Published:Updated:

’’என் கல்யாணம்... ம்ம்... சொல்றேன்!’’ - மடோனா செபாஸ்டியன்

சுஜிதா சென்
’’என் கல்யாணம்... ம்ம்... சொல்றேன்!’’ - மடோனா செபாஸ்டியன்
’’என் கல்யாணம்... ம்ம்... சொல்றேன்!’’ - மடோனா செபாஸ்டியன்

தமிழ்ப் படத்துல நடிக்குறதுக்கு முன்னாடியே 'ட்ரீம் கேர்ள்' அந்தஸ்தை தட்டிய நடிகை மடோனா செபாஸ்டியன். அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலமா முன்னணி நடிகைகள் அந்தஸ்துக்கு முன்னேறிய மடோனாவிடம் மலையாளத் தமிழில் சம்சாரிச்சதுல இருந்து...

"சினிமா என்ட்ரி"

"எனக்குச் சின்ன வயசுல இருந்தே பாட்டு பாடுறதுல ரொம்ப ஆர்வம். நிறைய டிவி நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டு பாடியிருக்கேன். எனக்கு 14 வயசு இருக்கும்போது ஒரு மலையாள நிகழ்ச்சியில எனக்கு முதல் பரிசு கிடைச்சது. அதுக்கப்பறம் சின்ன ப்ரேக் எடுத்துக்கிட்டு படிப்புல அதிக கவனம் செலுத்த ஆரம்புச்சுட்டேன். பள்ளிப் படிப்பு முடிஞ்சதும் மறுபடியும் பாட ஆரம்பிச்சேன். பாட்டு  பாடுறது மட்டும் இல்லாம நிகழ்ச்சித் தொகுத்து வழங்குறதும் பண்ணிட்டிருந்தேன். அப்போ என்னை டிவியில பார்த்த அல்போன்ஸ் புத்திரன் ப்ரேமம் படத்துல நடிக்குறதுக்கான வாய்ப்பைக் கொடுத்தார். அப்பறம் அந்தப் படத்தோட சவுண்ட் டிசைனர் விஷ்ணு கோவிந்தன் டைரக்டர் நலன் கிட்ட என்னை 'காதலும் கடந்து போகும்' படத்துக்காக ரெக்கமண்ட் பண்ணார். அப்படியே கிடைச்சதுதான் எல்லா சினிமா வாய்ப்புகளும்."

"மேரி கதாபாத்திரத்துக்கு தேர்வாகி, ஏன் செலின் கதாபாத்திரத்துல நடிச்சீங்க?"

"என்னோட விருப்பம் இதுல ஒண்ணுமே  இல்ல. படத்தோட இயக்குநர்தான் கதாபாத்திரத்தை யாருக்குக் கொடுக்கணும்னு தேர்தெடுப்பார். என்கிட்ட மேரி கதாபாத்திரம் பண்ணுனு சொன்னப்போ என்னால முழு மனசா சம்மதம் சொல்ல முடியல. செலின் கதாபாத்திரத்தை மாத்தி கொடுத்ததும் எனக்கு பயங்கர சந்தோஷமா இருந்துச்சு. என்னோட ரியல் வாழ்க்கையோட செலினை தொடர்புபடுத்தி பார்க்க முடுஞ்சதுதான் இதுக்குக் காரணம்."

"வீட்ல எல்லாரும் என்ன சொன்னாங்க?"

"ப்ரேமம் படத்துக்கான பேச்சு வார்த்தை நடந்தப்போ படக்குழுவோட எங்க வீட்ல இருந்த எல்லாரும் பேசிட்டிருந்தோம். நான் சர்ச் கொயர்ல பாட்டு பாடும் போதிலிருந்தே எங்க அப்பாவுக்குத் தெரியும் கண்டிப்பா நான் மீடியாவுக்குத்தான் போவேன்னு. சின்னவயசுலேயே கர்நாடக சங்கீதம், இண்டோ-வெஸ்டர்ன் மியூசிக் எல்லாத்தையும் கத்துக்க வெச்சது அவர்தான். நான் வீட்ல கொஞ்சம் அமைதியான பொண்ணு. யார்கிட்டயும் அதிகமா பேசமாட்டேன். அதனால நான் எந்த முடுவு எடுத்தாலும் சரியாதான் இருக்கும்னு வீட்ல உறுதியா நம்புனாங்க."

"ப்ரேமம் படத்துக்கு அப்பறம் ஆடியன்ஸ்கிட்ட இருந்து வந்த ரெஸ்பான்ஸ் எப்படி இருந்துச்சு?"

"செம. தமிழ் மக்கள் ஒரு மலையாள படத்தை இவ்வளோ ரசிச்சுப் பார்ப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. தமிழ் ரசிகர்கள் மலையாளப் படத்தை அதிகமா நேசிக்க ப்ரேமம் முக்கியக் காரணமா இருக்குனு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போகூட எல்லாரும் செலின்னுதான் என்னை ஞாபகம் வெச்சுருக்காங்க. என் வாழ்க்கையில இப்படி ஒரு மாஸ் ரசிகர்கள் இன்னொரு படத்துக்குக் கிடைப்பாங்களானு தெரியல. இப்போ இருக்குறவங்களோட அன்பு கடைசி வரைக்கும் நீடிச்சா நல்லா இருக்கும்."

"மலையாளம்-தெலுங்கு ப்ரேமம். எது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?"

"படத்துல நடிச்சவங்க கிட்ட இந்தக் கேள்வி கேட்டா, அவங்க ரெண்டு படமும் நல்லா இருக்குனுதான் சொல்வாங்க. அப்படித்தான் சொல்லியும் ஆகணும். மலையாள ப்ரேமம் கவிதை மாதிரி. தெலுங்கு ப்ரேமம் லேட்டஸ்ட் வெர்ஷன் ஆஃப் லவ்னு சொல்லலாம். இது கொஞ்சம் கமர்ஷியல் நோக்கமும் இருக்குற கலர் ஃபுல்லான படம். மலையாள ப்ரேமம் கொடுத்த அனுபவத்தை என்னால மறக்கவே முடியாது. முக பாவனைகளை வெச்சு  நடிப்பை எப்படி வெளிப்படுத்தணும்னு கத்துக்கிட்டேன். 

நாகசைதன்யா-நிவின் பாலி ரெண்டு பேரையுமே விட்டுக் கொடுக்க முடியாது. மலையாளத்துல தெலுங்கு ஹீரோ, தெலுங்குல மலையாள ஹீரோ நடிச்சிருந்தா நல்லாவா இருக்கும்? ரெண்டு படத்தையும் ஒப்பிடவே முடியாது. கதையோட மையக்கருவை மட்டும் எடுத்துக்கிட்டு தெலுங்குல படத்தை இயக்க ஆரம்பிச்சார்  இயக்குநர் சந்தூ மொண்டேட்டி. மலையாள ப்ரேமம்ல இருக்குற எல்லாக் காட்சிகளும் அப்படியே தெலுங்குல இருந்தா ஈயடிச்சான் காப்பி ஆயிருக்கும். அதைத் தெலுங்கு ரசிகர்கள் விரும்பவும் மாட்டாங்க."

"தமிழ் கத்துக்கிறீங்களா?"

"தமிழ் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. பேசுனாப் புரியும். எழுதப் படிக்கக் கத்துக்கணும்கிற ஆசை இருக்கு. கவலை படாதீங்க தமிழ் ரசிகர்களே சீக்கிரம் தமிழ்ல பேசுறேன்."

"அடுத்தடுத்த படங்கள்"

"ஒரு மலையாளம், ஒரு தமிழ்ப் படங்கள்ல நடிக்குறதுக்கான பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு. இசை இல்லாம என்னோட வாழ்க்கையை நெனச்சுக் கூடப் பார்க்க முடியாது. நடிப்பை விட பாடணும்னு எனக்கு ரொம்ப ஆசை. மலையாளம்-தமிழ் ரெண்டு மொழியிலயும் கலக்கணும்னு நினைக்குறேன். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்குற எந்தப் படமா இருந்தாலும் நடிக்கத் தயார். மத்தபடி ட்ரீம் ரோல்-விஷ் லிஸ்ட்னு எதுவும் இல்ல."

"எப்போ கல்யாணம்"

"என் வாழ்க்கையில நாளைக்கு என்ன நடக்கும்னு கொஞ்சம் கூட யோசிச்சது இல்ல. நடிப்பு கூட அப்படித்தான். யோசிக்காத ஒரு தருணத்துல எல்லா வாய்ப்புகளும் தானா கிடைச்சது. கடவுளோட கருணையால சினிமா வாழ்க்கை நல்ல படியா போயிட்டு இருக்கு. ஸோ, என்னோட கல்யாணத்தையும் நான் ப்ளான் பண்ணப் போறதில்ல. நடக்குறப்போ நடக்கட்டும். அது நடக்கும் போதே நானே சொல்வேன்.’’