Published:Updated:

மீண்டும் ரிலீஸாகும் தரமணி..! - தயாரிப்பாளர் அறிவிப்பு

பா.ஜான்ஸன்
மீண்டும் ரிலீஸாகும் தரமணி..! - தயாரிப்பாளர் அறிவிப்பு
மீண்டும் ரிலீஸாகும் தரமணி..! - தயாரிப்பாளர் அறிவிப்பு

ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா நடித்து வெளியான படம் `தரமணி'. மிகத் தாமதமாக வெளியானாலும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. 

படத்திற்கு அதிகமாக கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்களால் மூன்று வாரங்களுக்கும் அதிகமாக ஓடிய படம், புதிய படங்களின் வருகை காரணமாக காட்சிகள் நிறுத்தப்பட்டது. தற்போது வரி விதிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வேலை நிறுத்தத்தால் புதிய படங்கள் வெளியாவது நிறுத்தப்பட்டிருந்தது. சென்ற வாரம் வெளியான 'சோலோ' படம் கூட ஒரு நாள் ஓடிய நிலையில், அடுத்த நாளில் இருந்து காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது புதிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் கிடைக்கும் இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்தும் விதமாக 'தரமணி' மீண்டும் திரையரங்கில் திரையிடப்பட இருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் இது குறித்து படத்தின் மறுவெளியீட்டு போஸ்டருடன் ட்விட்டரில் படம் மீண்டும் வெளியாகும் என்ற தகவலை பதிவு செய்திருந்தார்.