Published:Updated:

பாலிவுட் நடிகை தீபிகாவின் ‘பத்மாவதி’ படத்துக்குத் தடைகோரும் பா.ஜ.க

பாலிவுட் நடிகை தீபிகாவின் ‘பத்மாவதி’ படத்துக்குத் தடைகோரும் பா.ஜ.க
பாலிவுட் நடிகை தீபிகாவின் ‘பத்மாவதி’ படத்துக்குத் தடைகோரும் பா.ஜ.க

பாலிவுட் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் நடிப்பில் வெளிவர உள்ள ‘பத்மாவதி’ திரைப்படத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், குஜராத் தேர்தல் நேரத்தில் அப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

14-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது 'பத்மாவதி' திரைப்படம். தீபிகா படுகோனே, சாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ராணி பத்மினியாக, தீபிகா படுகோனேவும் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீரும் நடித்திருக்கிறார்கள். 'பாகுபலி'போல பிரமாண்ட வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியிருக்கும் 'பத்மாவதி' திரைப்படத்தின் டிரெய்லர் சில நாள்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. டிசம்பர் 1-ல் இந்தப் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்தப் படத்துக்கு, பயங்கர எதிர்ப்பும் நிலவி வருகிறது. 

குஜராத் சட்டசபைத் தேர்தல் வருவதையொட்டி இப்படம் வெளியானால் குறிப்பிட்ட பிரிவினருக்கு இடையே வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கும் சூழல் உருவாகும் என பா.ஜ.க-வினர் கூறிவருகின்றனர். மேலும் இத்தகைய சூழலில் தேர்தல் கமிஷன் இப்படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.