Published:Updated:

6 நிமிடங்களில் 120 குரல்கள்... இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்... லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்..! - அசத்திய ஹானஸ்ட் ராஜ்

6 நிமிடங்களில் 120 குரல்கள்... இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்... லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்..! - அசத்திய ஹானஸ்ட் ராஜ்
6 நிமிடங்களில் 120 குரல்கள்... இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்... லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்..! - அசத்திய ஹானஸ்ட் ராஜ்

6 நிமிடங்களில் 120 குரல்கள்... இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்... லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்..! - அசத்திய ஹானஸ்ட் ராஜ்

“எங்க வீட்டுல எல்லோரும் தீவிரமான விஜயகாந்த் ரசிகர்கள். ஹானஸ்ட் ராஜ் படம் வந்த சமயத்துல நான் பொறந்ததால எனக்கு அந்த பேரையே எங்க அப்பா அம்மா வெச்சுட்டாங்க”ன்னு இன்ட்ரெஸ்ட்டிங் இன்ட்ரா கொடுத்து தொடங்குகிறார் சமீபத்தில் 6 நிமிடங்களில் 120 குரல்களில் பேசி ’இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்று சாதனை படைத்த ”விஜய் டிவி கலக்கப்போவது யாரு?” புகழ் ஹானஸ்ட் ராஜ். மிமிக்ரி நிகழ்ச்சிகள்ன்னு வெகுபிஸியாக சுழன்று கொண்டிருந்தவரிடம் ஓர் உணவு இடைவேளையில் பேசியபொழுது…

உங்களைப் பற்றி சொல்லுங்க..?

“சொந்த ஊர், வளர்ந்தது படிச்சது எல்லாமே திருச்சிதான். அப்பா அம்மா ரெண்டு பேருமே விவசாயம் பாக்கறாங்க. தம்பி டிப்ளமோ முடிச்சிருக்கான். நான் திருச்சில நம்ம கலாம் சார் படிச்ச புனித வளனார் கல்லூரியில எம்.எஸ்.சி முடிச்சு டீச்சர் ஆகற ஆசையில பி.எட்.டும் முடிச்சு இப்போ மிமிக்ரி ஆர்டிஸ்டா உங்க கிட்ட பேசிட்டுருக்கேன்.’’

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த உங்களுக்கு இந்த மீடியா வாழ்க்கை எப்படியிருக்கு..?

’’கலந்துகிட்ட 1700பேர்ல 9 ரவுண்டுகள்ல படிப்படியா முன்னேறி கலக்கப்போவது யாருல இறுதி வரைக்கும் வந்தேன். இப்போ ஓரளவு மக்களுக்கு என் முகம் தெரிய ஆரம்பிச்சிருக்கு. வெவ்வேறு ஊர்களுக்குப் போய் நிறைய மிமிக்ரி நிகழ்ச்சிகள் பண்ணிட்டுருக்கேன் இப்போ. நான் டீச்சர் ஆகிருந்தா கூட இவ்வளவு சந்தோஷப்பட்டுருப்பேனான்னா, நிச்சயமா இல்லைதான். சின்ன வயசுல கீழ இருந்து வியப்பா பாத்துட்டு இருந்த விமானத்துல இப்போ மிமிக்ரி பண்றதுக்காக குவைத், மலேசியா, சிங்கப்பூர்ன்னு நிறைய நாடுகள் போயிட்டு வந்தாச்சு. எங்க வீட்டுலையும் என்னால எல்லோரும் ரொம்ப ஹேப்பி. பல குரல் வித்தகர், பாவேந்தர் பாரதிதாசன் விருது, இளவட்டம் விருதுன்னு நிறைய விருதுகள் வாங்கிருக்கேன். இந்த வாழ்க்கை ரொம்பவே பிடிச்சிருக்கு.’’

மிமிக்ரி எப்படிக் கத்துக்கிட்டீங்க..?

’’கோவை குணா, மைக்கேல் அகஸ்டின், ரோபோ சங்கர், திருச்சி சரவணகுமார்ன்னு என்னோட சின்னத்திரை சீனியர்ஸ் நிறைய பேரோட மிமிக்ரிய பாத்து பாத்துதான் நானும் பண்ணக் கத்துக்கிட்டேன். மத்தவங்கள்ல இருந்து தனிச்சுத் தெரியணும்னு நான் முயற்சி பண்ணதுதான் சிங்கம்புலி, விஜய் சேதுபதி, பரோட்டா சூரியோட குரல்கள்லாம். முதல்ல அஷோக்ன்னு ஒருத்தர் 100 குரல்களை 10 நிமிஷத்துல பண்ணதுதான் ரெக்கார்டா இருந்தது. அத ப்ரேக் பண்ணி இப்போ நான் 6 நிமிஷத்துல 120 குரல்கள்னு பண்ணிருக்கேன். முழுக்க முழுக்க பயிற்சியினால மட்டுமே இது சாத்தியமாச்சு. தனி நேரம் ஒதுக்கி இந்தக் குரல்கள பயிற்சி பண்ணாம அன்றாட வாழ்க்கைல எல்லாக் குரலையும் நண்பர்கள்கிட்டையும் பேசிகிட்டுருப்பேன். பல நேரங்கள்ல இதே நினைப்போட சுத்துனதுனால ரோட்டுல போறப்பவும் தனியா இருக்கப்பவும் கூட வெவ்வேறு குரல்கள்ல பேசி பயிற்சி பண்ணிகிட்டேதான் இருப்பேன். இதனால சுத்தி இருக்கவங்களாம் என்னைய பார்த்து என்னடா இவன் பைத்தியம் மாதிரி தனியா பேசிட்டுச் சுத்தறான்னுலாம் என் காதுபடவே கேலியா பேசி சிரிச்சிருக்காங்க.’’ 

இந்தச் சாதனைக்காக உங்கள நீங்க எப்படியெல்லாம் தயார்படுத்திக்கிட்டீங்க..?

“நான் இந்த மாதிரி முயற்சி எடுக்கணும்னு முடிவு பண்ணதுமே என்னால என்னென்ன குரல்கள் எல்லாம் பேச முடியும்னு ஒரு லிஸ்ட் போட்டேன். அப்பறம் நண்பர்கள் உதவியால அதெல்லாம் வரிசபடுத்தி அவங்ககிட்ட பேசி காமிச்சு அதை மேலும் மேலும் மெருகேத்த ஆரம்பிச்சேன். ஜெயக்கிருஷ்ணன்னு ஒரு நண்பன்தான் எனக்கு இந்த விஷயத்துல ரொம்ப உதவி பண்ணான். ஒரு குரல எடுத்துக்கிட்டோம்னாலும் அந்தக் குரலோட பாடிலாங்குவேஜோட குறைஞ்சது ஒரு மாசமாவது வாழ்ந்தாதான் அந்தக் குரல் நமக்குள்ள முழுசா வரும். பெர்ஃபெக்‌ஷன் வர்றதுக்கு தினமும் விடாம பயிற்சியும் முயற்சியும் வேணும். நான் 125 குரல்களுக்கு மேல பேசுவேன்னாலும் இந்தச் சாதனை முயற்சியில 3 நொடிகளுக்கு ஒரு குரல்ன்னு வெச்சு 6 நிமிடங்கள்ல 120 குரல்கள்லதான் பேசுனேன். அதுக்கு மேல ஒரு குரல் சேர்த்தாலும் மக்களுக்கு க்ளியரா ரீச் ஆகாது.’’

சாதனை அரங்கேற்றம் எப்படி நடந்தது..?

“திருவல்லிக்கேணியில போன மாசம் ’மாயா ஈவண்ட்ஸ்’ குழு நடத்துன நிகழ்ச்சியிலதான் நான் அந்த 120 குரல்களைப் பேசி அரங்கேற்றுனேன். அப்போ அங்க வந்துருந்த ’இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் திரு. விவேக்தான் என்னோட சாதனையைப் பதிவு பண்ணாங்க. அதைத் தொடர்ந்து ’லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸும் என்னைய தேர்ந்தெடுத்துட்டாங்க. அவங்க முறைப்படி சான்றிதழ் குடுக்க குறைந்தது 6 வாரங்கள் ஆகும்ன்னு சொன்னாங்க. அதுக்காகத்தான் இப்போ காத்துட்டு இருக்கேன்.’’

வருங்கால ஆசை/ லட்சியம்?

“இப்போ ஒரு படம் பண்ணிகிட்டு இருக்கேன். சமுத்திரகனி சார், மொட்ட ராஜேந்திரன், இளவரசுனு நிறைய நட்சத்திரங்கள் இருக்கற இந்தப் படத்துல, இயக்குநர் இந்தக் கதாபாத்திரத்தை நான்தான் செய்யணும்னு உறுதியா சொல்லி இந்தப் படவாய்ப்பு எனக்குக் கொடுத்துருக்கார். இன்னும் நிறைய படங்கள்ல மக்கள் மனசுல நிக்கிற மாதிரியான கதாபாத்திரங்கள்ல நடிக்கணும். சி.எஃப்.சி.ஏனு ஒரு அமைப்புல இருந்து ஜோர்டான்னு ஒரு குடும்பம்தான் எனக்குக் கல்வி ரீதியா செலவு பண்ணி என்னைய படிக்க வெச்சாங்க. என்னைய அவங்க எப்படி படிக்க வெச்சாங்களோ அதே மாதிரி நானும் 10 பிள்ளைங்களைத் தத்தெடுத்து அவங்களுக்கான கல்விச் செலவை முழுக்க முழுக்க நானே பாத்துக்கணும்ங்கிறதுதான் என்னோட லட்சியம்” என்று பேருக்கேற்றவாறு ஹானஸ்ட்டாக பேசி முடிக்கிறார் ஹானஸ்ட் ராஜ்.

அடுத்த கட்டுரைக்கு