Published:Updated:

பிட்ஸ் பிரேக்

கார்க்கிபவா

பிட்ஸ் பிரேக்

 மலேசியாவில் நடைபெற்ற விருது விழாவில், அனைவரையும் 'அட’ போடவைத்திருக்கிறார் இந்தி நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். நடன ரிகர்ஸலின்போது ஜாக்குலினுக்குக் காலில் காயம் ஏற்பட, அவரை ஓய்வெடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், 'என் அம்மா மலேசியா. இங்கேதான் என் சின்ன வயசு நினைவுகள் இருக்கு. அதனால் மலேசியாவும் மலேசிய ரசிகர்களும் எனக்கு ஸ்பெஷல். அவங்களை ஏமாத்த முடியாது’ எனக் காயத்தைப் பொருட்படுத்தாமல் ஆடி அசத்தியிருக்கிறார்! 

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

 ஷகிலாவின் சாஃப்ட் வெர்ஷனாக ஆந்திராவில் அள்ளு கிளப்புகிறார் சார்மி. நடிக்க வந்து ஒரு டஜன் வருடங்கள் ஆகிவிட்டன. தேவிஸ்ரீ பிரசாத் உள்பட, ஒரு டஜன் பேருடன் கிசுகிசுக்கள் கிளம்பியும் பொண்ணு இன்னமும் செம சார்மிங். பூரி ஜெகநாத் இயக்கத்தில், பாலியல் தொழிலாளியாக சார்மி நடித்த 'ஜோதிலக்‌ஷ்மி’ படத்துக்கு ஆந்திராவில் அபார ஓப்பனிங்!

பிட்ஸ் பிரேக்

 ஆஸ்கர் விருதுகள் குவித்த 'லைஃப் ஆஃப் பை’ பட இயக்குநர் ஆங் லீ, அடுத்த ஆட்டத்துக்குத் தயார். 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ ஹீரோவான வின் டீசலுடன் இணைகிறார் ஆங் லீ. ஈராக் போரின் அரசியல் பின்னணியை நையாண்டி செய்யும் திரைக்கதையாம். ‘Billy Lynn’s Long Halftime Walk’  என்பது படத்தின் பெயர்!  

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

 மாதத்துக்கு ஒரு வைரலில் இடம்பிடிப்பது நயன் திட்டமிட்டுச் செயல்படுத்தும் கேம் ப்ளானோ... என்னவோ? இந்த மாதம் ஹிட் வைரல் 'நானும் ரவுடிதான்’ பட இயக்குநர் விக்னேஷ் சிவனுடனான குல்பி செல்ஃபி. 'இந்தப் படம் உண்மைதானா?’ என்ற விவாதத்துக்கு இடையே 'தாடி வெச்சா நயனுக்குப் பிடிக்குமோ?’ என, எர்வாமார்ட்டினை கன்னத்தில் தடவிக்கொண்டிருக்கிறது இன்னொரு குரூப்.

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

 'சன்னி லியோனுக்கு சுத்தம்னா என்னன்னே தெரியாது’ எனப் பொங்கியிருக்கிறார் இந்தி நடிகை செலினா. இவரின் வீட்டில்தான் சன்னி லியோன் கணவருடன் இரண்டு வருடங்களாகக் குடியிருந்தார். ஆனால், லீஸ் காலகட்டம் முடிந்தும் வீட்டைக் காலி பண்ணாத சன்னி லியோனை, ஏக அதட்டல் மிரட்டல்களுக்குப் பிறகுதான் காலி பண்ணவைத்தாராம் செலினா. 'ரெண்டு வருஷத்துல வீட்டை நாஸ்தி பண்ணிட்டாங்க. வீட்டை முழுசா ரிப்பேர் பார்க்கணும்’ எனப் புலம்புகிறார் செலினா!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

 'உலகின் மின்னல் மனிதன்’ உசேன் போல்ட், நம் பக்கத்து வீட்டுக்காரராக இருந்தால் நாம் சந்தோஷப்படுவோம்தானே! ஆனால், 'சுத்த நான்சென்ஸா இருக்கு’ என அலுத்துக்கொள்கிறார் போல்ட்டின் நிஜ பக்கத்து வீட்டுக்காரப் பெண். காரணம், 'போல்ட் வீட்டில் மாலை 4 மணிக்குத் தொடங்கும் பார்ட்டி, விடியவிடிய சவுண்டு கொடுக்கும். ஒருநாள்கூட நிம்மதியாகத் தூங்க முடியாது’ என்கிறார். போலீஸில் சொன்னாலும், 'சார் ஓட ஆரம்பிச்சா, யார் துரத்திப் பிடிக்க முடியும்?’ எனக் கலாய்க்கிறார்களாம். நட்டாவா இருப்பார் போல்ட்டு?

அடுத்த கட்டுரைக்கு