Published:Updated:

''எனக்கு பாய்ஃப்ரெண்ட்ஸ் அதிகம்!''

க.நாகப்பன்

''எனக்கு பாய்ஃப்ரெண்ட்ஸ் அதிகம்!''

க.நாகப்பன்

Published:Updated:

பக்கத்து வீட்டுப் பெண்போலப் பாந்தமாக இருக்கிறார் லட்சுமி மேனன். இப்போது கௌதம் கார்த்திக்குடன் 'சிப்பாய்’, கார்த்தியுடன் 'கொம்பன்’ என்று அம்மணி ரொம்ப பிஸி!

''லட்சுமிமேனனை சிம்பிள் ஏஞ்சல்னு எல்லாரும் கொண்டாடுறாங்களே... இது எப்படி சாத்தியமாச்சு?''

'' 'கும்கி’ படம்தான் காரணம். பிரபு சாலமன் சார் அறிமுகம், எனக்குப் பெரிய அடையாளம். 'சுந்தர பாண்டியன்’, 'குட்டிப்புலி’, 'பாண்டிய நாடு’, 'நான் சிகப்பு மனிதன்’, 'மஞ்சப்பை’, 'ஜிகர்தண்டா’ன்னு தொடர்ந்து பல படங்கள்ல நடிச்சேன். நல்ல படங்கள் பண்ணா, மக்கள் என்னைக்கும் ஏத்துப்பாங்க. இப்போகூட நல்ல படங்கள்ல நான் இருக்கணும்னு ஆர்வமா இருக்கேன். லைஃப்ல இப்படி ஒரு படம் பண்ணணும்னு எல்லாருக்கும் ஓர் ஏக்கம் இருக்கும். அந்த ஏக்கத்தை நான் நடிக்குற ஒவ்வொரு படமும் போக்கிடுச்சு.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எந்த ஹீரோயின் மாதிரி நடிக்கப் பிடிக்கும்?''

''எனக்கு வித்யாபாலன் ரொம்பப் பிடிக்கும். 'டர்ட்டி பிக்சர்’, 'கஹானி’ன்னு தான் நடிச்ச படங்கள்ல வித்யாபாலன் தனியா தெரிஞ்சாங்க. அது மட்டும் இல்லாம, வித்தியாசமா நடிக்கணும்னு வித்யாபாலனை இப்போ நெறைய பேர் ஃபாலோ பண்றாங்க. 'பாபி ஜாசூஸ்’ படத்துக்காகப் பல கெட்டப்புகள்ல அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிரட்டுறாங்க.''

''எனக்கு பாய்ஃப்ரெண்ட்ஸ் அதிகம்!''

''லட்சுமிமேனன் இனி பயணிக்கப்போகும் பாதை எது? ஹோம்லி மல்லியா, கிளாமர் கில்லியா?''

''மாடர்ன் காஸ்டியூம்ஸ் எனக்கு செட்டாகாது. ஃபேஸ்புக்ல மாடர்ன் டிரஸ்ல இருக்குற போட்டோக்களை அப்லோடு பண்ணாகூட, 'உங்களுக்கு நல்லா இல்லை’ன்னு சொல்றாங்க. 'சேலை, தாவணிதான் உங்களுக்கு அழகு. அதையே ட்ரை பண்ணுங்க’ன்னு சொல்லும்போது நான் எப்படி மீற முடியும்? இப்போதைக்கு நான் ஹோம்லியாதான் நடிக்கப் போறேன்.''

''பாடகியாகணும்னு சொன்னீங்க. இப்போ அந்த ஆசை ஒரு வழியா நிறைவேறிடுச்சே?''

''ஆமாம். இமான் இசையில 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்துல நான் பாடினதும், ரொம்பச் சந்தோஷப்பட்டேன். அதுவும் கஷ்டப்படாம ஈஸியா பாடினதுக்குக் காரணம் என் அம்மாவும் பாட்டியும்தான். தேங்க்ஸ் டு இமான் சார்!''  

''எனக்கு பாய்ஃப்ரெண்ட்ஸ் அதிகம்!''

''ஃப்ரெண்ட்ஸை இப்போ ரொம்ப மிஸ் பண்றீங்களா?''

''ஆமாப்பா! சீனியர், ஜூனியர்னு என்னைச் சுத்தி எப்பவும் ஃப்ரெண்ட்ஸ்  இருந்துட்டே இருப்பாங்க. நெனைச்ச டைம்ல கட் அடிச்சு சுத்துவோம். எனக்கு பாய் ஃப்ரெண்ட்ஸ் அதிகம். ஆனா, இப்போ எங்கே சுத்தவும் டைம் இல்லை. ஐ ரியலி மிஸ் மை ஃப்ரெண்ட்ஸ்!''

''பாய் ஃப்ரெண்ட்ஸ் அதிகம்னா, காதல் தொல்லைகள் அதிகம் இருக்குமே?''

''அதான் இல்லை. உண்மையைச் சொல்ல ணும்னா இதுவரைக்கும் யாருமே என்கிட்ட நேர்ல காதலைச் சொன்னதில்லை. சின்ன வயசுல நான் அவ்ளோ அட்ராக்டிவ்வான பொண்ணா இருந்ததில்லை. என்னைவிட அழகான பொண்ணுங்க நெறையப் பேர் இருந்ததால எனக்கு லவ் சொல்லலையோ என்னவோ? ஆனா, எனக்குக் காதல் பிடிக் கும். அதுக்காகக் காதலிக்கணும்னு இல்லை. இப்போ எனக்குக் காதலிக்க நேரமும் இல்லை. ஃபேஸ்புக்ல என் பேர்ல நெறைய ஃபேக் ஐடி இருக்கு. ஆனா, அதை நான் கண்டுக்குறது இல்லை. என்னைப் பிடிக்கும் கிறதாலதானே இப்படிப் பண்றாங்கன்னு  பாசிட்டிவ்வா எடுத்துப்பேன். அது எனக்கு சந்தோஷம்தான்!''

''எனக்கு பாய்ஃப்ரெண்ட்ஸ் அதிகம்!''

''உங்ககூட நடிச்ச ஹீரோக்கள் பத்தி சொல்லுங்களேன்?''

''சசிகுமார் சார் எது நடந்தாலும் அலட்டிக்க மாட்டார். ஒண்ணும் பிரச்னை இல்லைன்னு ரொம்ப சப்போர்ட் பண்ணுவார். விக்ரம் பிரபுவும் நானும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். ரெண்டு பேரும் ஒரே படத்துல அறிமுகமானதால, பயம் இல்லாம பேசிப்போம். விமல் இருக்குற இடம் எப்பவும் கலகலன்னு இருக்கும். அவர் பக்கத்துல இருந்தா டைம் போறதே தெரியாது. ஆனா, கிளாப் அடிச்சு ஷாட் ரெடியானா சீரியஸ் ஆகிடுவார். சித்தார்த்தோட டை ஹார்ட் ஃபேன் நான். 'பாய்ஸ்’ படம் ரிலீஸ் ஆகும்போது நான் மூணாவது படிக்கிறேன். அப்போ நான் சித்தார்த்தை நேர்ல பார்ப்பேன்னு நெனைக்கலை. அவர்கூட நடிச்சது அதிசயமா, ஆச்சர்யமா இருக்கு. 'கும்கியில நல்லா பண்ணீங்க’ன்னு சித்தார்த் வாழ்த்தும்போது, அப்படியே வானத் துல பறக்குற மாதிரி இருந்துச்சு. எமோஷனல் சீன்ல இப்படி நடிச்சா நல்லா இருக்கும்னு அக்கறையா டிப்ஸ் தந்தார். விஷால் சீனியரா இருந்தாலும், ஃப்ரெண்ட் மாதிரி அன்பா பழகுவார். கௌதம் கார்த்திக் என் ஏஜ் குரூப்ல இருக்கிறதால, ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட். ஆனா, கௌதம் பெர்ஃபாமன்ஸ் பார்த்துட்டு தினம் தினம் பயந்துட்டு இருக்கேன். ஒவ்வொரு சீன்லயும் டபுள் எனர்ஜியோட நடிச்சு, பயங்கர டஃப் கொடுக்குறார்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism