Published:Updated:

"இப்போ விஜய்க்கு பையன்... நெக்ஸ்ட் ஹீரோ!’’ - குஷி `மெர்சல்' அக்‌ஷித்

"இப்போ விஜய்க்கு பையன்... நெக்ஸ்ட்  ஹீரோ!’’ - குஷி `மெர்சல்' அக்‌ஷித்
"இப்போ விஜய்க்கு பையன்... நெக்ஸ்ட் ஹீரோ!’’ - குஷி `மெர்சல்' அக்‌ஷித்

"இப்போ விஜய்க்கு பையன்... நெக்ஸ்ட் ஹீரோ!’’ - குஷி `மெர்சல்' அக்‌ஷித்

"என்னா இளையதளபதி எப்பிடி இருக்கீங்க?" எனக் கேட்டால், சிரிப்பை மட்டும் பதிலாகக் கொடுக்கிறார் அந்த சுட்டி. "இப்ப என்னக் கண்டுபிடிங்க பார்ப்போம்" என ஸ்க்ரீனுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது, ஸ்டுடியோவுக்குள்ளேயே ஓடியாடி திரிவது என அந்த வயதுக்குரிய அத்தனை துறுதுறுப்பும் குறும்புமாக றெக்கை இல்லாமலேயே பறக்கிறார். `மெர்சல்' படத்தில் சிறு வயது விஜயாக "ஐஸு... அதெல்லாம் செட்டாகாது ஐஸு" என க்யூட் பெர்ஃபாமென்ஸ் காட்டியவரிடம் பேச்சுக் கொடுத்தால் "நானெல்லாம் ஒன் டேக் ஆர்டிஸ்ட், வேணும்மா கேள்வி கேளுங்க பார்ப்போம்" என ரெடியாகிறார். 

"யாரு தம்பி நீங்க?"

"என்னோட பேரு அக்‌ஷத். நான் ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்ட் படிக்கிறேன்."

"விஜயுடன் நடித்தது எப்படி இருந்தது?"

"ரொம்ப ஹேப்பியா இருந்தது. எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். `மெர்சல்' படத்துல அவர் பேசுற டயலாக்லாம் பேசிட்டே இருப்பேன். `சிட்டுக்குருவி'னு ஒரு பாட்டிய கொஞ்சுவார்ல. அது எனக்கு ஃபேவரைட். எல்லாத்தையும் பத்தி சொல்லணும்னா 40 நாள் ஆகும். ஏன்னா ஒவ்வொரு நாளும் பத்தி சொல்றதுக்கு 40 நாள் ஆகும்ல. ஆடியோ லான்ச் சமயத்துல என்ன கட்டிப் பிடிச்சு கிஸ் கொடுத்தாங்க."

"க்யூட்டா நடிச்சிருக்கீங்களே, யார் சொல்லிக் கொடுத்தாங்க?"

"நான் ஒரு ராம்ப் வாக் ஷோல கலந்துகிட்டேன். அப்போ என் அப்பாவுடைய ஃப்ரெண்ட் பாத்திட்டு அவர் மூலமா ஆடிஷன்ல கலந்துக்கும் வாய்ப்பு வந்தது. நான் கலந்துகிட்டு நடிச்சுக் காமிச்சேன். உடனே செலக்ட் ஆகிட்டேன். விமலேஷ் அண்ணா, அபி அண்ணா எல்லாம் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. நான் அதுக்கு முன்னால ஒரு விளம்பரம் நடிச்சிருக்கேன். ஆனா, சினிமால நடிச்சது புதுசா இருந்தது. முதல் நாள்ல இருந்தே எல்லாரும் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க."

"படத்துல டயலாக் பேசறதெல்லாம் எப்படி கத்துக்கிட்டீங்க?"

"எனக்கு டயலாக் எல்லாம் ரொம்பக் குட்டியாதான் இருக்கும். `ஐஸு... அதெல்லாம் செட்டாகாது ஐஸு', அப்பறம் விஜய் அங்கிள `ஐயா'னு கூப்பிடறது, `தம்பி எப்பப்பா வருவான்?'னு சின்னச் சின்ன டயலாக்தான். படத்துல `எனக்கு ஐஸ பாக்கணும்'னு சொல்லிட்டு ஓடுவேன்ல, அந்த ஷாட் நடிக்கும் போது ஒரே டேக்ல ஓகே ஆகிடுச்சு. அப்பறம் பாட்டில் விழற சீனுக்கு நிறைய ட்ரைனிங் எடுத்துட்டு நடிச்சேன்." 

"அடுத்து ஒரு படம் நடிக்கறீங்களாமே?"

"ஆமா" உங்க கூட யாரெல்லாம் நடிக்கறாங்க எனக் கேட்டதும். "அந்தப் படத்தில் ஹீரோவே நான்தான். அது ஒரு ஃபேன்டசி படம்" 

"உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் படம் பார்த்திட்டு என்ன சொன்னாங்க?"

அவங்க இன்னும் பாக்கலா, நாளைக்குதான் கூட்டிட்டுப் போகப் போறேன். 

"உங்களுக்கு நிறைய கிஃப்ட் எல்லாம் வந்ததாமே?"

"விஜய் அங்கிள் எனக்கு, கார், பஸில், ஒரு பெரிய நாய்க்குட்டி பொம்மை, ஃபுட்பால்னு கிஃப்ட் கொடுத்தாங்க. அட்லி அங்கிளும் கொடுத்தாங்க. என்னோட பிறந்தநாள் வந்தப்போ விஜய் அங்கிள மீட் பண்ணேன். ரொம்ப ஹேப்பியா இருந்தது."

"சினிமால என்ன ஆகப் போறீங்க?"

"நான் பெரிய ஹீரோ ஆகப் போறேன், விஜய் அங்கிள் மாதிரி."

பாட்டு சூப்பரா பாடுவீங்களாமே எனக் கேட்டதும்... ஆளப் போறான் தமிழன் முடித்து, மாச்சோ பாடலை, "நாச்சோ... மேச்சாச்சோ... சிச்சிச்சா சிச்சிச்சாச்சோ" என மழலை குரலில் பாட அழகாய் முடிந்தது அந்த உரையாடல். 

அடுத்த கட்டுரைக்கு