Published:Updated:

ராஜா சார் இசையில் ஒரு பாட்டு... ரஹ்மான் இசையில் ஒரு பாட்டு !

பு.விவேக் ஆனந்த் படங்கள்: வி.செந்தில்குமார்

ராஜா சார் இசையில் ஒரு பாட்டு... ரஹ்மான் இசையில் ஒரு பாட்டு !

பு.விவேக் ஆனந்த் படங்கள்: வி.செந்தில்குமார்

Published:Updated:

கர்னாடக சங்கீதத்தை உலகளவில் எடுத்துச் சென்றவர், சென்னையைத் தாய்வீடாகக் கொண்ட வயலின் வித்வான் எல்.சுப்ரமணியம். 500 ஆண்டு களுக்கும் மேலாக கர்னாடக இசையில் ஊறித் திளைத்து, ஓடும் குருதியிலும் நரம்புகளிலும் இசையைக் கொண்டது இவரது பரம்பரை. அவருடைய மகள் பிந்து சுப்ரமணியம் பெங்களூரில் வசிக்கிறார். சட்டத் துறையில் பட்டம் பெற்ற இவர், இப்போது தந்தையின் வாரிசாக, இசையுலகில் பரிமளிக்கிறார். பாடல்கள் எழுதியும், பாடியும் ஆல்பமாக வெளியிட்டிருக்கிறார். சமீபத்தில் இவர் தயாரித்து வெளியிட்டுள்ள 'சரண்டர்’ என்னும் ஆல்பம் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது.

ராஜா சார் இசையில் ஒரு பாட்டு... ரஹ்மான் இசையில் ஒரு பாட்டு !

''சட்டம் படித்த நீங்கள் இசைத் துறைக்குள் எப்படி நுழைந்தீர்கள்?'' என்று கேட்டதும், சிரிக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஏன்... சட்டம் படித்தால் பாடகராகக் கூடாதா, என்ன? அப்பா டாக்டர். ஆனால், இசைதானே அவர் விடும் மூச்சாக இருக்கிறது! அதேபோல், சட்டம் படிக்க வேண்டும் என்று சின்ன வயதில் இருந்தே எனக்கு ஆசை. பாட்டு என்பது தினமும் வீட்டில் கேட்டுக் கேட்டு, எனக்குள் ஊறிப் போன கலை. 12 வயதிலேயே அப்பாவுடன் நார்வே நாட்டில் மேடை ஏறிவிட்டேன். அப்போதிருந்தே உலக இசை பிரபலங்கள் பழக்கம். நான் இசைத் துறைக்கு வந்ததற்கு, அப்பாதான் முதல் காரணம். 'இசை சொல்லித் தரும் முறைகள்’ குறித்து இப்போது ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன். 'சபா அகாடமி’ என்ற பெயரில் குழந்தைகளுக்கான இசைப் பள்ளியையும் கடந்த ஏழு வருடங்களாக பெங்களூரில் நடத்தி வருகிறேன்.''

''உங்கள் இசைப் பள்ளி பற்றிச் சொல்லுங்களேன்..?''

''மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்த்துக்கொள்கிறோம். கர்னாடக சங்கீத வித்வான்கள் மட்டுமின்றி, அப்பாவுக்குப் பழக்கமான மற்ற நாடுகளைச் சேர்ந்த இசைப் பிரபலங்களையும் நட்பின் அடிப்படையில் அழைத்து, அவ்வப்போது பயிற்சி கொடுக்கிறோம். சங்கீதத்தை எளிமையாகச் சொல்லித்தர வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். அப்பாவுடன் இணைந்து இதுபற்றி ஒரு புத்தகம்கூட எழுதியிருக்கிறேன். வெறும் சங்கீதம் மட்டுமில்லாமல், குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக யோகா போன்ற நல்ல விஷயங்களையும் சொல்லித்தருகிறோம். 'நாமும் பாடுகிறோம்’ என்று உணரும் அந்தக் குழந்தைகள் முகத்தில் வரும் பாருங்கள், ஒரு மலர்ச்சி! அப்போது நாம் அடையும் மகிழ்ச்சி, எந்த விருது கிடைத்தாலும் கிடைக்காதது!''

''தொலைக்காட்சியில் நடத்தப்படும் 'ரியாலிட்டி மியூஸிக் ஷோ’க்களுக்கு, உங்கள் மியூஸிக் ஸ்கூலில் இருந்து குழந்தைகளைத் தயார் செய்து அனுப்புகிறீர்களா?''

''நிச்சயமாக இல்லை. டிவி ஷோக்களுக்கு அந்தக் குழந்தைகளை நாங்கள் அனுமதிப்பது இல்லை. என் மகளைக்கூட அதுபோன்ற ஷோக் களுக்கு அனுப்ப மாட்டேன். குழந்தைகள் படிப்பைவிட்டு, பள்ளியைவிட்டு இரண்டு மணி நேரம் மேக்கப் போட்டுக் காக்க வைத்து, ஜட்ஜ் முன் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் ஷோக்களுக்கு குழந்தைகள் செல்வதை நான் விரும்பவில்லை. பருவத்தில் ஏற்படும் உணர்வுகள் சம்பந்தப்பட்ட பாடல்களை, அதற்குரிய உணர்சிகளோடு, முகபாவனை எல்லாம் செய்து குழந்தைகள் பாடுவதை நான் ஊக்குவிக்க மாட்டேன். பதின்பருவத்தில்தான் ஓரளவு வெற்றி, தோல்வி குறித்த பக்குவம் வரும். அதனால் 14 வயதுக்கு மேல் டிவி ஷோக்களில் பங்கேற்கலாம்.''

ராஜா சார் இசையில் ஒரு பாட்டு... ரஹ்மான் இசையில் ஒரு பாட்டு !

''சினிமாவில் பாடுவீர்களா?''

''கண்டிப்பாக. பாலிவுட்டைவிட கோலிவுட்டில் பாட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ராஜா சார் இசையிலும் ரஹ்மான் சார் இசையிலும் தலா ஒரு பாட்டாவது பாடிவிட வேண்டும் என்று ஆசை. ஆனால், எனது லட்சியம் எல்லாம் 'ஃப்யூஷன்’ (fusion) வகைப் பாடல்கள் கொண்ட தரமான ஆல்பம் வெளியிட வேண்டும் என்பதுதான். அண்ணன் அம்பியுடன் இணைந்து இப்போது 'சுப்ரமேனியா’ என்ற பேண்டைத் துவங்கியிருக்கிறேன். அடுத்த வருடத் தொடக்கத்தில் ஒரு ஆல்பம் ரிலீஸ் பண்ணத் திட்டமிட்டிருக்கிறேன்.''

''அப்பா இப்போது என்ன செய்கிறார்?''

''அப்பாவுக்கு கர்னாடக இசையை உலகளவில் பரப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான். இதுவரை நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, ஏகப்பட்ட கச்சேரிகள் செய்திருக்கிறார். இப்போது இன்னும் புதுமையாக உலக அளவில் உள்ள மற்ற இசை நண்பர்களையும் இணைத்து பல்வேறு நாடுகளில் கச்சேரிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்.''

''சுனாமி நிவாரண நிதிக்காக அப்பாவுடன் இணைந்து டெல்லியில் கச்சேரி நடத்திய அனுபவம் குறித்து சொல்லுங்களேன்...''

''அது நடந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டன. ஒட்டுமொத்த பிரபல இசை வித்வான்களையும் அப்பா அப்போது மேடையேற்றினார். அதில் நானும் கலந்துகொண்டதைப் பெருமையாகக் கருதுகிறேன். 50 நாடுகளுக்கும் மேலே சுற்றுப்பயணம் செய்து கச்சேரிகள் நடத்தியிருந்தாலும், என் நினைவில் நீங்காத கச்சேரி அது. ரிகர்சலுக்காக வந்திருந்த

பிரபல இசை வித்வான்கள் அனைவருமே சுனாமி துயரத்தால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார்கள்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism