Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பிக்பாஸ் ஜூலி இப்போது விளம்பரத்திலும்!' - காரணம் சொல்லும் இயக்குநர்

Chennai: 

ராமநாதபுரத்தில் பாபா பகுர்தீனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆறடி உயரம், நீண்ட முடி, கறுப்பு ஆடை எனத் தமிழ் சினிமாவின் வில்லன் மெட்டீரியலான இவர், பிஸியான விளம்பரம் மற்றும் குறும்பட இயக்குநரும்கூட. `பிக் பாஸ்' ஜூலியின் கழுத்தில் அவர் அரிவாளை வைத்திருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் தற்போது உலாவருகிறது. `என்னாச்சு பாஸ்?' என பகுர்தீனிடம் கேட்டேன்.

ஜூலி``நான் `வெள்ளைக் காக்கா'னு விளம்பரப் பட நிறுவனம் ஒன்று சென்னையில ஆரம்பிச்சு, சக்சஸ்ஃபுல்லா போயிகிட்டிருக்கு. கிட்டத்தட்ட ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள்ல இருக்கிற பல தனியார் நிறுவனங்களுக்கு விளம்பரப் படங்கள் எடுத்துக்கொடுத்துட்டிருக்கேன். `நாளைய இயக்குநர்' வரைக்கும் பல குறும்படங்கள் எடுத்திருக்கேன். என் குறும்படங்களை, லட்சக்கணக்கான பேர் யூ டியூபில் பார்த்திருக்காங்க. அது மூலமா பல சினிமா வாய்ப்புகளும் வந்துக்கிட்டிருக்கு.

நாலரை வருஷங்களுக்கு முன்னாடி ஆபாவணன் சார்கிட்ட `ஊமைவிழிகள் பார்ட் 2’ எடுக்க அனுமதி கேட்டிருந்தேன். அப்போ `ஓ.கே' சொல்லியிருந்தார். இப்போ அதுக்கான ஸ்க்ரிப்ட் எழுதி முடிச்சுட்டேன். அவரே `ஊமைவிழிகள் பார்ட் 2’ எடுக்கப்போறதா ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். ஒருவேளை அவரே அந்தப் படத்தைப் பண்றதா இருந்தா, வேற டைட்டில்ல என் கதையைப் படமா பண்ணுவேன்.''

`` `பிக் பாஸ்' ஜூலிக்கும் உங்களுக்கும் என்ன பிரச்னை?''

``பிரச்னை எதுவும் இல்லை. நான் இப்ப எடுக்கிற விளம்பரப் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்துல அவங்கதான் நடிக்கிறாங்க. படத்துக்கான வேலைகள் ஒருபக்கம் போயிக்கிட்டிருந்தாலும் விளம்பரப் படங்களையும் எடுத்துக்கிட்டுதான் இருக்கேன். ராமநாதபுரத்துல இருக்கிற இலாஹி ஷாப்பிங் மாலுக்காக ஜூலியை வெச்சு ஒரு விளம்பரம் எடுக்கலாம்னு யோசிச்சேன். அதை ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸா போட்டப்போ பயங்கர எதிர்ப்பு. ஒரே நெகட்டிவ் கமென்ட்ஸ்.

அப்புறம் முக்கியமான விஷயம், ஜூலி ஜூலிஎங்க ஊரு பொண்ணு. பரமக்குடி பொண்ணு. `பிக் பாஸ்'ல கலந்துக்கிட்ட எல்லோருக்குமே சினிமா பின்னணி இருக்கு. ஆனா, ஜூலிக்கு அப்படி எதுவும் இல்லை. மனசுல படுறதை அப்படியே பேசுற ஆள். அதுக்கே அந்தப் பொண்ணை எல்லோரும் அவ்ளோ மோசமா திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அதனால அந்தப் பொண்ணையே விளம்பரப் படத்துல நடிக்கவைக்கலாம்னு முடிவுசெஞ்சு ஃபிக்ஸ் பண்ணிட்டேன். ஏன்னா, இந்த உலகத்துல யாரும் கெட்டவங்களும் இல்லை; நல்லவங்களும்இல்லை. எல்லாமே சந்தர்ப்பச் சூழல்தான் அல்லது நாம பார்க்கிற பார்வை அப்படி!

சூப்பர் மார்க்கெட் ஓனருக்கும் இதுல ஆரம்பத்துலயிருந்தே உடன்பாடில்லை. ஆனா, நான் பிடிவாதமா ஜூலிக்காக நின்னதும் ஓகே சொல்லிட்டார். ஜூலியை வெச்சு நான் விளம்பரம் எடுக்கிறது தெரிஞ்சதும் சென்னையில என் கம்பெனியோட வொர்க்கிங் பார்ட்னரா இருக்கிற ஹேமா மேடம், பார்ட்னர்ஷிப்பையே முறிச்சுக்கிட்டாங்க. அதுக்கும் ஜூலியோட கேரக்டரைத்தான் சொன்னாங்க. இப்படி எல்லாத் தரப்புலயும் எதிர்ப்பு வர வர, நான் ஜூலியை வெச்சு அந்த விளம்பரத்தை ஒரே நாள்ல எடுத்து முடிச்சேன்.''

``ஜூலியைப் பற்றி நீங்க இப்போ என்ன நினைக்கிறீங்க?''

``சினிமா ஆள்களைவிட செம திறமையான பொண்ணு. எதைச் சொன்னாலும் ஒரே டேக்ல பண்ணி அசத்திடுது. பழகுறதுக்கும் உண்மையான பொண்ணு. காயத்ரி, ஆர்த்தியைவிட ஜூலி நல்ல பொண்ணு. `அண்ணா'னு கூப்பிடுறப்போ அதுல உண்மை இருக்கும். `போட்டோஷூட், சினிமாவுல நடிக்கிறியாமா?'னு நான் கேட்டதும், `அண்ணன் படத்துல நடிக்காமையா?'னு சொல்லுச்சு. காசு, பணம்கூட அந்தப் பொண்ணு எதிர்பார்க்க மாட்டேங்குது. `நிறைய சாதிக்கணும்ணா'னு சொல்லுச்சு. அவங்க அம்மா கால் பண்ணி, `பேட்டா காசு வாங்குடி!'னு சொன்னதுக்குக்கூட, `போம்மா... அண்ணன்கிட்ட நடிக்க யாராச்சும் காசு வாங்குவாங்களா?'னு கேட்டுச்சு. இந்தப் படத்துல ஹீரோயினுக்குச் சமமான ரோல் என் தங்கச்சி ஜூலிக்கு. தமிழ் சினிமாவுல ஜூலிக்கு நிச்சயம் பெரிய இடம் உண்டு!'' என ஏகத்துக்கும் நெகிழ்கிறார் பாபா பகுர்தீன்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்