Published:Updated:

''என் லைஃப்ல காதலுக்கு இடம் இல்லை!''

சினிமா: க.நாகப்பன்

''என் லைஃப்ல காதலுக்கு இடம் இல்லை!''

சினிமா: க.நாகப்பன்

Published:Updated:

பிந்து மாதவி... அக்கட பூமியில் இருந்து வந்திருக்கும் அழகு மயில். 'சில்க் மாதிரி உங்க கண்ணு அழகா இருக்கு’ என்று சொன்னால், செம குஷியாகிவிடுகிறார். விஷ்ணுவுக்கு ஜோடியாக 'கலக்குற மாப்ளே’ படத்திலும், தினேஷுக்கு ஜோடியாக 'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்திலும், அசோக் செல்வனுடன் ஒரு படத்திலும் நடிக்கிறார்.

''என் லைஃப்ல காதலுக்கு இடம் இல்லை!''

''விஜய், அஜித்கூட நடிப்பீங்கன்னு பார்த்தா இன்னமும் விமல், விஷ்ணு கூடவே நடிச்சுக்கிட்டு இருக்கீங்களே?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சினிமாவைப் பொறுத்தவரை சக்சஸ்தான் ஹீரோயின்களின் மார்க்கெட்டை நிர்ணயிக்குது. அந்த வகையில் நான் நடிச்ச பல படங்கள் தொடர்ந்து ஹிட்டாச்சு. ரொமான்ஸ் மட்டும் இல்லாம பெர்ஃபார்மன்ஸ் ரீதியாவும் சில படங்கள்ல நடிச்சிருக்கேன். ஆனா, எவ்ளோ நல்லா பெர்ஃபாமன்ஸ் பண்ணாலும், பெரிய ஹீரோக்களோடு நடிக்கும்போதுதான் ஹீரோயின்கள் கவனிக் கப்படுறாங்க. நானும் அஜித், விஜய் மாதிரி பெரிய ஹீரோக்களோடு நடிக்க ஆர்வமாதான் இருக்கேன். வாய்ப்பு வந்தா கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டேன். அதே சமயம், எனக்குத் திருப்தி தர்ற படங்கள்ல நடிக்குறதும் பிடிக்கும்.''

''என் லைஃப்ல காதலுக்கு இடம் இல்லை!''

''வழக்கமான ஹீரோயினாதான் நடிப்பீங்களா?''

''அரசியாக நடிக்கணும்னு ஆசை இருக்கு. குறிப்பா, வாள் சண்டை போடணும். அப்படி ஒரு கேரக்டர் கிடைச்சா சம்பளம் பத்தி மூச்சுகூட விடமாட்டேன். நடனத்தை மையமா வெச்சு எடுக்கும் படத்துல நடிக்க ஆசை. படம் முழுக்க டான்ஸ் ஆடிக்கிட்டே நடிக்க லாம்ல. இப்போ 'எத்தன்’ சுரேஷ் டைரக்‌ஷன்ல 'கலக்குற மாப்ளே’ படத்துல நடிக்குறேன். இதுல நான் துடிப்பான போலீஸ் அதிகாரியா நடிச்சிருக்கேன். போலீஸ் டிரெஸ்ல என்னைப் பார்க்கவே புதுசா இருக்கும்.''

''விஜய், அஜித், விக்ரம், சூர்யா இவங்க தான் சூப்பர் ஸ்டார் ரேஸில் இருக்காங்க. நீங்க யார்கூட நடிக்க ஆசை...?''

''அஜித்துக்கு நான் தீவிர ரசிகை. அஜித் படம் ரிலீஸ் ஆகும்போது, ஏதோ ஒரு தியேட்டர்ல, முதல் ஷோவில் விசிலடிச்சுப் படம் பார்ப்பேன். ஒரு படத்துலயாவது அஜித்துக்கு ஜோடியா நடிச்சிடணும். மத்தபடி எல்லா ஹீரோக்களும் பிடிக்கும்.''

''என் லைஃப்ல காதலுக்கு இடம் இல்லை!''

''மறக்க முடியாத பாராட்டு?''

'' 'சட்டம் ஒரு இருட்டறை’ ஷூட்டிங்ல விஜய் ஸ்பாட்டுக்கு சர்ப்ரைஸ் தந்தார். அப்போ டூயட் ஷூட் நடந்தது. ஒவ்வொரு ஸ்டெப்பா நான் டான்ஸ் ஆட, விஜய் சார் முன்னாடி நின்னு பார்த்துக்கிட்டு இருந்தார். அவரைப் பார்த்ததும் என்னால டான்ஸ் ஆட முடியலை. 'சார்... நீங்க இருந்தா டான்ஸ் ஆடத் தயக்கமா இருக்கு’ன்னேன். 'அதெல்லாம் சும்மா.. ஆடுங்க’ன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னார். என் டான்ஸைப் பார்த்துட்டு சூப்பர்ன்னு பாராட்டினார். என் சினிமா கேரியர்ல மறக்க முடியாத பாராட்டு அது.''

''நீங்கள் பார்த்து பொறாமைப்படும் நடிகை?''

''அனுஷ்கா. அவங்க ஸ்க்ரீன்ல வரும்போது ஒரு பரபரப்பு வந்துடும். சூப்பர் ஹீரோயின். உயரம், கலர், சிரிப்பு என எல்லாமே பிடிக்கும். ஹீரோக்கள் ஒவ்வொருத்தருக்கும் அனுஷ்காவுடன்  படம் நடிக்க ஆசை இருக்கு. அதான் அனுஷ்காவின் வெற்றி ரகசியம். 'பாஹுபாலி’, 'ருத்ரம்மா தேவி’ ரெண்டு படங்களையும் பார்க்க ஆர்வமா இருக்கேன்.''

''என் லைஃப்ல காதலுக்கு இடம் இல்லை!''

''லட்சியம்?''

''எல்லா படங்கள்லயும் நடிச்சிட்டுப் போக ஆசை இல்லை. ஆனால், பிந்துமாதவி நடிச்சா அந்தப் படம் கொஞ்சம் ஸ்பெஷலாக மாறணும். ஹீரோயின்ங்கிறதைத் தாண்டி எல்லோரையும் இம்ப்ரஸ் பண்ணணும். அண்ணன் சாகர் பெயர்ல, ஒரு டிரஸ்ட் உருவாக்கி ஏழைக் குழந்தைகளைப் படிக்க வெச்சு ஐ.ஏ.எஸ் ஆக்கணும்.''

''என் லைஃப்ல காதலுக்கு இடம் இல்லை!''

''பிந்துமாதவிகு எப்போ லவ் ஜுரம் வரும்? ''

''நான் ரொம்ப ஜாலி டைப்! யாரா இருந் தாலும் ஈஸியா பழகிடுவேன். எனக்கு ஏகப் பட்ட ஃப்ரெண்ட்ஸ். ஆனா, காதல் இல்லை. காலேஜ் படிக்கும்போது ஒரு காதல் இருந்தது. அது ஃபெயிலியர் ஆகிடுச்சு. அந்தக் காதல் எனக்கு நிறையப் புரிதலைக் கொடுத்திருக்கு. தப்பான நேரத்துல, தப்பான ஆள்கிட்ட காதல் வந்துடக்கூடாதுங்கிறதுல தெளிவா இருக்கேன். இப்போதைக்கு என் லைஃப்ல காதலுக்கு இடம் இல்லை.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism