Published:Updated:

“ ‘மறுவார்த்தை பேசாம’ ஏன் மிஸ்டர் எக்ஸ் ஆனேன்..?” - ரகசியம் சொல்லும் தர்புகா சிவா

“ ‘மறுவார்த்தை பேசாம’ ஏன் மிஸ்டர் எக்ஸ் ஆனேன்..?” - ரகசியம் சொல்லும் தர்புகா சிவா
“ ‘மறுவார்த்தை பேசாம’ ஏன் மிஸ்டர் எக்ஸ் ஆனேன்..?” - ரகசியம் சொல்லும் தர்புகா சிவா

“ ‘மறுவார்த்தை பேசாம’ ஏன் மிஸ்டர் எக்ஸ் ஆனேன்..?” - ரகசியம் சொல்லும் தர்புகா சிவா

“ ‘என் குறிக்கோளே இசையமைப்பாளர் ஆகுறதுதான். சின்ன வயசுல இருந்தே மியூசிக் கத்துக்கிட்டேன்.’ அப்டினெல்லாம் சொல்ல மாட்டேன் ப்ரோ. எல்லார் மாதிரியும் ராஜா, ரஹ்மான் சாங்க்ஸ் கேட்டு வளர்ந்த ஆளுதான். பெரிசா எந்த ப்ளானும் இல்லை. ஆனா, சின்ன வயசுல ரெண்டு டிரம்ஸ் ஸ்டிக்கை வெச்சுட்டு 24 மணிநேரமும் தட்டீட்டே இருப்பேன். தூங்கறப்பவும் அது கூடத்தான் இருக்கும். அது, இதுவரைக்கும் கொண்டு வந்து விட்டிருக்கு” வெளிப்படையாகப் பேச ஆரம்பிக்கிறார் ’மறு வார்த்தை பேசாதே’ பாடலின் இசையமைப்பாளர் (மிஸ்டர் எக்ஸ்) தர்புகா சிவா.

“இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ்னு இருந்த கௌதம் வாசுதேவ் மேனன் லிஸ்ட்ல நீங்க எப்படி?”

“நீங்க என்னைக் கேட்ட இதே கேள்வியை நானும் அவர்கிட்ட கேட்டேன். ‘அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம்’ ன்னு சொல்லிட்டார். சரி கன்ஃபர்ம் ஆகுமா, ஆகாதா ங்ற கவலையில்லாம ‘மறுவார்த்தை’ ட்யூன் அனுப்பினேன். கௌதம் சாருக்கு இசையில பெரிய ஞானம் இருக்கு. அது ஒரு மொழி. அதை நான் சொல்லிப் புரிய வைக்க முடியாது. அவர் டக்னு அதை கேட்ச் பண்ணிப்பார். ரொம்ப நம்பிக்கையான ஆளைத்தான் ஃபிக்ஸ் பண்ணுவார். ஃபிக்ஸ் பண்ணிட்டா, முழுசா நம்பிடுவார். ட்யூன் கேட்கறப்பவே சவுண்டிங்லாம் எப்டி வேணும்னு தெளிவா சொல்லிடுவார். ஆரம்பத்துல இல்லைன்னாலும் திடீர்ன்னு அந்த ட்யூன் ஓகே ஆகுமானு சந்தேகம் வந்துச்சு. கேட்டுட்டு அவர் ஓகே பண்ணிட்டார். “என்ன சார் ஒரே ட்யூன்ல ஓகே பண்ணிட்டீங்க?”னு கேட்டேன்.

அப்பதான் அவர் ஒரு விஷயம் சொன்னார். “நான் இதுவரைக்கும் வாங்கின ட்யூன் எல்லாமே ஃபர்ஸ்ட் ட்யூனே ஓகே பண்ணினதுதான். சிச்சுவேஷன் சொல்லும்போதே எப்படி எதிர்பார்ப்பேன் என்பதையும்  சேர்த்தே சொல்லிடுவேன். அதே மாதிரி போட்டுக்குடுத்துடுவாங்க. அந்தப் புரிதல் இல்லைன்னா எப்படி?”னு சொன்னார். அவர் இதைச் சொன்னப்பறம் எனக்குப் பொறுப்பு அதிகமாச்சு. மத்த ட்யூன்ஸையும் அதே மாதிரி ஒரு தடவையிலயே ஓகே வாங்கணுமே! வாங்கிட்டேன்!”

“மிஸ்டர் எக்ஸ் கான்செப்ட் எப்படி?”

“அது திடீர்னு உருவானதுதான். ரிலீஸ் பண்றதுக்கு ஒருநாள் முன்னாடி அப்படிப் பண்ணலாமான்னு ரெண்டு பேரும் பேசிக்கிட்டோம். நான் கௌதம் சார்கிட்ட “எனக்கு ரொம்ப ஹேப்பி”ன்னேன். அதே மாதிரியே பாட்டு ஹிட் ஆச்சு.”

“எல்லாப் பக்கமும் இந்தப் பேச்சாவே இருந்தப்ப, உங்களுக்கு எப்படி இருந்தது?”

“நான் சோஷியல் மீடியாவுல ஆக்டிவ் இல்ல. அப்பப்போ ஃப்ரெண்ட்ஸ் அனுப்புவாங்க. அதோட சரி. அதனால பெரிசா தெரியல. ஒரு ஸ்கூலுக்கு கெஸ்டா கூப்பிட்டிருந்தாங்க. அந்த ஸ்கூல் பசங்க, இந்தப் பாட்டை Reprise வெர்ஷன்ல பாடினாங்க. யாருக்குமே நான்தான் இந்தப் பாட்டோட மியூசிக் டைரக்டர்ன்னு தெரியாது. மேடையில பாடிட்டிருந்தப்ப, உட்கார்ந்திருந்த எல்லாரும் வரிக்கு வரி கூடவே பாடினப்பதான் இந்தப் பாட்டு எவ்வளவு தூரம் கனெக்ட் ஆகிருக்குனு புரிஞ்சது. அதைத்தான் நெஜமான பாராட்டா உணர்ந்தேன். அதை கௌதம் சார்கிட்ட சொல்லி, நானே இதுக்கு ஒரு  Restrung Version போடுறேன்னு சொன்னேன். அவரும் ஓகே சொன்னார். அதோட சீக்ரெட்டை உடைச்சுடலாம்னு முடிவு பண்ணினோம். ஏன்னா கொஞ்சம் கொஞ்சமா நான்தான்கிற  தகவல் பரவி, போற பக்கமெல்லாம் அந்தக் கேள்வியை எதிர்கொள்றது அவ்ளோ கஷ்டமா இருந்தது!” 

“நடிகர் தர்புகா சிவா நல்ல பேர் வாங்கினாரே.. அவர் என்ன பண்றார்?”

“இன்ட்ரஸ்டிங்கா இருந்தாப் பண்ணுவேன். அப்படி ஒரு கதாபாத்திரம் வரணும். ‘துருவ நட்சத்திரம்’ல அப்படி ஒரு ரோல் இருந்தது. கௌதமும் கேட்டார். அப்ப எனக்கு முடியல. பார்க்கலாம்”  

“உங்க கெரியருக்கு வீட்ல சப்போர்ட் எப்படி?

“எனக்கு எல்லாமே அமைஞ்சது. படிக்கறப்பவே ஏதோ பண்றான்னு விட்டிருந்தாங்க. டிரம்ஸ் கேட்டதும் சேர்த்து வெச்ச காசப்போட்டு வாங்கிக் குடுத்தாங்க. ராஜதந்திரம் ரிலீஸ் ஆன பிறகு, வெளியில இருந்து சொல்லித்தான் நான் அதுல நடிச்சிருக்கேன்னு அவங்களுக்குத் தெரியும். எதுக்கும் மறுப்பு சொல்ல மாட்டாங்க. ‘பார்த்துப் பண்ணு’னு அம்மா சொல்வாங்க. இந்தப் பாட்டு நான்னு என் கஸின் வந்து வீட்ல சொன்னப்பகூட அம்மா  “ஆமாமா கேட்டிருக்கேன்”னு போய்ட்டாங்க”

”நெக்ஸ்ட்?”

“ ‘நிமிர்’, பெல்லி சூப்புலு’ வோட தமிழ் ‘பொன் ஒன்று கண்டேன்’, அப்பறம் ஒரு இண்டிபெண்டட் மூவினு போய்க்கொண்டிருக்கிறது. எனக்கு எக்ஸைட்மென்டா இருக்கற எதுவா இருந்தாலும் பண்ணுவேன்”
 
“இந்தக் கேள்வியைக் கேட்காம இருக்க முடியாதே... லவ், கல்யாணம்..?”
  
“எனக்கானவங்க இவங்கதான்னு ஒருத்தரை அடையாளம் கண்டுப்போம்ல.. அது இன்னும் எனக்கு ஆகல. அல்லது, ஆளைப் பார்த்திருக்கலாம்.. அவங்கதான்னு தெரியாம இருக்கலாம். எதுவா இருந்தாலும் நானும் வெயிட்டிங்!” 

அடுத்த கட்டுரைக்கு