Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லெஹெங்கா சோலி முதல் லாங் ஷர்க் வரை... ஐஸ்வர்யா ராயின் ஃபேஷன் கலெக்‌ஷன்! #HBDAish

அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை அழகை ஒப்பிட வேண்டும் என்றாலே ஐஸ்வர்யா ராய்தான். 1997-ம் ஆண்டில் வெளியான `இருவர்' படம் மூலம் அறிமுகமானார் ஐஸ்வர்யா ராய். பிறகு பாலிவுட்டில் படுபிஸியான நடிகையானார். பாலிவுட்டில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், தமிழ் ரசிகர்கள் வெற்றியை மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். என்றைக்கும் மாறாத அழகைக்கொண்டிருக்கும் இவருக்கு எந்த உடை உடுத்தினாலும் அழகுதான். `ஜீன்ஸ்' படத்தில் வரும் மாடர்ன் உடைகளாக இருக்கட்டும், `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் வரும் கிராமத்துப் பெண்ணின் உடைகளாகட்டும், `குரு', `ராவணன்' போன்ற படங்களில் கிராமத்து மற்றும் நகரத்து மனைவியின் உடைகளாக இருக்கட்டும், ஐஸ்வர்யா ராய் அந்தந்தக்  கதாபாத்திரத்துக்கு ஏற்ப ஆடைகளை அணிந்திருப்பார். 

ஐஸ்வர்யா ராய்

`எல்லா உடைகளிலும் எப்படி இவ்ளோ அழகா இருக்காங்க?'னு கேட்கிறீங்களா... அவங்களோட ஹவர்கிளாஸ் (hourglass) உடலமைப்புதான் அதற்குக் காரணம். ஹவர்கிளாஸ் உடல் அமைப்பைக்கொண்டவர்களுக்கு எந்த ஆடையும் ஆஹா ஆடைதான்.  ஐஸ்வர்யாவுக்குத் தமிழில் அமைந்த படமும், அதில் அணிந்திருந்த உடையும் ஃபர்ஸ்ட் க்ளாஸ் (first class). ஐஸ்வர்யா  நடித்த தமிழ்ப் படத்திலிருந்து மிகவும் பிரபலமான ஆடைகளின் அணிவகுப்பு இதோ உங்களுக்காக...

லெஹெங்கா சோலி:

`சல சல சலவென ரெட்டைக் கிளவி' என்று செமி க்ளாசிக்கல் நடனம் ஆடி லெஹெங்கா சோலியை அறிமுகம் செய்தவர் ஐஸ்வர்யா ராய். தற்போது எல்லா விழாக் காலங்களிலும் மிகப் பிரபலமாக விளங்கும் உடை என்றால், அது லெஹெங்கா சோலிதான். மேற்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்திருந்தாலும், நம்ம ஊரு விசேஷத்தின்போது டீனேஜ் பெண்களின் சாய்ஸ் இதுதான். லெஹெங்காவிலும் ஷார்ட் சோலி (short choli), லாங் சோலி (long choli) என வகைகள் உள்ளன. முன்னாள்களில் ஷார்ட் சோலி லெஹெங்காதான் பெரும்பாலான பெண்களின் சாய்ஸ். ஆனால், தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பதோ லாங் சோலி லெஹெங்காதான். 1998-ம் ஆண்டில் வெளியான `ஜீன்ஸ்' படத்தில் வரும் ஒரு பாடலில் பச்சை நிற லாங் சோலி லெஹெங்கா அணிந்து அனைவரையும் ஈர்த்திருப்பார் ஐஸ்வர்யா ராய். அதுவே இப்போது அனைவரின் ஆப்ஷன்.

ஆடை

தாவணிக் கனவு:

மேற்கிந்திய உடைகளுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுப் பாரம்பர்ய உடையிலும் புது மாறுதலைக் கொடுத்திருக்கிறார். 2000-ம் ஆண்டு வெளியான `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் கிராமத்துப் பெண் கதாபாத்திரம். பாவாடை-தாவணிதான் ஐஸ்வர்யாவின் காஸ்ட்யூம். `கண்ணாமுச்சு ஏனடா..." என்ற பாடலில் பச்சை நிற பாவாடை - தாவணியில் கொள்ளை அழகு. டார்க் கிரீன் ஹாரிஸான்ட்டல் சரி (horizontal zari), பாவாடை மற்றும் பிளவுஸ் அதற்கு மேட்ச் ஆக, தற்போது எல்லோரும் விரும்பும் நிறமான மின்ட் கிரீன் (mint green) தாவணி, கைநிறைய வளையல்கள், கழுத்தில் சோக்கர் (choker), பின்னல் தலையில் மல்லிகைப்பூ எனத் தமிழ்ப் பெண்ணின் அடையாள அழகு. 

ஆடை

லாங் ஷ்ரக்:

வெஸ்டர்ன் உடையில் ஷாப்பிங் போனாலே இப்போதெல்லாம் லாங்தான் சாய்ஸ். லாங் டீ-ஷர்ட், லாங் ஷர்ட், லாங் ஷ்ரக் என விதவிதமான வண்ணங்களில் அசத்தும் டிசைன்களில் ஏராளமான ஆடைகள். 2010-ம் ஆண்டில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்த `எந்திரன்' படத்தில் மாடர்ன் காஸ்டியூம் அணிந்து கலக்கிருப்பார். அதில் `சிட்டி' பாடலில் ஐஸ்வர்யா அணிந்திருக்கும் கேஷுவல் காஸ்டியூம் சிம்ப்ளி சூப்பர். அதில் அணிந்திருக்கும் லாங் ஷ்ரக் இப்போது வெஸ்டர்ன் ட்ரெண்டிங். 

இப்படி எல்லாவிதமான உடைகளிலும் அசத்தல் அப்டேட் தரும் நம்ம ஊர் அழகி, திரைத்துறைக்கு வந்து சரியாக 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், என்றும் 20  போல் தோற்றமளிக்கும் ஐஸ்வர்யா ராய் என்றுமே நம் நாட்டின் பியூட்டி ஐகான்தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்