Published:Updated:

“கர்நாடக சங்கீதம் பாடுறவரும், கானா பாடுறவரும் ஒரே மேடையில பாடணும்!” - குரங்கன் ‘ராக்’ குழு பாடகர் கேபர் வாசுகி

“கர்நாடக சங்கீதம் பாடுறவரும், கானா பாடுறவரும் ஒரே மேடையில பாடணும்!” - குரங்கன் ‘ராக்’ குழு பாடகர் கேபர் வாசுகி
“கர்நாடக சங்கீதம் பாடுறவரும், கானா பாடுறவரும் ஒரே மேடையில பாடணும்!” - குரங்கன் ‘ராக்’ குழு பாடகர் கேபர் வாசுகி

“கர்நாடக சங்கீதம் பாடுறவரும், கானா பாடுறவரும் ஒரே மேடையில பாடணும்!” - குரங்கன் ‘ராக்’ குழு பாடகர் கேபர் வாசுகி

‘எல்லாருக்கும் சமமான மேடை வேணும். எல்லா இசை வடிவத்துக்கும் பொது மேடையா அது இருக்கணும்’ என்கிறார் குரங்கன் ‘ராக்’ இசைக்குழு பாடகர் கேபர் வாசுகி.

பாரம்பர்ய இசைக்கு சென்னை அளித்து வரும் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் ‘கிரியேட்டிவ் சிட்டீஸ்’பட்டியலில் சென்னையைச் சேர்த்துள்ளது யுனெஸ்கோ அமைப்பு. சென்னையுடன் சேர்த்து நகர வடிவமைப்புக்காகத் துபாய், இலக்கியத்துக்காகத் தென்னாப்பிரிக்காவின் டர்பன் உள்ளிட்ட 64 நகரங்கள் யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளன. இந்தப் புதிய நகரங்களுடன் சேர்த்து உலகம் முழுவதும் உள்ள 72 நாடுகளைச் சேர்ந்த 180 நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. கைவினைப் பொருள்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை பிரிவில் ஜெய்ப்பூர், பாரம்பர்ய இசைக்காக வாரணாசி உள்ளிட்ட இந்திய நகரங்கள் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

‘பாரம்பர்ய இசைப் பங்களிப்புக்காக யுனெஸ்கோ அமைப்பின் பட்டியலில் இடம்பெற்றதற்காகச் சென்னை மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை அளித்துள்ள பங்களிப்பு விலைமதிப்பற்றது. இது நமது நாடே பெருமைகொள்ளும் தருணம்’ என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. ‘சென்னை மார்கழி இசை விழாக்களுக்குக் கிடைத்த UNESCO அங்கீகாரம் தகுதிக்கும், ரசனைக்கும் கிடைத்தது. தமிழர் பெருமையைப் பிறர் பாடக் கேட்பதில்தான் சுகமும், பெருமையும். இந்தியப்பிரதமர் சென்னையைப் பாராட்டுதல், தமிழுக்கே பெருமை. தேய்த்தாலும் தேயாது தெற்கு’ என்று வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன். ‘மண்டப அரங்குகளில் இசைக்கும் கர்நாடக சங்கீதம் முதல் மண்ணின் மனிதர்களிடம் ஒலிக்கும் கானா பாடல்கள் வரை முத்தமிழின் ஓர் அங்கமான இசைத்தமிழின் பல வடிவங்களை மேடைகளிலும் திரைப்படங்களிலும் வளர்க்கும் சென்னை மாநகரத்துக்குப் பாரம்பர்ய இசைக்கான படைப்பு நகரம் என்ற பெருமையை யுனெஸ்கோ அமைப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. நன்றியையும் மகிழ்ச்சியையும் இதயத்தால் இசைப்போம்’ எனத் தெரிவித்திருக்கிறார் திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின்.

இத்தருணத்தைக் குறித்து பேசிய கர்நாடக இசைக்கலைஞரும், திரையிசைப் பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ, “இந்த இசை கோட்டையைக் கட்டுவதற்கு தூண்களாக இருந்த பல்வேறு இசை வடிவங்களை இசைக்கும் ஒவ்வொரு கலைஞர்களையும் நினைவுகூர வேண்டிய தருணமிது. கர்நாடக இசைக்கும், வெகுஜன இசைக்கும், நடன இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் சென்னை புகலிடமாக விளங்குகிறது” என்று தெரிவித்தார்.

 குரங்கன் ”ராக்” இசைக்குழுவின் வாசுகியும், டென்மாவும், பாடுபொருள்களின் வழியேயும், இசை வரிகளிலும் தமிழில் புது சிந்தனைகளை விதைத்து வருகிறார்கள். எண்ணூர் சிற்றோடையை ரியல் எஸ்டேட்டாக மாற்றுவதை எதிர்த்து, அதைப் பாதுகாக்க ‘பொறம்போக்கு’ என்னும் பாடலை இயற்றிவர்கள் குரங்கன் குழுவினர். குரங்கன் டீமின் வரிகளைத்தான் ’பொறம்போக்கு உனக்கு இல்ல’ என்னும் கர்நாடக சங்கீத ஸ்டைலில் பாடினார் பாடகர் டி.எம் கிருஷ்ணா

சென்னைக்குக் கிடைத்துள்ள ‘கிரியேட்டிவ் சிட்டி’ கெளரவம் குறித்துப் பேசிய குரங்கின் குழுவின் பிரதான பாடகர் கேபர் வாசுகி, “யுனெஸ்கோ அமைப்பு சென்னைக்குக் கொடுத்திருக்கிற கிரியேட்டிவ் சிட்டி அங்கீகாரத்தினால ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்கு. ஆனால், இந்த மாதிரியான அங்கீகாரங்கள் எந்த விதமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது எனக்குத் தெரியல. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் சினிமா பாடல்கள்தான் பரவலாவே ரசிக்கப்படுகிற இசையா இருக்கு. மக்களை முழுமையாக ஆக்கிரமிக்கிறது சினிமா பாடல்களாகத்தான் இருக்கு. அதைத் தவிர கர்நாடக இசைக் கச்சேரிக்கான சபாக்கள் இருக்கு. “ஊரூர் ஆல்காட் குப்பம் விழா” மாதிரியான சில முயற்சிகள்தான், கர்நாடக இசைக்கும், நேட்டிவ் கலைகளுக்கும் சேர்த்து பொது மேடைய அமைக்கத் தொடங்கியிருக்கு.

இந்த முறைக்கு இந்த மேடைதான் அப்படிங்கிற ஸ்டீரியோடைப்பை உடைச்சு, பொது மேடையை உருவாக்கும் முயற்சிகள் இப்போதான் தொடங்கியிருக்கு. கர்நாடக சங்கீதம் பாடுறவரும், கானா பாடுறவரும், ராப், ராக் என பலவிதமான இசை வடிவத்தை இசைக்கிறவங்களும் ஒரே மேடையில பெர்ஃபார்ம் பண்றதுக்குச் சூழல் உருவாகணும். அதுதான் உண்மையான வெற்றின்னு நினைக்கிறேன். மக்களுக்கு இடையில் இருக்கிற பிரிவினை, இசைக் கலைஞர்கள்கிட்டயும் இருக்கு. இசை வடிவங்களுக்கு நடுவுலயும் இருக்கு. பிரிவினைகள் தகர்ந்துபோய், எல்லா மொழியிலயும், எல்லா இசை வடிவங்களும் பெர்ஃபார்ம் பண்றதுக்கான சூழலும், முயற்சிகளும் நடந்தா, அதுதான் வெற்றி. அந்த முயற்சிதான் சென்னையோட இசைக் கலாசாரத்தை இன்னும் தூக்கி நிறுத்தும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு