Published:Updated:

'ஹீரோயின் மெஹ்ரின்... மன்னிச்சிரும்மா!' - இயக்குநர் சுசீந்திரன்

'ஹீரோயின் மெஹ்ரின்... மன்னிச்சிரும்மா!' - இயக்குநர் சுசீந்திரன்
'ஹீரோயின் மெஹ்ரின்... மன்னிச்சிரும்மா!' - இயக்குநர் சுசீந்திரன்

'ஹீரோயின் மெஹ்ரின்... மன்னிச்சிரும்மா!' - இயக்குநர் சுசீந்திரன்

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சுசீந்திரன் 'நான் மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை', 'ஆதலால் காதல் செய்வீர்', 'பாண்டியநாடு' என வரிசையான பல ஹிட் படங்களைக் கொடுத்தார். சமீபத்தில் இவர் இயக்கிய 'மாவீரன் கிட்டு' திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரன் இயக்கி நவம்பர் 10ம் தேதி வெளியான படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்'. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க, அறிமுக நாயகியாக தமிழ் திரையுலகில் களம் கண்டார் மெஹ்ரின் பிர்சடா. மேலும், விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் டீசரும், ட்ரெய்லரும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் வெளியானவுடன் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. படம் வெளிவந்த மூன்றாவது நாள், இயக்குநர் சுசீந்திரன் திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்து படத்தில் உள்ள ஹீரோயின் காட்சிகளை நீக்கிவிட்டு படத்தின் இரண்டாவது வெர்ஷனை அறிமுகப்படுத்தினார். இதை பற்றிய முழு விவரத்தை அறிந்துகொள்ள இயக்குநரிடமே பேசினோம். 

''கதை எழுதும்போது கமர்ஷியல் நோக்கத்துக்காக ஹீரோயின் கேரக்டரை படத்தில் வைத்தோம். அப்படித்தான் படப்பிடிப்பும் நடந்துச்சு. படத்தை எடிட் செய்யும்போது ஹீரோயின் இருக்கிற மாதிரி ஒண்ணும் இல்லாத மாதிரி ஒண்ணும் எடிட் பண்ணோம். தமிழ், தெலுங்கு ரெண்டிலும் படம் வெளியாகுது. அதனால, ஹீரோயின் இல்லாம படம் வெளிவந்தால் சுவாரஸ்யம் குறைஞ்சுடுமோனு பயம் இருந்துச்சு. இந்த கேரக்டர் ஸ்கிரிப்ட்டை ப்ரேக் பண்ணுதுனு நிறைய விமர்சனங்கள் என் நண்பர்களும் பத்திரிகை நண்பர்களும் சொன்னாங்க. அதை ஏத்துக்கிட்டு படத்தோட இரண்டாவது வெர்ஷனை இப்போ ரிலீஸ் பண்ணிருக்கோம். இந்த வெர்ஷன்ல ஹீரோயின் வர்ற காட்சிகள் எதுவும் இருக்காது. இந்த முடிவை எடுத்த பிறகு, மெஹ்ரின் கிட்ட 'இந்த மாதிரி கதையை ப்ரேக் பண்ணுதுனு ரிவ்யூஸ் வருது. அதனால, இந்த காட்சிகளை எல்லாம் நீக்கிட்டு ரிலீஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கோம். சாரி மெஹ்ரின்'னு சொன்னேன். அவங்களும் 'எனக்கு புரியுது சார். நான் எதுவும் தப்பா எடுத்துக்கலை. கவலைப்படாதீங்க. நோ வொரி'னு சொன்னாங்க. இது என்னோட தப்புதான். சில முடிவுகள் சரியா இருக்கும், சில முடிவுகள் ஏமாற்றமாகவும் இருக்கும். தப்பு பண்ணிட்டோம்னு தெரிஞ்சும் அதை மாத்தாம இருக்கக் கூடாது’’ என்றவர்,

’’அப்படிதான் 'பாயும் புலி' படத்துல சமுத்திரக்கனிதான் வில்லன்னு க்ளைமேக்ஸ்க்கு முன்னாடிதான் காமிக்கணும்னு ப்ளான் பண்ணேன். அப்புறம் திடீர்னு எடிட்ல இன்டர்வெல் ப்ளாக்லயே விஷாலோட அண்ணன் சமுத்திரக்கனிதான் வில்லன்னு மக்களுக்கு தெரிஞ்சுடும். அதுனால, செகன்ட் ஆஃப் விறுவிறுப்பு இல்லாம போச்சுனு கமென்ட்ஸ் வந்துச்சு. கிரிக்கெட் மேட்ச்ல கடைசி ஓவர்ல இந்தியா ஜெயிக்க ஒரு சதவீதம் வாய்ப்பு இருந்தாலும் டிவியை ஆஃப் பண்ணிட்டு போகாம, எங்கயாச்சும் மேஜிக் நடந்திடாதானு கடைசி வரை உட்கார்ந்து பாக்குற ஆள் நான். அது மாதிரிதான் இதையும் முயற்சி பண்ணிருக்கேன். இந்த வெர்ஷன் நல்லாயிருக்குனு விமர்சனங்கள் வந்துட்டு இருக்கு.வெள்ளிக்கிழமைக்கும் மேல படம் தியேட்டர்ல இருந்தா படம் ஹிட் லிஸ்ட்ல வந்திடும், இல்லைனா ஃப்ளாப் லிஸ்ட்க்கு போயிடும். என்ன நடக்குதுன்னு காத்திருந்துதான் பார்க்கணும்’’ என்று முடித்துக்கொண்டார் இயக்குநர் சுசீந்திரன். 

அடுத்த கட்டுரைக்கு