Published:Updated:

இனிவரும் நாட்கள்!

இனிவரும் நாட்கள்!

இனிவரும் நாட்கள்!

இனிவரும் நாட்கள்!

Published:Updated:
இனிவரும் நாட்கள்!

''இது ஒன் அண்ட் ஒன்லி பெண்கள் மட்டுமே நடிக்கும் படம்'' என ஒன் லைன் லீட் கொடுக்கிறார், விரைவில் வெளியாக இருக்கும் 'இனிவரும் நாட்கள்’ திரைப்படத்தின் இயக்குநர் துளசிதாஸ். மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் 30-க்கும் அதிகமான மலையாளப் படங்கள் இயக்கியுள்ள துளசிதாஸுக்கு, தமிழில் இது இரண்டாவது திரைப்படம். ''நான் இன்னிக்கு சினிமாவுல இருக்கேன்னா, அதுக்கு கே.பாலச்சந்தர் மேல எனக்கு இருந்த அளவு கடந்த மரியாதைதான் காரணம். அவரோட ஊக்கம்தான் என்னை இந்த இடத்துல நிக்க வெச்சது. சொன்னா நம்ப மாட்டீங்க... நான் சினிமாவுக்கு வரக் காரணமா இருந்த கோடம்பாக்கம் மண்ணை, இப்பவும் என் வீட்டு அலமாரியில் வெச்சிருக்கேன். ஐ லவ் திஸ் தமிழ் மண்!''  குரு வணக்கத்துடன் தொடங்குகிறார் துளசிதாஸ்.

''94-ல 'வீட்டைப் பார் நாட்டைப் பார்’னு தமிழ்ல ஒரு படம் பண்ணினேன். அதுக்கப்புறம் மலையாளத்துல பிஸி ஆகிட்டேன். தமிழில் மறுபடியும் ஒரு நல்ல, தரமான, கனமான கதையோட வரணும்னு யோசிச்சப்போதான் 'இனிவரும் நாட்கள்’ கிடைச்சது. இன்னிக்கு தமிழ் சினிமாவுல நிறைய ஆரோக்கியமான மாற்றங்கள் நடந்திருக்கு. அப்படி ஒரு நல்ல முயற்சியாவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் பார்க்கக் கூடியதாவும் ஒரு தமிழ்ப்படம் பண்ண ஆசை. அதோட, பெண்மையைக் கௌரவப்படுத்துற விதமாகவும் என் படம் அமையணும்னு நினைச்சேன். எப்படினு யோசிச்சு, முழுக்க முழுக்க பெண் கதாபாத்திரங்களை வெச்சே கதையைப் பலப்படுத்தினேன். இந்தப் படத்தில் ஸ்க்ரீனில் ஒரு ஃப்ரேமில்கூட ஆண்கள் வர மாட்டாங்க. ஒரு ஆண் குரல் கூட கேட்காது. முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடிச்ச படம், 'இனி வரும் நாட்கள்’!''  ஆச்சர்யம் தந்தார் துளசிதாஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனிவரும் நாட்கள்!

''ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிக்கிற மாணவிகள் தங்களோட புராஜெக்ட்டுக்காக ஒரு ஆவணப்படம் எடுக்கப் போறாங்க. அங்க அவங்களுக்கு நடக்கிற பிரச்னைகளும், ஆண்களோட துணை இல்லாம அதிலிருந்து அவங்க எப்படி மீண்டு வர்றாங்க என்பதும்தான் கதை. சஸ்பென்ஸ், திரில்லர், ஜாலினு குடும்பத்தோட, குழந்தைகளோட பார்க்கக்கூடிய ஒரு முழு நீள என்டர்டெயின்மென்ட் படமா இது இருக்கும். இனியா, ஆர்த்தி, நதியா, அர்ச்சனா உட்பட படத்துல ஆறு ஹீரோயின்கள். நதியாவுக்கு போலீஸ் கேரக்டர். இனியா காலேஜ் ஸ்டூடன்ட்டா வர்றாங்க. இந்தப் படம் அவங்களுக்கு ஒரு ஆக்‌ஷன் என்ட்ரி கொடுக்கும். அந்தளவுக்கு க்ளைமாக்ஸ் காட்சிக்காக மலை உச்சியில ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்காங்க. 85 பர்சன்ட் வேலை முடிஞ்சிருச்சு. கூடிய சீக்கிரம் படம் ரிலீஸ். ஒரு புதுவித அனுபவத்துக்குத் தயாரா இருங்க!''  சுவாரஸ்யம் கொடுத்து விடைபெற்றுக் கொண்டார், துளசிதாஸ்.

மலை உச்சி... ஜஸ்ட் எஸ்கேப்!

இனிவரும் நாட்கள்!

'இனிவரும் நாட்கள்’ அனுபவம் பற்றிப் பேசுகிறார், இனியா. ''ப்ளஸ் டூவுக்குப் பிறகு எனக்கு காலேஜ் போற வாய்ப்பு கிடைக்கல. இப்ப கரஸ்ல பி.பி.ஏ படிக்கிறேன். ஆனா, இந்தப் பட ஷூட்டிங், கல்லூரி வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்னு என்னை அனுபவிக்க வெச்சு, ஏக்கத்தை தீர்த்திடுச்சு. இந்தப் படத்துல நடிச்ச கேர்ள்ஸ் எல்லோரும், யாரு முதல்ல மேக்கப் போட்டு ரெடி ஆகுறோம்னு போட்டியெல்லாம் வெச்சு, ஜாலியா இருந்தோம். மறக்க முடியாத தருணம்... க்ளைமாக்ஸுக்காக மலை உச்சியில காத்து பலமா வீசுற சமயத்துல கயிற்றைக் கட்டிட்டு பண்ணின ஆக்‌ஷன்ஸ் ரொம்ப த்ரில்லானது. ஜஸ்ட் எஸ்கேப்!''

பொன்.விமலா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism