Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மெர்சல்'ல இந்த 5 லாஜிக் மிஸ்டேக்குளை மறந்துட்டீங்களே அட்லி!

மெர்சல் - தமிழ்நாட்டை மட்டுமில்லை, இந்தியாவையே இந்த ஃபீவர்தான் பிடித்தாட்டிக்கொண்டிருக்கிறது. படத்தைச் சுற்றிவரும் அரசியல் களேபரங்கள் ஒருபுறம் இருக்கட்டும். படத்தில் இருக்கும் சில லாஜிக் உறுத்தல்களை மட்டும் இப்போது பார்ப்போம். மெர்சல் இயக்குநருக்கு சராசரி சினிமா ரசிகனாகச் சில கேள்விகள்.

லாஜிக் குளறுபடிகள் :

மெர்சல்

முதல் விஷயம், டாக்டர் மாறன் சூப்பர் சர்ஜன் என்றெல்லாம் பில்டப் கொடுத்து அறிமுகப்படுத்தப்படுவார். ஆனால், அவர் படித்திருப்பதோ எம்.டி. நியாயப்படி பார்த்தால் எம்.எஸ் படித்தவர்தானே சர்ஜரி செய்ய கத்தியைக் கையில் எடுக்க முடியும்? வாட் ப்ரோ.

சரி, இரண்டாவது மேட்டருக்கு வருவோம். ஃப்ளாஷ்பேக்கில், மெயின் வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யாவுக்குப் பக்கபலமாக அவரின் அத்தனை குற்றங்களுக்கும் துணை நிற்பார் 'விக்ரம் வேதா' புகழ் சேட்டா. எஸ்.ஜே.சூர்யா டி.வியில் விஜய்யை அடையாளம் கண்டுகொள்ளும்போது, விருது விழாவில் விஜயை நேரில் பார்த்த சேட்டாவுக்கு மட்டும் அடையாளம் தெரியாமல் போவதெப்படி? மாறனைப் பார்த்து சிறு சந்தேகமாவது எழ வேண்டும். ஆனால், எந்தவொரு சந்தேகமும், அதிர்ச்சியும் இன்றி இயல்பாக அவருடன் உரையாடுவது பெரிய லாஜிக் குளறுபடிக்கான கேள்வியை எழுப்புகிறது.  

அதே ஃப்ளாஷ்பேக்கில் எஸ்.ஜே.சூர்யா - விஜய் இருவரின் கடைசி நேர உரையாடலைக் கேட்டுக்கொண்டிருப்பவர் வடிவேலு. அவரை மையமாக வைத்துதான் ஒட்டுமொத்த `மெர்சல்' படத்தின் கதையும் நகரும். குப்பையில் இருக்கும் இரண்டாவது விஜய்யுடன் இவர் எப்படிக் கூட்டு சேர்ந்தார் என்பதும் கேள்விக்குறியை எழுப்புகிறது. அவர்  உயிருடன் இருக்கிறாரா... இல்லையா என்ற கேள்விக்கு பதில் வடிவேலுவுக்கே தெரியாது. அப்படி இருக்கையில், வடிவேலுவுக்கு எப்படி அந்த விஜயைத் தெரிந்தது என்ற சந்தேகம், படம் பார்த்த எல்லா ரசிகர்களுக்குமே இருக்கிறது. 

மருத்துவராக வரும் விஜய் சாதுவா இல்லை சண்டை போடும் மெர்சலான ஆட்டக்காரரா என்ற குழப்பம் கதை முழுக்க பயணிக்கிறது. விமான நிலையத்தில் எகிறிக்குதித்து சண்டை எல்லாம் போட்டு சாகசம் செய்யும் மாறன் இடைவேளைக்கு முந்தைய காட்சியில் வில்லன் ஆட்களிடம் தாறுமாறாக அடி வாங்குவார். அதன்பின் க்ளைமேக்ஸில் திரும்ப பொளந்துகட்டுவார். அவரு சாதுவா ஜித்து ஜில்லாடியா பாஸ்?

மெர்சல்

பார்வையாளர்களை ஏமாற்றி தந்திரத்தால் செய்யப்படுவதே மேஜிக். ஆனால், மேஜிக்மேனாக வரும் விஜய் பல இடங்களில் அதை ஃபேன்டசியாக உபயோகிக்கிறார். காமெடிக் காட்சிகளில் வித்தையைப் பயன்படுத்தியது கண்களை உறுத்தாமல் இருந்தாலும், சீரியஸான சில சீன்களுக்கும் லாஜிக் இல்லா மேஜிக் தேவைதானா என்று தோன்றுகிறது. அதிலும் முக்கியமாக ஹேண்ட்பேக்கிலிருந்து சூலம் எடுக்கும் காட்சி. எவ்வளவு பெரிய மேஜிக்மேனாக இருந்தாலும் அவருக்கே உரிய க்ரவுண்டில் மட்டும்தான் வித்தைகள் காட்டுவார். எந்தவித முன்னேற்பாடுமின்றி எல்லா இடங்களிலும் விஜய் மேஜிக் செய்வது எப்படி? இதெல்லாம் நம்புற மாதியா இருக்கு?

இதுமாதிரி பல லாஜிக் மிஸ்டேக்குகள் படத்தில் நிரம்பிவழிகின்றன. மூன்று திரைக்கதையாசிரியர்களால் உருவான இந்தக் குளறுபடிகளை மூன்று வேடங்களில் வரும் விஜயால் மறக்கடிக்க முடிகிறது என்பதுதான் மெர்சலின் வெற்றி. விஜய்யின் எனர்ஜி, அட்லீயின் கமர்ஷியல் பேக்கேஜ், அரசியல் வசனங்கள், அதனால் மூக்கு சிவந்துபோன பா.ஜ.க போன்றவையே மெர்சல் வெற்றிக்கு முக்கிய காரணங்கள். Peace ப்ரோ!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்