Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ் அப்பில் கசிந்த 2.0 பாடல்கள் #2Point0

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் முதல் இந்திய படம்’, ‘நேரடியாக 3டியில் ஷூட் செய்யப்படும் முதல் இந்தியப் படம்’ உள்பட நிறைய பெருமைகளுடன் தொடங்கப்பட்ட ‘2.0’, தற்போது, ‘இந்தியாவின் மிகப்பெரிய ஆடியோ வெளியீட்டு விழா’ என்ற பெருமையை துபாயில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஷங்கர்-ரஜினி-அக்‌ஷய் குமார்-ஏ.ஆர்.ரஹ்மான்-லைகா காம்போவின் ‘2.0’ படத்தின் ஆடியோ வெளியீடு தற்போது நடந்துகொண்டிருக்கிறது.

ரஹ்மான்

இன்று இரவு, ரஹ்மானின் இசையில் பாடல்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ' ராஜாளி, இந்திர லோகத்து' என இரு பாடல்கள் வாட்ஸ் அப்பில் வெளியாகியிருக்கிறது. இசையைக் கேட்ட அனைவருமே, இது ரஹ்மான் இசைதான் என உறுதி அளிக்கிறார்கள். ரஜினி குரலில், அவரின் அக்மார்க் சிரிப்பு வேறு வருவதால், 'அட, எப்படி லீக் ஆனது' என யோசிக்க வைக்கிறது. லீக் ஆன இரு பாடல்கள்தான் ஒரிஜினல் 2.0 பாடல்களா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்