மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நிறைவேறாத ஆசை - அமரர் 'கல்கி’யின் அழியாக் காவியமான 'சிவகாமியின் சபதம்’ கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது! கதைநாயகன் 'நரசிம்ம பல்லவர்’ கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என்றும், ஆடல் மங்கை 'சிவகாமி’யின் கதாபாத்திரத்தில் பரதக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தை நடிக்க வைக்க வேண்டும் என்றும் விரும்பினார் எம்.ஜி.ஆர். சினிமாவில் நடிப்பதற்கு பத்மா சுப்பிரமணியம் விரும்பவில்லை ஆதலால், அவர் இதற்கு மறுத்துவிட்டார்.

''இல்லே... நீ நடிக்கிறே! இந்தக் கதாபாத்திரத்துக்கு நீதான் பொருத்தமாக இருப்பாய். நீ நடிக்கலேன்னா இந்தப் படத்தை நான் எடுக்கவே மாட்டேன்!'' என்றார் எம்.ஜி.ஆர்.

''அது உங்க விருப்பம். எனக்கு நடிக்க இஷ்டமில்லை!'' என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் பத்மா சுப்பிரமணியம்.

ஓவியர் சங்கர்லீ, எம்.ஜி.ஆரின் கனவை அட்லீஸ்ட் படங்களின் மூலமாகவாவது ஓரளவு நிறைவேற்றி வைக்கலாம் என்று ஆசைப்பட்டார்.

நரசிம்ம பல்லவராக எம்.ஜி.ஆரையும், சிவகாமியாக சரோஜாதேவியையும் அழகான ஓவியமாக்கினார்.

மற்ற கதாபாத்திரங்கள்..?

நரசிம்ம பல்லவரின் தந்தை மகேந்திர பல்லவராக எஸ்.வி.ரங்காராவ், தளபதி பரஞ்ஜோதியாக ஜெமினி கணேசன், நாகநந்தி அடிகளாக எம்.என்.நம்பியார் ஆகியோர் உருமாறினார்கள்.

'சிவகாமியின் சபதம்’ கதை உங்களுக்குத் தெரியும்தானே? ஆயனர் மகளான சிவகாமி, மன்னன் புலிகேசியால் வாதாபி நகரில் சிறை வைக்கப்பட்டதும், சிறைப்பிடித்த பல்லவர்களைத் துன்புறுத்தாமல் இருக்க வேண்டுமானால் தினம் தினம் சபையில் சிவகாமி ஆட வேண்டும் எனக் கட்டளையிட்டு அவளை ஆட வைத்ததையும், நரசிம்ம வர்மர் போர் தொடுத்து வந்து வாதாபியைத் தீக்கிரையாக்கி சிவகாமியை மீட்டதையும், இடைப்பட்ட காலத்தில் தனது காதலன் நரசிம்ம வர்மர் வானமாதேவியை திருமணம் புரிந்துகொண்டதை அறிந்து, மனதளவில் உடைந்த சிவகாமி, தன் வாழ்நாளை பரதத்துக்காகவே அர்ப்பணித்துக்கொண்ட கதையை மனதுக்குள்ளாக ஓட்டியபடி இந்தப் படங்களை ரசியுங்கள். எம்.ஜி.ஆரின் கனவு உங்கள் உள்ளத்தில் திரைப்படமாக ஓடுவதை உணர்வீர்கள்!