Published:Updated:

வெளியானது 'வேலைக்காரன்’ திரைப்படத்தின் ‘இறைவா’ பாடல்

வெளியானது 'வேலைக்காரன்’ திரைப்படத்தின் ‘இறைவா’ பாடல்
வெளியானது 'வேலைக்காரன்’ திரைப்படத்தின் ‘இறைவா’ பாடல்

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'வேலைக்காரன்' திரைப்படத்தின் இரண்டாம் பாடலாக ‘இறைவா...’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

வெளியானது 'வேலைக்காரன்’ திரைப்படத்தின் ‘இறைவா’ பாடல்

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் ஃபாசில், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். மோகன் ராஜா இயக்கிய இந்தப் படத்தை '24 AM STUDIOS' தயாரித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 29-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், `இறைவா’ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பெயர், நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவா மட்டும் சோலோ பெர்ஃபாமன்ஸ் கொடுத்த நிலையில் வெளியிடப்பட்டது. அடுத்ததாக வெளியான செகண்ட் லுக் போஸ்டரில் ஃபகத் ஃபாசிலும் தலைகாட்டியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தப் படத்தின் வெளியீட்டு வேலைகள் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான வேலைக்காரன் படத்தின் முதல் பாடலான கருத்தவனெல்லாம் கலீஜா பாடல் ஹிட்டடித்தது. இந்தநிலையில், இரண்டாவது பாடலாக இறைவா தற்போது வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலைக் கேட்க கீழே உள்ள லிங்கைக்  க்ளிக் செய்யவும்,