Published:Updated:

“ ‘முகவரி’ படத்துக்கு ஒரு ஓட்டுல தேசிய விருது மிஸ்..!” - இயக்குநர் வி.இஸட்.துரை

“ ‘முகவரி’ படத்துக்கு ஒரு ஓட்டுல தேசிய விருது மிஸ்..!” - இயக்குநர் வி.இஸட்.துரை
“ ‘முகவரி’ படத்துக்கு ஒரு ஓட்டுல தேசிய விருது மிஸ்..!” - இயக்குநர் வி.இஸட்.துரை

“ ‘முகவரி’ படத்துக்கு ஒரு ஓட்டுல தேசிய விருது மிஸ்..!” - இயக்குநர் வி.இஸட்.துரை

“சமுத்திரக்கனி எனக்கு அண்ணன் மாதிரி. இந்தக் கதைக்கு அவர்தான் கச்சிதமா இருப்பார்னு எனக்குத் தோணுச்சு. தவிர, கனி இன்னைக்கு வேற லெவலுக்கு வந்துட்டார். அவர் சொல்ற சின்ன விஷயமும் பிரச்னை இல்லாம பலருக்குப் போய்ச்சேருது. அந்த 'ஐகான் ஸ்பெஷாலிட்டி' இந்தக் கதைக்குத் தேவைப்பட்டுச்சு. முக்கியமா, இந்தப் படத்துல வர்ற ஷாக்கிங் க்ளைமாக்ஸுக்கு சமுத்திரக்கனியோட ஃபெர்பார்மென்ஸ்தான் தேவைப்பட்டுச்சு. அதனாலதான் அவரை செலக்ட் பண்ணேன்" உற்சாகமாகப் பேசுகிறார், இயக்குநர் வி.இஸட்.துரை. '6 மெழுகுவர்த்திகள்' படத்திற்குப் பிறகு சமுத்திரக்கனியை 4 கெட்அப்களுக்கு மாற்றி 'ஏமாலி'யை இயக்கியிருக்கிறார். 

" 'ஏமாலி' என்ன மாதிரியான படம்?"

"காதல் மட்டும்தான் களம். இந்தக் காலத்துப் பசங்க, பொண்ணுங்களோட மென்டாலிட்டி எப்படி இருக்கு, காதல், காமம், பிரேக் அப்... எல்லாத்தையும் அவங்க எப்படி எடுத்துங்கிறாங்க, அவங்களோட முடிவுகள் எங்கே போய் முடியுதுங்கிற வரை பெரும் ஆராய்ச்சியே பண்ணியிருக்கேன். பொண்ணுங்க மனநிலை வெர்சஸ் பசங்க மனநிலை... ரெண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கிற ஒரு படமா 'ஏமாலி' இருக்கும். படத்தோட டீஸருக்கு நல்ல ரெஸ்பான்ஸ். அது ரிலீஸ் ஆகும்போதும் கிடைக்கும்னு நம்புறேன்."

"நான்கு கெட்அப்ல சமுத்திரக்கனியோட ஃபெர்பார்மென்ஸ் எப்படி இருந்தது?"

"ஐ.டி ஊழியர், லிவிங் டு கெதர் ரிலேசன்ஷிப்ல இருக்கிற ஆள், போலீஸ், சிஐடி ஆபீஸர்... நாலு கேரக்டருக்கும், நாலு கெட்அப்புக்கும் சமுத்திரக்கனி கச்சிதமா பொருந்திப் போயிருக்கார். சிஐடி ஆபீஸரா, முழுக்க ஹிந்தி பேசுவார். கையில வாக்கிங் ஸ்டிக்கோட ஐ.டி கம்பெனியில வேலை பார்ப்பார். தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரியா வரும்போது, ஹிந்தி கலந்த தமிழ் பேசுவார்... இப்படித் தன்னால முடிஞ்ச அளவுக்கு சிறப்பா உழைச்சிருக்கார், கனி. அவருக்கு இந்தப் படம் மட்டுமில்ல, நிறைய கமிட்மென்ட்ஸ் இருக்கு. இல்லைனா, இன்னும் புழிஞ்சு எடுத்திருக்கலாம். தவிர, கனியோட வாய்ஸுக்கு ஆடியன்ஸை ஈர்க்குற சக்தி அதிகம். அவர் பேசுற வசனங்களைக் கண்கொட்டாம கவனிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இந்தப் படத்துல பொண்ணுங்களுக்கு சப்போர்ட் பண்ணி கனி பேசுற வசனங்கள் எல்லாம் வேற லெவல்ல இருக்கும்."

''வசூல், விருதுகள்... ரெண்டுக்கும் நடுவுலதான் உங்க படங்கள் டிராவல் ஆகிட்டு இருக்கு. இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கம் நகர்ந்ததே இல்லையே... ஏன்?"

"வசூல், விருதுகளைவிட என் படங்கள் ஒரு குட் ஃபீலிங் கொடுக்குதே... அதுபோதும். இந்த இரண்டைத் தவிர, இத்தனை வருடமா நான் சினிமாவுல இருக்கிறதே ஒரு இயக்குநரா எனக்கான பெரிய அங்கீகாரமாதான் பார்க்குறேன். முதல் படம் 'முகவரி'க்கு ஒரு ஓட்டுல தேசிய விருது மிஸ் ஆகிடுச்சு. '6 மெழுகுவர்த்திகள்' படத்துக்கும் அப்படித்தான் நடந்தது. சினிமாவுக்கு வரும்போது நான் யார்கிட்டேயும் உதவி இயக்குநரா இருந்ததில்லை. பி.ஜி படிச்சுக்கிட்டு இருக்கும்போதே முதல் படமா 'முகவரி'க்கு அஜித்தை இயக்கினேன். விருதுகள், கமர்ஷியல் ஆஸ்பெக்ட்ஸ் மேல எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனா, 'ஏமாலி' வசூல் ரீதியாவும் பெரிய வெற்றி பெரும்னு நம்பிக்கை இருக்கு. படத்துல அதுல்யா ரவி, ரோஷினினு ரெண்டு ஹீரோயின். பிரமாதமா நடிச்சிருக்காங்க. வழக்கமா என படங்கள்ல காமெடி கம்மியா இருக்கும். இந்தப் படத்துல சிங்கம்புலி - பாலசரவணன் காம்பினேஷன் செம்மயா வொர்க் அவுட் ஆகியிருக்கு."

"அஜித்தை மறுபடியும் இயக்குற ஐடியா இருக்கா?"

"அஜித்துக்குப் பிடிச்ச படம் 'முகவரி'. இதை அவரே பல இடங்கள்ல பதிவு பண்ணியிருக்கார். அந்தப் படத்துக்கு டப்பிங் பண்ணும்போதே, ''என் ஒவ்வோர் படத்துக்கும் டப்பிங் பேசும்போது என்னடா நடிச்சிருக்கனு என்னை நானே திட்டிக்குவேன். முதல் முறையா, 'நானா இப்படி நடிச்சிருக்கேன்'னு ஆச்சரியப்பட்டேன் துரை''னு கட்டிப்பிடிச்சுப் பாராட்டினார். தவிர, அன்னைக்கு ராத்திரியே ஒரு கார் வாங்கி எனக்குப் பரிசா கொடுத்தார். என்கிட்ட பல கார் இருந்தது. ஆனா, மத்த ஹீரோக்கள் மாதிரி ஜெயிச்சபிறகு கிஃப்ட் கொடுக்காம, படம் டப்பிங்ல இருக்கும்போதே நெகிழ்ந்துபோய்க் கொடுத்த அந்தக் கார் எனக்கு ரொம்ப ஸ்பெஷலா இருந்தது. ஒரு இயக்குநரா எனக்குக் கிடைச்ச பெரிய மரியாதையா அதைப் பார்க்குறேன். இப்போ அவர் ஸ்கை லெவலுக்கு வளர்ந்துட்டார். கண்டிப்பா அவரோட வொர்க் பண்ணுவேன். அவருக்கான ஸ்கிரிப்டும் என்கிட்ட ரெடியா இருக்கு. அதுக்கான நேரம் கண்டிப்பா கூடிவரும். 'ஏமாலி'க்குப் பிறகு சிம்பு நடிக்கிற ஒரு படமும், விக்ராந்த் - கதிர் காம்பினேஷன்ல 'ரெட்டை'னு ஒரு படமும் பண்ணப்போறேன்."

''படத்துல 'பிரேக்-அப்' பத்தி ஒரு பாட்டு எழுதியிருக்கீங்களாமே?"

''ஒண்ணு இல்ல, ரெண்டு பாட்டு இருக்கு. ரெண்டுமே பிரேக்அப் பாட்டுதான். ரெண்டும் வெவ்வேறு மெட்டுல இருக்கும். பொண்ணுங்களுக்குப் பசங்க கொடுக்கிற டார்ச்சர்ஸ் என்ன, பசங்க பொண்ணுங்களுக்குக் கொடுக்கிற டார்ச்சர்ஸ் என்னனு ரெண்டையும் நான்தான் எழுதியிருக்கேன். காதல் தோல்வினா சோகமா சுத்தணும்னு நமக்கு நாமே நினைச்சுக்கிறோம். ஆனா, இந்தப் படத்துல அதுக்குப் பார்ட்டி வெச்சுக் கொண்டாடுவார் ஹீரோ. பிளாக் அண்ட் பிளாக் டிரெஸ் கோட்ல 'ஹார்ட் பிரேக்கிங் செலிபிரேஷன்'னு டைட்டில் வெச்சு ஒரு விழா நடக்கும். அந்த நிகழ்ச்சியிலதான், பொண்ணுங்க எல்லோரும் பசங்களைக் கழுவி ஊத்துறதும், பசங்க எல்லோரும் பொண்ணுங்களைக் கழுவி ஊத்துறதுமா இந்த பிரேக்-அப் பாட்டோட வரிகள் இருக்கும். தவிர, ரெண்டு இடத்துல இந்தப் பாட்டு வரும்."

அடுத்த கட்டுரைக்கு