Published:Updated:

“நம்புங்க... நான் பூர்ணிமா பாக்கியராஜ் இல்லை!” - ‘கவண்’ பிரியதர்ஷினி

“நம்புங்க... நான் பூர்ணிமா பாக்கியராஜ் இல்லை!” - ‘கவண்’ பிரியதர்ஷினி
“நம்புங்க... நான் பூர்ணிமா பாக்கியராஜ் இல்லை!” - ‘கவண்’ பிரியதர்ஷினி

“நம்புங்க... நான் பூர்ணிமா பாக்கியராஜ் இல்லை!” - ‘கவண்’ பிரியதர்ஷினி

'வண்' படத்தில் தன் இயல்பான நடிப்பின்மூலம் கவர்ந்தவர், பிரியதர்ஷினி ராஜ்குமார். திரையில் கொடூரமான வில்லியாகப் பின்னியெடுத்த இவர், நிஜத்தில் அன்பான மனைவி, அரவணைக்கும் தாய். அவரோடு ஒரு பர்சனல் மீட்... 

''உங்களைப் பற்றி ரெண்டே வரியில் சொல்லுங்களேன்...''

''என் சொந்த ஊர் காஷ்மீர் என்றாலும் எப்போதோ சென்னையில் செட்டில் ஆகிட்டோம். படிச்சதெல்லாம் சென்னையில்தான். என் கணவர் என்.ஐ.எஃப்.டி-யில் புரொபசர். ரெண்டரை வயசுல ஒரு பொண்ணு இருக்கா. இதுக்கு மேலே சுருக்கமா சொல்ல முடியாதுங்க.'' 

''வெள்ளித்திரைக்கு வர்றதுக்கு முன்னாடி என்ன செய்துட்டிருந்தீங்க?'' 

“சின்ன வயசிலிருந்தே நடிப்பு மேல ஆர்வம். நிறைய ஆங்கில மேடை நாடகங்களில் நடிச்சுட்டிருந்தேன். கே.பாலச்சந்தர் சார் என்னைப் பார்த்துட்டு, 'பிரேமி' நாடகத்தில் நடிக்கவெச்சார். அப்புறம் கொஞ்சம் நாள் பிரேக். ஃபாரின் போய்ட்டு திரும்பினேன். பிறகு வெள்ளித்திரை வாய்ப்பு வர, 'ரெமோ', 'அச்சம் என்பது மடமையடா', 'கவண்' படங்களில் நடிச்சேன். அடுத்தடுத்து ரெண்டு படங்களில் நடிச்சுட்டிருக்கேன். அந்த கேரக்டர்கள் ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். தவிர, தொலைக்காட்சியில் வரும் விளம்பரப் படங்களில் நடிக்கிறேன்.''

''உங்க ஃபேவரைட் யார்?'' 

''நானும் என் கணவரும் காதல் திருமணம் செய்துகிட்டோம். அவர் தமிழர். நான் வடமாநிலத்தைச் சேர்ந்தவள். ஆனாலும், எங்க ரெண்டு குடும்பங்களிலும் எந்த எதிர்ப்பும் இல்லை. எங்க திருமணம் சிறப்பாக நடந்துச்சு. நாங்க வேற வேற கலாசாரங்களைப் பின்பற்றினாலும் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் வராது. அதுக்குக் காரணம், என் மாமியார்தான். அவங்க பொண்ணு மாதிரி என்னைப் பார்த்துக்கறாங்க. நான் ஷுட்டிங்காகப் போகும்போதெல்லாம் என் மகளைப் பற்றி கவலைப்படவே மாட்டேன். ஏன்னா, இந்த அம்மாவைவிட, பாட்டி அவ்வளவு அற்புதமா கவனிச்சுக்கறாங்களே. அவங்களை மாதிரி அன்பான மாமியார் கிடைக்கறதுன்னா சும்மாவா? ஸோ, என் ஃபேவரைட் மாமியார்தான். ஐ லவ் யூ மா!'' 

''உங்க நடிப்புக்குக் கிடைச்ச மறக்கமுடியாத பாராட்டு எது?'' 

'' 'கவண்' படத்தின் பாவனா கேரக்டருக்கு ரசிகர்களிடமிருந்து பாராட்டு குவிஞ்சது. அப்படி ஒரு பாராட்டை இதுக்கு முன்னாடி வாங்கினதில்லை. அந்தப் படத்தின் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் தேங்க்ஸ்.''

''உங்க ரோல்மாடல் யார்?'' 

''இந்திரா காந்தியை ரொம்பப் பிடிக்கும். தனி ஒரு பெண்ணா எல்லாரையும் சமாளிச்ச துணிவுக்கு சல்யூட். நானும் கொஞ்சம் போல்டான பொண்ணு. ஸோ, அவங்களை ஃபாலோ பண்றேன். நடிப்புலகில் உலக நாயகன் கமல் சார், மை லைஃப் டைம் ரோல்மாடல். நடிப்பைத் தவிர, ஒரு டிரஸ்ட்ல செயலாளரா இருக்கேன். ஏழை குழந்தைகள் படிப்புக்கு நிறைய உதவிகள் பண்றோம்.'' 

''சமூக வலைதளத்தில் உங்க டான்ஸ் புகைப்படங்கள் பின்னி எடுக்குதே...'' 

''எனக்கு பரதநாட்டியம்னா உயிர். என் நடன குரு, பத்மா சுப்பிரமணியம். சின்ன வயசிலிருந்து நிறைய மேடையில் ஆடியிருக்கேன்.'' 

''அதே சமூக வலைதளத்தில் நீங்க பூர்ணிமா பாக்கியராஜ் மாதிரி இருக்கீங்கனு சொல்றாங்களே...'' 

''அதை ஏன் கேட்கறீங்க. நிறைய பேர் நான் பூர்ணிமா பாக்கியராஜ் என்றே நம்பிட்டிருக்காங்க. ஒருநாள் பூர்ணிமா மேடமை சந்திச்சு, அவங்களோடு ஒரு புகைப்படம் எடுத்தேன். 'நல்லாப் பாருங்க மக்களே அவங்க வேற நான் வேறனு பதிவுபண்ணி நிரூபிக்கிறதுக்குள்ளே போதும் போதும்னு ஆகிடுச்சு.''

அடுத்த கட்டுரைக்கு