Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“விஜய்யின் அரசியல் என்ட்ரி கன்ஃபர்ம்!” உணர்த்தும் குறியீடுகள்

Chennai: 

ரஜினி, கமல் வரிசையில் `தலைவா வா, தலைமையேற்க வா...' வகை போஸ்டர்களை விஜய்க்கும் ஒட்ட ஆரம்பித்துவிட்டார்கள் அவரது ரசிகர்கள். ஆனால், என்னதான் போஸ்டர் ஒட்டினாலும், ஒட்டவில்லையென்றாலும் விஜய் அரசியலுக்குள் என்ட்ரியாவதற்கு ஆல்ரெடி 99.99% வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. குழப்பமாய் இருக்கிறதா, அதான் குறியீடாவே அண்ணா அத்தனை விஷயங்களையும் சொல்லியிருக்காரே... வாங்க சொல்றேன்...
 

விஜய் அண்ணா

விஜய்யின் வெள்ளித்திரை பயணம் ஆரம்பித்தபோதே, அவரின் அரசியல் பயணமும் ஆரம்பித்துவிட்டது. ஆமாம், குழந்தை நட்சத்திரமாய் திரையில் அறிமுகமாகிய முதல் காட்சியிலேயே ‘அறிஞர் அண்ணா இளமையில் அன்பும், அருளும் உடையவராய் விளங்கினார். நட்பு உணர்வும் நல்ல பண்பும் அவரிடம் இயற்கையாவே அமைந்தன' என அறிஞர் அண்ணாவைப் பற்றி எழுதியிருக்கும் பேப்பரை எழுத்துக்கூட்டி படித்துக் கொண்டிருப்பார்  விஜய் அண்ணா.

இப்படி தமிழகத்தின் நார்மல் அப்பாக்களை போன்று `அ-அம்மா, ஆ-ஆடு' என பாடம் எடுக்காமல், `அ- அரசியல், ஆ - ஆளுங்கட்சி' என பாடம் எடுத்திருக்கிறார் எஸ்.ஏ.சி. அதுவே விஜய் அண்ணா அடுத்தடுத்து நடித்த படங்களிலும், அரசியலை பரபரவென தூவ வைத்திருக்கிறது.

இதுவரை 'விஜய் அண்ணா' என இரண்டு முறை அழைத்துவிட்டேன். ஒருமுறை வெறும் `அண்ணா' என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். உங்கள் மூளை எந்த உறுத்தலும் தங்கு தடையும் இன்றி படித்து புரிந்திருக்கும். ஆக, நம் ஆழ்மனதுக்குள் விஜய்யை `அண்ணா' எனவும் பதித்துவிட்டார்கள். அம்மா, அக்கா, ஐயா, சின்னம்மா, சின்னய்யா வரிசையில் அண்ணன். எப்பூடி..!

எப்போது, எப்படி விஜய்யை ‘அண்ணா' என அவரது ரசிகர்கள் பாசத்தோடு அழைக்க ஆரம்பித்தார்கள் என தெரியவில்லை. ஆனால், அந்த `அண்ணா' எனும் ஒரு வார்த்தையை வைத்தே குறியீடுகளில் விளையாடியிருக்கிறார். உதாரணத்திற்கு, `தலைவா' படத்தில்வரும் `இனி நீங்கதான் எங்க அண்ணா' வசனம். ஹியர் அண்ணா மீன்ஸ் அறிஞர் அண்ணாதுரை. 

புலி

இதுவும் ஒரு `அண்ணா' குறியீடுதான். அ.தி.மு.க கொடியில், வலது கையின் ஆட்காட்டி விரலையும், பெருவிரலையும் மட்டும் நீட்டியவாறு அண்ணாவின் படம் ஒன்று இருக்கும். அதே சிம்பளை பல வருடங்களாக பல படங்களில் காட்டிக்காட்டி, சிம்பாலிக்காக இந்த ஊர் உலகத்திற்கு ஏதோ சொல்ல வருகிறார் விஜய். அதை கவனித்திருக்கிறீர்களா...?

அண்ணாவுக்கு அடுத்து எம்.ஜி.ஆர் குறியீடுகள். நிறையப் படங்களில் எம்.ஜி.ஆரின் அதிதீவிர ரசிகனான நடித்திருப்பார் விஜய். ‘வசீகரா'வில் ஆரம்பித்து `மெர்சல்' வரை பல படங்களை உதாரணமாக சொல்லலாம். அண்ணாவுக்கு பிறகு எம்.ஜி.ஆர். `அழகிய தமிழ்மகன்' படத்தில் சிவாஜியின் `பொன்மகள் வந்தாள்...' பாடலை ரீமேக் செய்து ஆடியிருப்பார். அது  வில்லன் விஜய் என்பதை மனதில் கொள்க. சும்மா கொளுத்திப்போடுவோம்... 

‘வேலாயுதம்' படத்தில் விஜய்யைப் பார்த்து ஒருவர், "இந்த மண்ணை ஆண்டவர், எங்க மனசை ஆண்டவர், இந்த மாநிலத்தையே..." என எதையோ கூறவந்ததும், விஜய் "ஏய்..." என  அடக்கி வாசிக்க சொல்வார். தட் இவரே பாம் வைப்பாராம். இவரே எடுப்பாராம் மொமண்ட்.

`புலி' படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வரும் விஜய்யை விஜய்யாகவும், ஶ்ரீதேவியை ஜெயலலிதாகவும், சுதீப்பை ஜெயலலிதாவின் கூடவே இருந்து துரோகம் செய்யும் ஒருவராகவும் மனதில் ஃபிக்ஸ் செய்துக்கொண்டு மீண்டும் ஒருமுறை பாருங்கள். அப்படியே ஷாக் ஆகிடுவீங்க. அதுலேயும் அந்த க்ளைமாக்ஸில் செங்கோல் கொடுக்கும் காட்சியெல்லாம்... 

`கத்தி' படத்தில் இட்லியை வைத்து கம்யூனிசம் பேசியவர், `தெறி' படத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் போஸ்டர்களுக்கு முன் மணிக்கணக்கில் நின்று கொண்டிருப்பார். `மெர்சல்' படத்திலோ அரிவாளை திருப்பி பிடித்து 'ஒருநாள் எங்க கை ஓங்கும்' எனவும் சொல்லியிருக்கிறார். `ஆளப்போறான் தமிழன்...' பாடலுக்கு செக்கசெவேலென குங்குமத்தை பூசி நிற்கிறார்.  

ஹென்ஸ் இட் இஸ் ப்ரூவ்ட். L.H.S = S.A.C. விஜய் அரசியலுக்கு வருவது உறுதி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?