவில்லை.

நான் கொடுக்கும் முத்தத்திலும்

என் உதடுகள் உன் முகத்தில்

ஒட்டவில்லை.

- உ. தீத்தாரப்பன்

சும்மா... உம்மா!

தளபதியாரே,

உங்களைக்

கட்சித் தலைவராக்குகிறேன்

முதலமைச்சர்

வேட்பாளராக்குகிறேன்

என்று தலைவர்

சொல்வதெல்லாம் சும்மா!

வேண்டும் என்றால்

இலவசமாக

வாங்கிக்கொள்ளுங்கள்

ஓர் உம்மா!

- வெ.பூபதி

குழந்தை..!

எனக்கு மட்டும்

ஏனப்பா....

இன்னும் நீ....

குழந்தையாகவே

தெரிகிறாய்..

- பி.கணேஷ்குமார்