தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நம்பர் ஒன் நடிகையாகக் கொடிகட்டிப் பறக்கிறார் சமந்தா. அழகாக இருக்கும் சமந்தாவின் மனசும் அத்தனை அழகு! நடித்தோம், சம்பாதித்தோம் என்று இருந்துவிடாமல், சம்பாதிப்பதில் சிறிதளவை சமூக சேவைகளுக்கும் செல விடுகிறார். 'பிரத்யுஷா ஃபவுண் டேஷன்’ என்ற அறக்கட்டளையை நிறுவி, புற்றுநோயால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கும் ஆதரவற்ற பெண்களுக்கும் உதவுகிறார் சமந்தா.

ஷூட்டிங்கின்போது தான் பயன்படுத்திய உடைகளை ஏலம் விட்டு, நிதி சேகரிக்கிறார். அது மட்டும் இல்லாமல், தெலுங்கு சினிமா முன்னணி ஹீரோக்களான பவன் கல்யாண், மகேஷ்பாபு போன்றவர்கள் ஷூட்டிங்கில் பயன்படுத்திய ஆடைகளையும் கலெக்ட் செய்து, அவற்றையும் ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் நிதியையும் அறக்கட்டளைக்குக் கொடுக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஹைதராபாத் தில்சுக் நகரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் காலை இழந்த ரஜிதா என்ற கல்லூரி மாணவிக்கு செயற்கைக் கால் பொருத்திக்கொள்ள ரூபாய் 2,30,000 தந்து உதவி செய்திருக்கிறார் சமந்தா.
சமர்த்துப் பெண்!