Published:Updated:

ஒரே மாதிரியான கமர்ஷியல் படங்களுக்கு லீவ் விடலாமே டைரக்டர்ஸ்?

தார்மிக் லீ
ஒரே மாதிரியான கமர்ஷியல் படங்களுக்கு லீவ் விடலாமே டைரக்டர்ஸ்?
ஒரே மாதிரியான கமர்ஷியல் படங்களுக்கு லீவ் விடலாமே டைரக்டர்ஸ்?

ஒரே மாதிரியான கமர்ஷியல் படங்களுக்கு லீவ் விடலாமே டைரக்டர்ஸ்?

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஜானர் படங்களுக்கு என்றுமே மவுசு இருக்கிறது. ஆனால், ஒரே கான்செப்ட்டை அடித்துத் துவைத்து, தொங்கவிடும் சில பாட்ஷா பாகவதர் கான்செப்ட்டை கொஞ்சம் மாத்துங்க டைரக்டர் ப்ரோஸ்!

* ஹாலிவுட்டில் 'Horrible bosses', 'Vacation', 'We're the millers' போன்ற பல அடல்ட் ஒன்லி படங்களுக்கு செம ரெஸ்பான்ஸ் இருக்கிறது. இதில் ஆச்சர்யமான விஷயம், சராசரி சினிமா ரசிகனும் அதை சந்தோஷமாக வரவேற்கிறான். இன்னமும் லவ் ஃபெயிலியர், காதலிச்ச பொண்ணு கழட்டிவிட்டா சூப் சாங்னு பாடுற கான்செப்ட்டை கொஞ்சம் மாற்றலாமே இயக்குநர் ஐயா. தமிழ் சினிமாவிலும் அடல்ட் ஒன்லி படங்களை வரவேற்க பெரிய பட்டாளமே உள்ளது. எடுத்தவுடனேயே அடல்ட் ஒன்லி படங்களை வரவேற்கிறான் என்று பீதியாக வேண்டாம் மக்களே. ஹாலிவுட் அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் முகம் சுளிக்கும்படி இருக்கவே இருக்காது. அதுமாதிரி எடுங்களேன் டைரக்டர்ஸ்! 

* ஒருபக்கம் காதல் கதை, மசாலா படம், காதல் தோல்வியடைந்தால் சூப் சாங் என இப்படியாக பயணித்துக்கொண்டிருக்க... மறுபக்கம், ஃப்ளாஷ்பேக்கில் அப்பாவைக் கொன்றால் மகனை வைத்து, அப்பாவைக் கொன்ற வில்லனை பழி வாங்கும் கதை, காலங்காலமாகத் தொத்து வியாதிபோல் தொத்திக்கொண்டு வருகிறது. படத்தில் இடம்பெறும் காட்சிகளும் பல ஹாலிவுட் படங்களில் இருந்து 'சுட்டு', சுடச்சுட தரும் பழக்கம் வழக்கமாகிவிட்டது. ஒரு கமர்ஷியல் படத்தின் வெற்றிக்கும், தோல்விக்கும் இருக்கும் பொதுவான காரணம் கதை மட்டும்தான். 'இதுதான் கதை என்று படம் பார்க்க உட்காரும் ரசிகர்களுக்கு, அவர்களது எதிர்பார்ப்பை மீறி சில விஷயங்கள் படத்தில் நடந்தால் அது வெற்றி. எதிர்பார்த்த விஷயத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் அப்படியே நடந்தால் அந்தப் படம் தோல்வி. அவ்வளவுதான் மேட்டர். திரும்பத் திரும்ப 'மெர்சல்' காட்டாதீங்கய்யா! 

* சினிமா முன்பு மாதிரி இல்லாமல் ரொம்பவே அப்டேட் ஆகிவிட்டது. போலவே ரசிகர்களும். பில்டப் ஏற்ற ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் என எக்கச்சக்க விஷயங்களை ஹைப் ஏற்ற பயன்படுத்துவது ஓகேதான். ஆனால், அதிலேயே சஸ்பென்ஸை உடைத்துவிட்டால் எப்படி டைரக்டர்ஸ்? லேட்டஸ்ட் உதாரணமாக 'மெர்சல்' படத்தைச் சொல்லலாம். படத்தின் டீசர் வெளியான பிறகு, மைனஸ் பவரில் கண்ணாடி போடுபவர்களுக்குக் கூட படத்தில் மூன்று விஜய் என்பது தெரிந்துவிட்டது. அந்த மைண்ட் செட்டில்தான் படம் பார்க்கவும் உட்காருகிறார்கள், இதைக் கொஞ்சம் மாத்துங்க ப்ரோ!

* மேலே சொன்ன பாயின்டுக்கும் இந்த பாயின்டுக்கும் கொஞ்சம் சிங்க் ஆகும். ஆனால் அர்த்தமும், நோக்கமும் வேறு மக்களே. சிறு பட்ஜெட் படங்களுக்கு ப்ரொமோஷன் மிக முக்கியம். ஏனென்றால் வாராவாரம் ஆரவாரத்தோட பல படங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த மாதிரி படங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு மீடியம்தான் இந்த ப்ரொமோஷன். ஆதலால் அவற்றைத் தவிர்க்க முடியாது. இது பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு அவசியம்தானா..? முன்பெல்லாம் படத்தின் அதிகபட்ச ப்ரொமோஷனாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகும். ஆனால், தற்பொழுது ப்ரொமோஷன் என்ற பெயரில் பல லூட்டிகள் நடக்கிறது. அதுவே படத்தின் தோல்விக்கும் காரணமாக வழிவகுக்கிறது. ப்ரொமோஷனிலேயே குறிப்பிட்ட பெரிய ஹீரோக்ளைச் சார்ந்த ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எக்குத்தப்பாக எகிறிவிடுகிறது. ஆனால் வெளியாகி தோல்வியைத் தழுவும்பொழுது சராசரி ரசிகனுக்குக் கூட கோபம் கொப்பளிக்கிறது. அதுலயும் ஓடாத படத்துக்கும் நீங்க வைக்கிற செலிபிரேஷன் பார்ட்டி இருக்கே...! 

* கோலிவுட்டில் ஒரு சட்டத்தை உடனடியாக அமல்படுத்தியே ஆகவேண்டும். ஒரு ஹீரோ தொடர்ந்து ஒரே இயக்குநருடன் படம் பண்ணக் கூடாது என்பதே அது. ஹீரோ - டைரக்டர் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்போது பார்க்க நன்றாக இருக்கிறதுதான். அதற்காக ஒரே மாதிரி கெமிஸ்ட்ரியை எத்தனை தடவை பாஸ் பார்க்குறது? ஒரே ஹீரோவை இயக்குநர்கள் 'வேதாளம்' போல தொற்றிக்கொண்டிருப்பதை தடுக்கவே இந்தச் சட்டம். பல நடிகர்களோடு சேர்ந்து வெரைட்டியான படம் பண்ணலாமே. என்ன்னன்ன்ன நண்பா..?!

* கடைசியாக, படத்தின் ஏதாவது ஒரு பாதி சூப்பராகவும் மறுபாதி ரொம்ப சுமாராகவும் இருக்கும்படி திரைக்கதை வேணவே வேண்டாம் இயக்குநர்களே! படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது இது நல்ல படமா இல்லையா என எங்களுக்கே கண்ணைக் கட்டுவதால் இந்த வேண்டுகோள். பார்த்து செய்ங்க! 

அடுத்த கட்டுரைக்கு