Election bannerElection banner
Published:Updated:

கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளித்த குடும்பத்தினரை காவல்துறை மிரட்டும் ஆடியோ..! #KanthuVatti

கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளித்த குடும்பத்தினரை காவல்துறை மிரட்டும் ஆடியோ..! #KanthuVatti
கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளித்த குடும்பத்தினரை காவல்துறை மிரட்டும் ஆடியோ..! #KanthuVatti

கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளித்த குடும்பத்தினரை காவல்துறை மிரட்டும் ஆடியோ..! #KanthuVatti

கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளித்த குடும்பத்தின் தலைவரான இசக்கிமுத்துவை, காவல்துறையினர் மிரட்டிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, கந்துவட்டிக் கொடுமை காரணமாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார். இதில், சுப்புலட்சுமியும் இரு பச்சிளம் குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி பலியானதால், பெரும் சோகம் உருவாகி இருக்கிறது. கந்துவட்டிக் கொடுமை காரணமாக 5 முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியர்மீது கண்டனம் குவிந்துவருகிறது.

நெல்லை மாவட்ட எஸ்.பி-யிடம் தனியாக ஒரு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இசக்கிமுத்துவின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், இசக்கிமுத்துவை அச்சன்புதூர் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டரும் ஏட்டு ஒருவரும் மிரட்டி இருக்கிறார்கள். கந்துவட்டிக் கும்பலுக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டதாக, பலியான சுப்புலட்சுமியின் உறவினர்கள் கூறுகிறார்கள். 

இந்த நிலையில், தீக்குளித்த இசக்கிமுத்துவிடம் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் போனில் பேசும் ஆடியோ வெளியாகி இருக்கிறது. அதில் பேசும் அதிகாரி, ‘ஏய்.. நீ முத்துலட்சுமியிடம் கடன் வாங்கியிருகே. அதை மரியாதையா குடுத்துடு..’ என மிரட்டுகிறார். இசக்கிமுத்து அவரிடம், ’நான் அவரிடம் வாங்கிய பணத்தை வட்டியுடன் கொடுத்துவிட்டேன்’ என்று சொல்லவும், மீண்டும் அவரை அந்த அதிகாரி வாய்க்கு வந்தபடி திட்டுவதுடன், உடனடியாக காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு வர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கிறார்.

இசக்கிமுத்து, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்ததைப் பற்றிச் சொல்லும் அந்த அதிகாரி, ‘ஏலே.. நீ எங்க போயி மனு கொடுத்தாலும் இங்கதான் வரும். நாங்கதான் விசாரிக்கணும். ஒழுங்கு மரியாதையா விசாரணைக்கு வந்து சேர்’ என மிரட்டல் விடுக்கிறார். இதுபோன்று அச்சன்புதூர் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு, பெண் காவலர் ஆகியோர் பேசிய பல ஆடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆடியோ வைரலாகப் பரவிவருவதால், காவல்துறையினர் கலக்கத்தில் உள்ளனர். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு