Election bannerElection banner
Published:Updated:

’’தான்யான்னா தைரியம்... தாத்தான்னா அர்ப்பணிப்பு... விஜய் சேதுபதின்னா..?!’’ - தான்யா

’’தான்யான்னா தைரியம்... தாத்தான்னா அர்ப்பணிப்பு... விஜய் சேதுபதின்னா..?!’’ - தான்யா
’’தான்யான்னா தைரியம்... தாத்தான்னா அர்ப்பணிப்பு... விஜய் சேதுபதின்னா..?!’’ - தான்யா

’’தான்யான்னா தைரியம்... தாத்தான்னா அர்ப்பணிப்பு... விஜய் சேதுபதின்னா..?!’’ - தான்யா

அற்புத அழகும் அபாரமான நடிப்புத் திறமையும் நிறைந்த அழகுச் சிலைகளை கதாநாயகிகளாக தத்தெடுத்துக்கொள்வதில் தமிழ் திரையுலகம் தாமதிப்பதே இல்லை. படக் காட்சிகளைப் புரிந்துகொண்டு உணர்வுகளை சரியான அளவில் வெளிப்படுத்தி தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் இன்றைய கதாநாயகிகளில் `கருப்பன்' பட நாயகி தான்யா தனிரகம். தான்யாவின் சினிமா புரொஃபைல் அப்டேட்...

``தான்யா யார்?''

``தனிப்பட்ட முறையில தான்யா ரொம்ப அமைதியான, ரிசர்வான, ஃபேன்ஷியான பொண்ணு. அதேசமயம் களத்துக்கு வந்துட்டா  கப் வாங்காம இறங்க மாட்டேன். பார்க்க அமைதியாத்தான் இருப்பேன். பொறுப்பை ஏத்துக்கிட்டா  நெருப்பா கிளப்பிடுவேன். புது இடங்கள், அறிமுகம் இல்லாத நபர்கள்னு வித்தியாசமான நிகழ்வுகளின்போது உள்ளுக்குள்ளே லேசா பயம் இருந்தாலும், எனக்கு நானே தைரியம் சொல்லிப்பேன். அந்தத் தைரியமும் நம்பிக்கையும்தான் இந்த தான்யா.''

``தான்யாவுக்கு சினிமா மீது ஆர்வம் வரக் காரணம்?''

``சினிமா குடும்பங்கிறனாலயா இப்போதைய யதார்த்தமான திரைப்படங்களைத் தொடர்ந்து பார்க்கிறனாலயா என்னன்னு கரெக்டா சொல்லத் தெரியலை. சினிமான்னாலே எனக்கு தனி குஷிதான். பேசிக்கலி நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். ஸ்டேஜ் பர்ஃபாமன்ஸ் நிறைய செஞ்சிருக்கேன். சென்னையில் காலேஜ் படிச்சு முடித்ததும் `சம்யுக்தம்'ங்கிற குறும்படத்துல நடிச்சேன். என் நடிப்பைப் பார்த்த என் ஃப்ரெண்ட்ஸ்தான் என்னை உற்சாகப்படுத்தினாங்க. அப்பதான் சினிமா மீது எனக்கு தனி இன்ட்ரஸ்ட் ஏற்பட்டுச்சு. உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா... நான் சினிமாவுல நடிக்கப்போறேன்னு சொன்னதும், `என்னம்மா... தாத்தாவோட திரைப் பயணத்தை நீ தொடரப்போறியா? அப்போ அவர் கதாநாயகனா வந்தார்னா அந்தக் காலம் வேற... இப்ப இருக்கும் காலம் வேற. போ... போயி படிப்பை முழுசா முடிக்கிற வேலையைப் பாரு'னு செம அட்வைஸ் மழை! யார் என்ன சொன்னாலும், சினிமாவுல நடிக்கணும்கிறது  என் பேஷன், ஆசை, விருப்பம். அதுக்காக பேரன்ட்கிட்ட டெய்லி  செம ஆர்கியுமென்ட் நடக்கும். நம்ம தேவைக்கு நாமதானே போராடணும். அதனால, சினிமா... சினிமா... சினிமா... என் வாழ்க்கையே இப்போதைக்கு சினிமாதான்னு அழுத்தமா சொல்லச் சொல்ல, இந்தப் பொண்ணு தொல்லை தாங்க முடியாம, ஒரு கட்டத்துல சரி, பண்ணுனு சொல்லிட்டாங்க. அப்ப ஆரம்பிச்ச சினிமா ஜர்னி, இப்பதான் டேக் ஆஃப் ஆகத் தொடங்கியிருக்கு.''

``முதல் படம் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?''

``காலேஜ் முடிச்சுட்டு சினிமாவுக்கான வாய்ப்புகளுக்காகக் காத்திட்டிருந்தப்போ, ஸ்க்ரீன் டெஸ்ட்டுக்காக முதன்முதல்ல மிஷ்கின் சார்தான் என்னைக் கூப்பிட்டார். டெஸ்டும் எடுத்தாங்க. என்ன கதை, என்ன கேரக்டர், எப்படியெல்லாம் நடிக்கணும், அதுக்கு என்னெவெல்லாம் ஹோம்வொர்க் பண்ணணும்னு ப்ளான் போட்டு ஷூட்டிங் நாளுக்காக செம ஃபார்ம்ல இருந்தேன். என்ன காரணமோ, என்ன பின்னணியோ தெரியலை அந்தப் படம் அப்படியே நின்னுபோச்சு.  அதுக்குப் பிறகு ராதாமோகன் சார் அறிமுகம் கிடைச்சது.  `பிருந்தாவனம்' கதையைச் சொன்னார். திரும்பவும் அதே மாதிரி போட்டோ ஷூட், சீன், கேரக்டர், ப்ளான்னு ரெடியாகி, வெற்றிகரமா என் முதல் படத்தை நடிச்சு முடிச்சேன். அந்த இடைவெளியிலதான் `பலே வெள்ளையத்தேவா' கமிட்டாச்சு. `பிருந்தாவனம்' படம் முடிஞ்சு ரெடியா இருந்தாலும், `பலே வெள்ளையத்தேவா' கமிட்டான வேகத்துலேயே சரசரன்னு வளர்ந்து ரிலீஸ் ஆகிடுச்சு. அடுத்து `கருப்பன்' படம் ரிலீஸ் ஆச்சு. இனிமே பாருங்க, இந்த தான்யா தனியா தெரிவா.''

``உங்களுடைய முதல் படத்துக்காக உங்களை எப்படி ரெடி பண்ணிக்கிட்டீங்க?''

``கோலிவுட்ல கோல் அடிக்கணும்னு முடிவுபண்ணதும் நான் பண்ணின முதல் வேலை, இன்றைய தமிழ் படங்கள் எல்லாத்தையும் பார்க்கிறதுதான். யார் யார் எப்படி நடிக்கிறாங்க, எங்கெங்கெல்லாம் எப்படிப் பேசுறாங்க, எந்தக் காட்சியில் எப்படி நடிச்சிருக்காங்க, அந்த நடிப்பு மக்களுக்கு சரியான முறையில கன்வே ஆச்சான்னு எனக்கு நானே ஜஸ்டிஃபை பண்ணிப்பேன். அந்த மாதிரி யோசிச்சு முடிவெடுத்தது, நான் நடிக்கும்போது இதை இப்படித்தான் செய்யணும், இதுக்கு இப்படி நடிக்கணும், இப்படிப் பேசணும் ஈஸியா நடிக்க ரொம்ப உதவியா இருந்தது.

தாத்தா ரவிச்சந்திரன் நடிச்ச படங்களும் எனக்கு உதவியா இருந்தது. அஃப்கோர்ஸ் அதெல்லாம் பழைய படங்களா இருந்தாகூட, தமிழை எப்படி சுத்தமா பேசுறதுன்னும், எந்த வார்த்தைக்கு எப்படி ரியாக்ட் பண்ணணும்னு தெரிஞ்சுக்க தாத்தா படங்கள்தான் எனக்கு கைடா இருந்தது.

'பிருந்தாவனம்' படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு  முன்னாடி, ராதாமோகன் சார் எங்களுக்காக ஒரு நடிப்புப் பட்டறையை ஆரம்பிச்சார். அங்கேதான் கேமரா முன்னாடி எப்படி நிற்கணும், எப்படி லைட் வாங்கணும், கேமராமேன் குறிச்ச மார்க்ல எப்படி கரெக்டா வரணும், நாம பேசக்கூடிய வசனத்தை முன்னாடியே வாங்கிப் படிச்சுட்டு எப்படி ஏற்ற இறக்கத்தோடு பேசணும், எங்கெல்லாம் ஓவர் ஆக்டிங் தேவை/ தேவையில்லை, பேசாமலேயே முகபாவத்துல எப்படி நடிக்கிறதுன்னு ஒரு கதாநாயகிக்குத் தேவையான அத்தனை சூட்சுமங்களையும் அந்த நடிப்புப் பட்டறையில்தான் கத்துக்கிட்டேன். படத்தில் நடிக்கும்போது, இதெல்லாம் எனக்கு ரொம்ப ஹெல்ப்ஃபுல்லாயிருந்தது .''

``முதல் நாள் ஷூட்...''

``செம இன்ட்ரஸ்ட்டிங் டே. முதல் நாள் ஷூட் எப்படி இருக்குமோ, என்ன டயலாக் பேச சொல்வாங்களோ, அதுக்கு நாம எப்படி நடிக்கப்போறோமோன்னு எனக்குள்ளேயே பல ரீல்ஸ் ஓடுச்சு. ஆனா, ராதாமோகன் சாரோட அந்த கேரிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. எந்த மாடுலேஷன்ல டயலாக் பேசணும், காட்சிக்குரிய பாடி லாங்வேஜ் எப்படி இருக்கணும், அதீதமான நடிப்பை வெளிப்படுத்தாம அளவான நடிப்புல உணர்வுகளை எப்படி வெளிக்காட்டுறதுன்னு சொல்லிக்கொடுத்தார்.  அவரை மாதிரி ஒரு ட்யூட்டர் இருந்தார்னா, என்னை மாதிரி என்ன... சினிமா பின்னணியே இல்லாத எந்த ஒரு பொண்ணும் ஹீரோயினா நடிக்க முடியும்.''

`` `கருப்பன்' ஷூட்டிங்கின்போது விஜய் சேதுபதி என்ன சொன்னார்?''

``விஜய் சேதுபதின்னா யதார்த்தம். அந்தக் காலம் மாதிரி, ஓவர் ஆக்டிங் இல்லாம, நடிப்பை கரெக்டா பிரெசன்ட் பண்ற சூப்பர் ஹீரோ! `கருப்பன்' படத்துல பல சீன்கள் அவரோட கைடன்ஸ்லதான் நடிக்க முடிஞ்சுது. ரொம்பப் பொறுமையா இந்த இடத்துல  இப்படி ரியாக்ட் பண்ணுங்க, எக்ஸ்பிரஷன்ஸ் கொடுக்கும்போது கண்களை நல்லா ஓப்பன் பண்ணி பர்ஃபாம் பண்ணுங்கன்னு சின்னச் சின்ன ஹின்ட்ஸ் கொடுத்துக்கிட்டே இருப்பார். `கருப்பன்' பிரிவ்யூ பார்த்துட்டு, `மண் மணம் மாறாத பொண்ணா வாழ்ந்திருக்கே!'ன்னு என்னைப் பாராட்டினார். பாராட்டுதானே ஒரு ஆர்டிஸ்ட்டுக்கு ரொம்ப முக்கியம்.  யெஸ்... யெஸ்... ஐ வென்ட் டு ஒன்மோர் ஸ்டெப் இன் மை லைஃப்!''

``தாத்தா ரவிச்சந்திரன் நடித்த படங்களில் பிடித்த படங்கள்?

``என் தாத்தா ரவிச்சந்திரன், தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவர். தாத்தா நடிச்ச `காதலிக்க நேரமில்லை', `அதே கண்கள்'  `நான்' போன்ற படங்கள்தான் என் ஆல் டைம் ஃபேவரைட்.''

``தான்யாவுக்கு நடிப்பைத் தவிர வேறு எதில் ஈடுபாடு?''

``இப்போதைக்கு நடிப்புதான். அதைத் தவிரன்னா, டெய்லி வொர்க் அவுட், மூவீஸ் பார்ப்பேன், புக்ஸ் படிப்பேன், ஃப்ரெண்ஸ்களோடு வெளியே போவேன். முக்கியமா தூக்குவேன் (மனம் திறந்த சிரிப்பை உதிர்த்தபடி), நல்லா சாப்பிடுவேன்.''

``உங்களின் ஃபிட்னஸ் ரகசியம்?''

``ரகசியமெல்லாம் ஒண்ணுமில்லை. வொர்க் அவுட் பண்ணுவேன். தேவையில்லாததை எடுத்துக்க மாட்டேன். பசிச்சா சாப்பிடுவேன். மற்றபடி அது சாப்பிட மாட்டேன்... இது சாப்பிட மாட்டேன்னு எல்லாம் எந்த ரிஸ்ட்ரெக்‌ஷனும் கிடையாது. நமக்கு எது எப்ப தேவையோ அதை அப்ப சாப்பிடுவேன். (அஸ்கி வாய்ஸில்) ரகசியம்னு கேட்டதால சொல்றேன்... ஆயில், சீஸ் கலந்த சாப்பாட்டைக் கொஞ்சம் குறைச்சலா எடுத்துப்பேன் அவ்வளவுதான்.''

ப்ளஸ், மைனஸ்..?

‘’ப்ளஸ் பற்றி சொல்லணும்னா, இந்தப் பேட்டியில தனி பக்கமே போடலாம். கமிட்மென்ட், ஹார்டுவொர்க், சின்சியர்னு சொல்லிக்கிட்டே போகலாம். மைனஸ்... ( மிகுந்த யோசனைக்குப் பிறகு) ஆங்... சாப்பாடு. நல்லா சாப்பிடுவேன். ஒன்லி வெஜ். இப்பெல்லாம் விருப்பமான சில உணவு பொருள்களை போதுமான அளவுக்கு சாப்பிட முடியுறதில்லை. அதான், அப்பப்போ ஃபீலிங் எட்டிப்பார்க்கும்.''

``உங்க நடிப்பைப் பார்த்துட்டு உங்க ஃபேமிலி என்ன சொன்னாங்க?''

``முதல் படத்துல என் நடிப்பைப் பார்த்தப்போ பாராட்டாத என் ஃபேமிலி, `கருப்பன்' படத்தைப் பார்த்துட்டு பாராட்டி தள்ளிட்டாங்க. எனக்குக் கிடைச்ச முதல் வெற்றி இது!''

``அடுத்தடுத்த புராஜெக்ட் பற்றி...''

``கருப்பன் படத்தோட வெற்றிக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்திருக்கு. கதைகளைக் கேட்டுட்டிருக்கேன். இன்னும் சைன் ஆகலை. வரக்கூடிய வாய்ப்புகளை நல்லவிதத்துல பயன்படுத்தணும்கிறதால, எந்தப் படம், யார் ஹீரோ, என்ன பேனர்னு சில விஷயங்களை யோசிச்சுட்டுத்தான் படங்களை அக்செப்ட் பண்ணணும். சீக்கிரமே உங்களுக்கு தகவல் வெளிவரும்.''

கேட்ட ஒவ்வொரு கேள்விக்கு பட்டாசு பதில்களைக் கொடுத்த தான்யாவிடம், ஒரு சொல் கேள்வியை முன்வைத்தோம்...

தான்யா - தைரியம்
தாத்தா - அர்ப்பணிப்பு
சினிமா - கனவு தொழிற்சாலை
ராதாமோகன் - ப்ளான்
சசிகுமார் - ஈடுபாடு
விஜய் சேதுபதி - யதார்த்தம்
உணவு - சாக்லேட், ஐஸ்க்ரீம்ஸ்
பிடித்த நாடு - ஆஸ்திரேலியா

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு