நயன்தாரா டு ஐஸ்வர்யா ராஜேஷ்... ஹீரோயின்கள் அடுத்து என்ன பண்ணப் போறாங்க?!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களின் அடுத்தடுத்த சினிமா கமிட்மென்ட்ஸ் என்ன என்பதைப்பற்றிய அப்டேட்:

நயன்தாரா: 
லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நயன்தாரா, தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின் லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருக்கிறார். அன்று, 'ஒரு வார்த்தைப் பேச' ஒரு வருடம் காத்திருந்தேன் என்று 'ஐயா' படத்தில் சரத்குமாரை ஒரு தலையாய் காதலித்து அவரைச்சுற்றி டூயட் பாடியவர், இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் டாப் ஹீரோயின். சமீபகாலமாக ஹீரோயினை மையப்படுத்திய கதைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார். ‘நீ எங்கே என் அன்பே’, ‘மாயா’, ‘டோரா’... உள்ளிட்ட படங்களை அதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். நவம்பரில் வெளிவரவுள்ள ‘அறம்’ படமும் அப்படிப்பட்ட ஒன்றுதான். இது தவிர, இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் 'இமைக்கா நொடிகள்'. மோகன் ராஜாவின் 'வேலைக்காரன்', பாலகிருஷ்ணா நடிக்கும் கே.எஸ்.ரவிக்குமாரின் பெயரிடப்படாத தெலுங்கு படம், சிரஞ்சீவி நடிக்க பல மொழிகளில் சுரேந்திர ரெட்டி இயக்கும் 'சே ரா நரசிம்மா ரெட்டி' என பரபரப்பாக நடித்துக்கொண்டு இருக்கிறார் நயன்தாரா. 

நயன்தாரா

சமந்தா
சமீபத்தில் நாக சைதன்யாவை கரம் பிடித்திருக்கும் சமந்தா, ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயனின் பெயரிடப்படாத படம், தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘நடிகையர் திலகம்’, விஜய் சேதுபதியுடன் 'சூப்பர் டீலக்ஸ், தெலுங்கில் 'ரங்கஸ்தலம்', மலையாளத்தில் 'மெரைன் டிரைவ்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

சமந்தா

காஜல் அகர்வால்: 
ஒரே நேரத்தில் விஜய்யுடன் ‘மெர்சல்’, அஜித்துடன் ‘விவேகம்’ படங்களில் நடித்தவர் தற்போது விக்ரமின் 'கருடா', குயின் படத்தின் தமிழ் ரீமேக் ஆன 'பாரிஸ் பாரிஸ்', தெலுங்கில் ராம் சரணுடன் நடிக்கும் 'மெருப்பு'. கன்னடத்தில் ‘தத்தாஸ்த்து’, 'ஏ.கே 97' மற்றும் இந்தியில் ஒரு படம் என செம பிஸி.

காஜல் அகர்வால்

தமன்னா: 
'பாகுபலி' பட வெற்றிக்குப்பிறகு தமிழில் முதல் முறையாக நடிகர் விக்ரமுடன் 'ஸ்கெட்ச்' படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். பிரபுதேவாவுடன் 'தேவி' படத்துக்குப் பிறகு இந்தியில் உருவாகி வரும் 'காமோஷி' படத்திலும் நடித்து வருகிறார். ஏற்கனவே 'தேவி' இந்தியிலும் ஹிட் அடித்தால் இந்தப் படத்தை இந்தி ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும், இந்தப் படத்தை 'உன்னைப் போல் ஒருவன்' இயக்குநர் சக்ரி டோலேட்டி எடுப்பது இன்னும் ஸ்பெஷல். இதுதவிர இந்தியில் சுனில் ஷெட்டியின் ‘ஏ.பி.சி’ படத்திலும் நடித்து வருகிறார் தமன்னா. 

தமன்னா

கீர்த்தி சுரேஷ்: 
தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சில வருடங்களிலியே முன்னணி ஹீரோயின் லிஸ்டில் இடம் பிடித்து இருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்போது பயங்கர பிஸி. விஜய்யுடன் 'பைரவா' படத்தில் நடித்தவர் தற்போது சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘நடிகையர் திலகம்’, விக்ரமின் 'சாமி 2' மற்றும் விஷாலின் 'சண்டக்கோழி 2' படங்களிலும் கமிட் ஆகியிருக்கிறார். தெலுங்கில் விரைவில் பவன் கல்யாணுடன் நடித்த படமும் ரிலீஸாகப் போகிறது. ‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிப்பதில் கீர்த்திக்கு பயங்கர சந்தோஷம். 

கீர்த்தி சுரேஷ்

அனுஷ்கா: 
'பாகுபலி' தேவசேனாவாக உலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அனுஷ்காவின் கைகளில் இப்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் ‘பாக்மதி’ என்ற படம் மட்டுமே உள்ளது. இந்தப்படத்துக்காக கடுமையாக டயட்டில் இருந்து உடல் இளைத்துள்ள ‘தேவசேனா’வைப் பார்க்க இப்போதே ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 

அனுஷ்கா

த்ரிஷா: 
பத்து வருடங்களுக்கு மேலாகத் தமிழ் சினிமாவில் இருக்கும் த்ரிஷாவின் ஒரே குறை இன்னும் ரஜினியுடன் ஜோடியாக நடிக்கவில்லை என்பதுதான். தற்போது முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து '96' படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். இதே நேரத்தில் அரவிந்த் சாமியுடன் 'சதுரங்க வேட்டை 2', இயக்குநர் ரமணா மாதேஷின் 'மோகினி', இயக்குநர் சுந்தர் பாலுவின் ‘கர்ஜனை’, தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘1818’, நிவின் பாலியுடன் நடிக்கும் மலையாளப் படமான ‘ஹே டியூட்’ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். ஆனால் விக்ரமுடன் நடிப்பதாக கமிட் ஆன ‘சாமி-2’வில் இருந்து என்ன காரணமோ தெரியவில்லை, விலகுவதாக அறிவித்திருக்கிறார் த்ரிஷ். 

ஹீரோ

ஐஸ்வர்யா ராஜேஷ்: 
‘காக்கா முட்டை’ படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்பை மறக்க முடியுமா? அதேபோல் ‘தர்மதுரை’யின் காமுக்காபட்டி அன்புச்செல்வியும் இன்றும் நம் மனதில் உள்ளார்கள். அப்படிப்பட்டவர் தற்போது இந்திப் படத்திலும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். 'டாடி' என்கிற இந்திப் படம் பாலிவுட்டில் அறிமுகமானவர் தற்போது கெளதம் வாசுதேவ் மேனனின் 'துருவ நட்சத்திரம்' படத்தில் விக்ரமுடன் நடிக்கிறார். இதுதவிர வெற்றிமாறனின் ‘வடசென்னை’ படத்திலும் தனுஷூடன் வலுவான கேரக்டரில் நடித்துக்கொண்டு இருக்கிறார். ‘என் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தால் நன்றாகயிருக்கும்’ என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டதால் அவரின் ஸ்க்ரிப்டையும் கேட்டு 'ஹவுஸ் ஓனர்' படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார். இது தவிர ஏ.எல்.விஜயின் அடுத்தப் படம் மற்றும் மணிரத்னத்தின் அடுத்தப் படம் என பெரிய இயக்குநர்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார். 

ஐஸ்வர்யா ராஜேஷ்

 

'

Do you like the story?

Please Appreciate the Author by clapping!